உலகம் விழுந்து போதல் Jeffersonville, Indiana, USA 62-1216 1மிக்க நன்றி, சகோ நெவில். காலை வணக்கம், நண்பர்களே. இன்று காலை படுக்கையில் சற்று நேரம் புரண்டு விட்டு, படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. எனவே எனக்கு சிறிது களைப்பாயுள்ளது. அது எதிர்பாராத விதமாக நேர்ந்துவிட்டது. முழு சுவிசேஷ வர்த்தகக் குழுவின் தலைவரான சகோ. ஷகரியானின் மனைவி நோய் வாய்ப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள். அதைப் பெற்றுக் கொள்ள... (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி ) உங்களுக்கு மார்ஃபியஸ் யாரென்று தெரியாவிட்டால், அவன் ரோம் நாட்டு அஞ்ஞான தேவன் - உறக்கத்தின் தேவன். இன்று காலை என் தொண்டை சிறிது கரகரப்பாயுள்ளதற்காக என்னைப் பொறுத்துக் கொள்ளுங்கள். உங்களை நீண்ட நேரம் பிடித்து வைக்காமலிருக்க பிரயாசப்படுகிறேன். 2இன்று காலை நான் ஆராதனையை வைத்த நோக்கம் என்னவெனில்... ஜனங்களே, அடுத்த ஞாயிறு என் கிறிஸ்துமஸ் செய்தியை அளிக்கலாமென்று உத்தேசித்திருந்தேன். அவ்வாறு நான் செய்ய நேர்ந்தால், அது நகரத்துக்குப் புறம்பேயுள்ளவர்களை கொண்டு வந்து அவர்களுடைய கிறிஸ்துமஸை பாழாக்கிவிடும் - அவர்கள் திரும்பிச் செல்லவேண்டும். எனவே இன்று காலை நாம் ஒன்று கூடி இந்த விதமாக கர்த்தரை ஆராதித்து, இதை என் கிறிஸ்துமஸ் ஆராதனையாக கருதுவது சிறந்தது என்று எண்ணினேன். அடுத்த ஞாயிறு நீங்கள் உங்கள்... நீங்கள் அதிக தொலைவில் வசிப்பவர்களாக இருந்தால், உங்களுக்கு சொந்தமான சபைக்கு செல்லலாம், அல்லது உங்களுக்கு விருப்பமானதைச் செய்யலாம். 3அந்த அழகான பாடலுக்காக அந்த சகோதரனுக்கு நன்றி கூற விரும்புகிறேன். அதை அவர் பாடிக் கொண்டிருந்தபோது, நான் உள்ளே நுழைந்தேன். அது உண்மையில் நன்றாயிருந்தது. என் மனைவியும் மற்றவர்களும் எப்பொழுதும் இந்த சகோதரனின் பாடும் திறனைக் குறித்து பெருமையாகப் பேசிக் கொள்வதை நான் கேட்டிருக்கிறேன். ஆனால் அவர் பாடுவதை முதன் முறையாக நான் கேட்டது இந்த கூடாரத்துக்கு வெளியேதான். அது வினோதமாயுள்ளது அல்லவா? நமது சகோதரன் இக்கூடாரத்தைச் சேர்ந்தவர். இருப்பினும் அவர் பாடுவதை முதன் முறையாக கேட்க நான் லூசியானாவிலுள்ள ஷ்ரீவ் போர்ட்டுக்கு செல்ல வேண்டியிருந்தது. காரியங்கள் எவ்வளவு விசித்திரமாயுள்ளன, அல்லவா? இப்படி செய்வதனால், நாம் ஒன்று கூடுவதற்கு அது ஒரு தருணத்தை நமக்களிக்கும் என்று எண்ணினோம். ஆனால் சாலைகள் மிகவும் மோசமாயுள்ளன. சகோதரன் மற்றும் சகோதரி டௌ ஓஹையோவிலிருந்து இங்கு அடைய முடிந்ததா என்று தெரியவில்லை. அவர்கள் வந்து சேர்ந்தார்களா? சகோ. டெள். நீங்கள் எங்கேயிருக்கிறீர்கள்? ஆம், ஆம். நான் வியந்து கொண்டிருந்தேன். அங்கு அதிக பனிக்கட்டி உறைந்துள்ளதா? சரி, சின்சின்னாட்டியில் பனிக்கட்டி உறைந்துள்ளதா? சரி, சின்சின்னாட்டியில் பனிக்கட்டி (Snow) சிறிதும் கூட பெய்யவில்லை. இங்குள்ள அளவுக்கும் கூட அங்கில்லை. அங்கு பனிக்கட்டியே பெய்யவில்லை. நேற்றுதான் முதன்முறையாக சின்சினாட்டியில் பிரசங்கித்தேன். எங்களுக்கு அது கம்பீரமான நாளாக இருந்தது. அது ஒரு புதிய ஐக்கியம். அது ஆரம்பித்து ஒரு ஆண்டு கூட முடியவில்லை, அது மிகவும் அருமையான சங்கம். சில அருமையான மக்களைக் கொண்டது. அந்த ஐக்கியத்தை நாங்கள் மிகவும் ரசித்தோம். வேறொரு ஐக்கியத்தை பிரதிஷ்டை செய்ய நாளை நான் கொலம்பஸுக்குச் செல்ல வேண்டுமென்று இப்பொழுது தான் என்னை தொலைபேசியில் கேட்டுக்கொண்டனர். அங்கு சகோ. ஷகரியான் ஆராதனை நடத்துவார். ஆனால் நான் முதலில் ஜெபம் செய்து அதை துவக்கி வைக்க வேண்டும். அது ஒரு... 4இதற்குப் பின்பு உடனடியாக நான் பீனிக்ஸக்குச் செல்ல வேண்டும். அங்கு எங்களுக்கு... நாங்கள் பன்னிரண்டாம் தேதியன்று பீனிக்ஸில் துவங்குகிறோம், அது வர்த்தகரின் காலை உணவுக் கூட்டம். அது எங்கு நடக்குமென்று எனக்குத் தெரியாது. அது ரமாதா சத்திரத்தில் நடக்குமென்று நினைக்கிறேன். வர்த்தகரின் சங்கம் வழக்கமாக காலை உணவு கூட்டத்தை அங்கு தான் நடத்துகின்றனர். பிறகு ஞாயிறன்று நான் புறப்பட்டு, ஏறக்குறைய பனிரெண்டு நாட்கள் மாரிகோபா பள்ளத்தாக்கு, பீனிக்ஸ், டூசான் என்னும் இடங்களுக்குச் செல்வேன். வரும் திங்களன்று இரவு டூசானில் எனக்கு ஒரு விருந்து உள்ளது - போதகர்களுடனும், டூசானிலுள்ள முழு சுவிசேஷ வர்த்தகர்களுடனும் ஒரு விருந்து. அங்கிருந்து பீனிக்ஸ க்கு வருவேன் - கிளன்டேலிலும் மற்ற இடங்களிலும் என்று நினைக்கிறேன். அதன் பிறகு கன்வென்ஷன் இருபத்து... சகோ. ஃபிரட், (Bro. Fred) அது எப்பொழுது என்று உங்களுக்கு ஞாபகமுள்ளதா?... இருபத்து நான்காம் தேதி. இருபத்து நான்கு துவங்கி இருபத்தெட்டு அல்லது இருபத்தொன்பது முடிய, ஏதோ ஒன்று. பிறகு கர்த்தருக்குச் சித்தமானால், நாங்கள் வீடு திரும்புவோம். நாம் இங்கு எவ்வாறு முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்று பார்த்து, ஏழு முத்திரைகளைக் குறித்து பார்த்து... அப்பொழுது முதல், அங்கிருந்து எங்கு சென்றுள்ளோம் என்பதைக் காண்போம். 5பிரதிஷ்டைக்காக இன்று காலை சில குழந்தைகள் உள்ளதாக யாரோ என்னிடம் கூறினாரென்று நினைக்கிறேன். அதுசரியா? பிரதிஷ்டைக்காக எந்த தாயிடமாவது குழந்தை உள்ளதா? டாக் (Doc) என்னிடம் கூறினார். நல்லது, ஒருக்கால் நான் தவறாயிருக்கலாம். ஓ, ஆம், ஆம், ஆம். ஆம், ஐயா. இந்த குழந்தைகள். சரி. சகோதரிகள்; அல்லது சகோதரராகிய நீங்கள் உங்கள் குழந்தைகளை மேலே கொண்டு வருவீர்களா? நன்றி, சகோதரியே. குழந்தைகளைக் கொண்டு வர இது மிகவும் பொருத்தமான நேரம் என்று நினைக்கிறேன். இது கிறிஸ்துமஸ் சமயம். சகோ. நெவில், நீங்கள் வருவீர்களா? இந்த அருமையானவர்கள் தங்கள் குழந்தைகளைக் கொண்டு வரும் இந்நேரத்தில், இது... பலர், அநேக சபைகளில், நேற்று நடந்த கன்வென்ஷன் கூட்டத்துக்கு நீங்கள் வந்திருப்பீர்களானால், பரிசுத்த ஆவியினால் நிறைந்த அந்த எபிஸ்கோபலியன், சகோ. பிரவுன் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்து வந்ததற்காக அங்கு பெந்தெகொஸ்தே விசுவாசிகளிடம் மன்னிப்பு கேட்டார். அவரிடம் செய்யக் கூறினதை அவர் செய்தார். எபிஸ்கோபலியர்கள் தெளித்தல் ஞானஸ்நானம் கொடுக்கின்றனர், அவர்கள் அதை ஞானஸ்நானம் என்றழைக்கின்றனர். ஞானஸ்நானம் (Baptize) என்றால், ''மூழ்குதல், கீழே செல்லுதல், அடக்கம் பண்ணப்படுதல்“ என்று பொருள். 6ஆனால் அநேகர் தெளிக்கின்றனர். அது பழைய... உண்மையில் அது கத்தோலிக்க சபையில் தோன்றின ஒரு ஒழுங்கு. அது மெதோடிஸ்டு, எபிஸ்கோபலியர், லூத்தரன்களிடம் கொண்டுவரப்பட்டது. அவர்களில் அநேகர் அப்படி செய்கின்றனர். மெதோடிஸ்டுகள் அவ்வாறு செய்கின்றனர். மெதோடிஸ்டு சபைக்கும் நசரேயன்களுக்குமிடையே பிரிவினை உண்டாக்கினதே குழந்தை ஞானஸ்நானம் தான். நசரேயன்கள் எல்லா வகையிலும் மெதோடிஸ்டுகளே, ஆனால் குழந்தை ஞானஸ்நானத்தில் மாத்திரம் கருத்து வேறுபாடு கொண்டவர்கள். அதன் காரணமாகவே அவர்கள் அதை விட்டு வெளியேறினர். கிறிஸ்தவ சபையும் (The Church of Christ) சபையிலுள்ள இசையைத் தவிர்த்து, ஒரு கிறிஸ்தவ சபையே. எனவே ஓ, இத்தகைய சிறு விவகாரங்கள் பிரிவினையுண்டாக்கி சகோதரத்துவத்தை முறித்துப் போடுகின்றன. நாம் அனைவரும் கிறிஸ்துவுக்குள் ஒன்றாயிருக்கிறோம். நீங்கள் சபையைச் சேர முடியாது. நீங்கள் ஒரு விடுதியைச் சேரலாம். ஆனால் சபையைச் சேர முடியாது. நீங்கள் சபையில் பிறக்க வேண்டும். அது ஆவிக்குரிய பிறப்பு. வெவ்வேறு சபைகள் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளன, நாமும் அவைகளை ஆதரிக்கிறோம். அதனால் பரவாயில்லை. 7ஆனால் இக்கூடாரத்திலுள்ள நாங்கள், வேதம் என்ன செய்யக் கூறுகிறதோ, அதன் வழியில் அப்படியே நிலைத்திருக்க விரும்புகிறோம்... குழந்தை ஞானஸ்நானத்தை ஆதரிக்கும் ஒரு வசனம் கூட வேதத்தில் கிடையாது. எனவே வேதத்திலுள்ள ஒரே வசனம் இயேசு கூறினது மாத்திரமே. அவரே நமது உதாரணம். சிறு பிள்ளைகளை அவர்கள் அவரிடத்தில் கொண்டு வந்த போது, அவர் தமது கைகளை அவர்கள் மேல் வைத்து அவர்களை ஆசீர்வதித்து, “சிறு பிள்ளைகளை என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதீர்கள்; பரலோக ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது'' என்றார். நாங்கள் அதே முறையை தொடர்ந்து கடைபிடிக்க விரும்புகிறோம். 8போதகரும் நானும் எங்கள் கைகளை இந்த குழந்தைகளின் மேல் வைக்கும்போது, நமது கர்த்தரின் கரங்களுடன் அவை எந்த வகையிலும் ஒப்பிடப்பட முடியாது என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். ஏனெனில் அவருடைய கரங்கள் பரிசுத்தமானவை. ஆனால் இன்று காலை, ஒரு பரிசுத்த கரத்தைக் கண்டுபிடிக்க அவர் உலகம் முழுவதும் தேடுவாரானால் அவரால் அதை எங்கு கண்டுபிடிக்க முடியும்? உலகத்தில் அப்படிப்பட்ட ஒன்று கிடையாது. ஆனால் அவருடைய கிருபையினால் நாம் அவருக்குப் பிரதிநிதிகளாயிருக்கிறோம். இங்குள்ள பிள்ளைகளை நாங்கள் பிரதிஷ்டை செய்து, எங்கள் கரங்களை அவர்கள் மேல் வைத்து, இந்த ஜனங்களுக்கு அவர் அளித்துள்ள பிள்ளைகளுக்காக நாங்கள் ஜெபத்தையும் நன்றியையும் ஏறெடுக்கிறோம். நீங்கள் பாதையில் செல்லும் போது இவர்கள் உங்கள் வீட்டில் சிறு மலர்களாக உங்கள் வழியைப் பிரகாசப்படுத்த உதவுவார்களாக! அவர்கள் தேவனுடைய கட்டளைகளில் வளர்க்கப்படுவார்களாக! நாளை ஒன்று இருக்குமானால், இந்த சிறுபிள்ளைகள் தேவனுடைய ராஜ்யத்தில் மகத்தான ஊழியக்காரர்களாக விளங்கி... என்பதே எங்கள் உத்தமுமான ஜெபமாயிருக்கிறது. அது சரி. 9கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. நாம் பார்ப்போம். இதோ கருப்பு மயிரைக் கொண்ட இந்த சிறு பையனுடன் நாம் ஆரம்பிக்கலாம் என்று நான் நம்புகிறேன்..?... இவன்... ஓ, என்னே, இந்த சிறு குழந்தையை கையில் ஏந்த என் மனைவி இங்கே இருந்தாக வேண்டும். இவர்களை நசுக்கி உடைத்துவிடுவேனோ என்று எப்பொழுதுமே எனக்கு பயம் உண்டு. பாருங்கள்? என்னே, அழகான சிறு பையனாக இவன் இருக்கின்றான். எப்படி இருக்கிறாய்? என்ன ஒரு பொருத்தமான தருணம், ஒரு மாட்டு தொழுவத்தில் ஒரு குழந்தை காணப்பட்டது; கிறிஸ்துமஸ் சமயத்தில் குழந்தைகளை திரும்பவுமாக தேவனிடம் பிரதிஷ்டை செய்தல். இவனுடைய பெயர் என்ன? சாமுவேல் தாமஸ். இது மிகவும் அருமையான ஒரு பெயராகும். நம்முடைய தலைகளை நாம் தாழ்த்துவோமாக. எங்கள் பரலோகப் பிதாவே, மகிழ்ச்சிமிக்க இந்த தம்பதியர் இக்காலை வேளையில், நீர் தாமே இவர்களுடைய இணைப்பில் இணைத்த இந்த சந்தோஷமிக்க, சிறிய சாமுவேல் தாமஸ்ஸுடன் வருகையில், பிதாவாகிய தேவனே, இந்த குழந்தையை நீர் தாமே ஆசீர்வதிக்கும்படிக்கு நாங்கள் ஜெபிக்கின்றோம். இக்காலையில் உம்முடைய சமுகத்தில், உம்முடைய காணக்கூடாத பரிசுத்த கரங்கள் தாமே இக்குழந்தையை ஆசீர்வதிக்க நாங்கள் உயர்த்துகையில் இக்குழந்தை, கர்த்தாவே, ஜீவிக்கத்தக்கதாக இருக்கட்டும். நாளை என்ற ஒன்று இருக்குமானால், தேவனுடைய ராஜ்யத்திற்கென்று ஒரு மகத்தான பணியாளனாக இக்குழந்தை இருப்பதாக. அதனுடைய பெற்றோர்களை ஆசீர்வதியும். இப்பொழுதும் பிதாவே, இந்த சிறிய சாமுவேல் தாமஸை, தேவனுடைய ராஜ்யத்திற்கென்று ஒரு அர்ப்பணிக்கப்பட்ட ஜீவியம் செய்ய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உம்மிடம் நாங்கள் அளிக்கிறோம். ஆமென். உங்களையும் குழந்தையும் தேவன் ஆசீர்வதிப்பாராக. நீங்கள் மகிழ்ச்சியுடையவர்களாக இருங்கள். உங்கள் பிரயாணம் முழுவதுமாக ஒரு பிரகாசமான சிறு காரியமானது இருப்பதாக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பார். 10இப்பொழுது, இந்த சிறிய...?... இந்த மொழியை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இது என்ன - இது என்ன - நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்பதை நானறிவேன், “ஆனால் அதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சில காலத்திற்கு முன்னர் நான் ஜெர்மனியில் இருந்தபோது, என்னால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. ஆனால், இங்கே ஜெர்மனி மக்களாகிய உங்களைக் குறித்த காரியம் என்னவெனில்... ஒன்று கூட, என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, நான் தெருவில் சென்று கொண்டிருந்த போது ஒரு பெண் குழந்தையை துணியால் சுற்றிக் கொண்டிருந்தாள், அக்குழந்தை ஆங்கிலத்தில் அழுது கொண்டிருந்தது'' என்றேன். நான் நினைக்கிறேன் அவள் மிகவுமாக...?... நான் திரும்பவுமாக வந்த போது கூடையில் வைத்த மாதிரி...?... அலிஷியா கே கார்லைல். அலிஷியா கே கார்லைல், அது ஒரு அழகான பெயராகும். அது எனக்கு பிடிக்கும். அந்த சிறு சகோதரியை இங்கே நீங்கள் கொண்டு வருவீர்களா? ம்ம்ம்ம். ஓ, சகோதரியே, உன்னுடைய கையை நான் பிடித்துவிட்டேனா? இப்பொழுது, உங்களுக்குத் தெரியுமா, இஸ்ரவேல் தங்களுடைய பலியைக் கொண்டு வந்த போது (அதைக் குறித்து நேற்று நான் பிரசங்கித்தேன்) பலிபீடத்திற்கு கொண்டு வந்த போது (பாருங்கள்?) தங்கள் கைகளை அதன் மீது வைத்தார்கள், ஏனெனில் அவர்கள் தங்களை அவர்களுடய பலிகளோடு அடையாளப்படுத்திக் கொண்டனர். உங்கள் குழந்தையோடு உங்களை அடையாளப்படுத்துகிறது, அது...?... நாம் நம்முடைய கரங்களை இதன் மீது வைத்து, இந்த சிறு அலிஷியா கே...?... கார்லைலுக்காக தேவனுடன் ஜெபத்தில் நம்மைத் தாமே அடையாளப்படுத்திக் கொள்வோமாக. எங்கள் பரலோகப் பிதாவே, இந்த குடும்பத்திற்கு அளிக்கப்பட்டுள்ள இந்த மகிழ்ச்சியை, இந்த சிறு சீமாட்டியை உம்மிடமாக உயர்த்துகிறோம்; இக்காலையில் என் கரங்களில் ஏந்தியுள்ள இந்த அழகான சிறு குழந்தையை, இந்த சிறு பெண் குழந்தையை ஆசீர்வதியும் கர்த்தாவே. தாய் இந்தக் குழந்தையை கொண்டு வருகையில்... நீர் தாமே இவளிடம் இதை அளித்தீர், இப்பொழுது இவள் அதை உம்மிடம் அளிக்கின்றாள். தேவனுடைய கட்டளையில் தன் பிள்ளை வளர்க்கப்பட வேண்டும் என்ற இவளுடைய விசுவாசத்தையும் வாஞ்சையும் இது காண்பிக்கிறது கர்த்தாவே. கர்த்தாவே, இவளை ஆசீர்வதியும், இது தாமே ஒரு நீண்ட சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து, நாளை என்ற ஒன்று இருக்குமானால், நாளை உமக்கு மகத்தான ஒரு ஊழியம் செய்பவளாக இருக்கட்டும். இது எந்த வீட்டிலிருந்து வருகிறதோ அந்த வீட்டை ஆசீர்வதியும். கர்த்தாவே இதை அருளும். இப்பொழுதும் கர்த்தாவே இந்த அருமையான சிறு பெண் குழந்தையை பிரதிஷ்டையில் உம்மிடம் நாங்கள் அளிக்கிறோம், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். இப்பொழுது, இது அருமையான குழந்தை அல்லவா. பூமியிலே ஒவ்வொரு தாயினுடைய குழந்தையும் அழகானது என்று உங்களுக்குத் தெரியுமா. அது சரியே, அப்படித்தானே? தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக... மிகவும் இனிமையான அருமையான சிறிய குழந்தையாகும். இது என்னை கவனித்துக் கொண்டே இருக்கிறது. இப்பொழுது, என்னுடைய கரத்தை...?... 11இப்பொழுது, எப்படியிருக்கிறாய் நல்லது, இவளும் ஒரு அழகான சிறு பெண் ஆவாள். இவளுடைய பெயர் என்ன? லேதா... அலேதா ஆன்-லிசா ஆன் ஃபார்மர். என்னே, என்ன அழகான ஒரு குழந்தை. லிசா, என்னிடமாக நீ வருவாயா? நீ... அது அருமையானதாகும். இப்பொழுது, இதுவும் ஒரு அழகான குழந்தையாகும். இவளும் நோக்கி பார்க்கிறாள்...?... லிசா, சபைக்கு வர உனக்கு விருப்பமா? நம்முடைய கர்த்தர் இப்படிப்பட்ட தம்முடைய சிறியவர்களை கரங்களில் ஏந்தினதை நான் கற்பனை செய்து பார்க்கிறேன்...?..., சகோதரியே. நீங்கள் எல்லாரும் இப்பொழுது நின்று கொண்டிருக்கிறீர்கள், நான் உணர்வது... நான் என்ன கூற விழைகிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா? ஒரு விவாகம் என்பது இல்லை, ஒரு பிரதிஷ்டை என்பது என்ன? நீங்கள் தேவனுடைய பாதையில் நின்றுக் கொண்டிருக்கிறீர்கள்...?... என்னை மெய்சிலிர்க்கச் செய்கின்றது. நம்முடைய தலைகளை தாழ்த்துவோமாக. ஓ, தேவனே, இந்த சிறிய லிசாவுடன் நாங்கள் இக்காலையில் வருகிறோம். லிசாவையும் அவள் வாழ்க்கை முழுவதுமாக செய்யப்படுகின்ற எல்லாமும் நீர் தாமே ஆசீர்வதிக்கும்படியாக நாங்கள் ஜெபிக்கிறோம். பரலோகப் பிதாவே, இவள் தாமே ஒரு நீண்ட சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வாளாக. இவளுடைய பெற்றோரை ஆசீர்வதியும். கர்த்தாவே இவள் தாமே தேவனை போற்றி, நேசிக்கத்தக்கதாக வளர்க்கப்படட்டும். நாளை என்ற ஒன்று இருக்குமானால், தேவனுடைய ராஜ்யத்தில் இவள் தாமே பணியாளியாக இருக்கத்தக்கதாக நான் ஜெபிக்கிறேன். இவள் பிரயாணப் படுகையில் வியாதி மற்றும் காரியங்களை இவளிடமிருந்து அப்புறப்படுத்தும். உம்முடைய ராஜ்யத்திலே இவளை ஒரு மகத்தான ஆசீர்வாதமாகச் செய்யும். இந்த சிறு பிள்ளையை பிரதிஷ்டையில் உம்மிடமாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் அளிக்கிறோம். ஆமென். அருமையான அழகான குழந்தை. 12ஓ, நான் சிறு குழந்தைகளை நேசிக்கிறேன். ஆனால் நான் அவர்களை சரியாக கையாளமாட்டேனோ என்கின்ற பயம் எப்பொழுதும் எனக்கு உண்டு. என் மனைவி என்னிடம், ''நீங்கள் உடைத்துப் போடுகின்ற அளவிற்கு குழந்தைகள் மிருதுவானது அல்ல, தெரியுமா'' என்று கூறினார்கள். அது சரி. அவை மிகவும் வேகமானவர்கள், உங்களுக்குத் தெரியுமா, ஆகவே இப்பொழுது, யாராவது வியாதியாயிருந்து ஜெபம் ஏறெடுக்கப்பட விரும்புவீர்களானால்... ஒரு விசேஷித்த ஜெபம் அல்லது ஏதோ ஒன்றாக இருக்குமானால், உங்களுக்கு நாங்கள் ஏறெடுப்போம். சரி, சகோதரியே, நீங்கள் இங்கே வந்து நிற்பீர்களா. சரி. அஹ்- ஆம். அது ஒரு... இந்த காரியங்களை நாங்கள் செய்ய விரும்புகிறோம். நம்முடைய சிறு கிறிஸ்துமஸ் செய்தியில் நாம் அதிகமாக செல்லப் போகிறோம், அதனால் பரவாயில்லை. அது சரி, ஐயா. இப்பொழுது, நம்முடைய தலைகளை தாழ்த்துவோமாக. சகோதரன் நெவில், முன்னே வந்து என்னோடு நிற்பீர்களா? எங்கள் பரலோகப் பிதாவே, இந்த கிறிஸ்துமஸ் முன்னர், எங்களுடைய பாவம் மற்றும் வியாதிக்காக எங்களுக்காக ஒரு பலியாக ஆகத்தக்கதாக ஒரு மகத்தான பரிகாரம் இந்த உலகத்துக்குள் பிறந்தது, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எங்கள் சகோதரியைக் கொண்டு வருகிறோம், ''வியாதியஸ்தர் மேல் கைகளை வையுங்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்“ என்று செய்யும்படி நீர் கூறின விதமாக சரியாக இவள் மீது எங்கள் கரங்களை நாங்கள் வைக்கிறோம். சுகமளித்தலுக்காக, இதை நாங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் செய்கிறோம். ஆமென்...?... ஓ, இது சரியா? 13சகோதரியே, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? இப்பொழுது, நம்முடைய தலைகளை நாம் மறுபடியுமாக தாழ்த்துவோமாக. எங்கள் பரலோகப் பிதாவே, சர்வ வல்லவருடைய பிரசன்னத்தில் நாங்கள் இங்கே நின்று, எங்கள் சகோதரிக்கு நேர்ந்துள்ள இன்னலிற்காக நாங்கள் ஜெபிக்கிறோம். இவளுடைய கண்களை ஏதோ ஒன்று குருடாக்கியுள்ளது. ஆனால் கர்த்தராகிய நீர் மோசேயிடம், “மனுஷனுடைய கண்ணை உண்டாக்கினது யார்?'' என்று கேட்டீர். உதவி செய்யக் கூடியவர் ஒருவர் மாத்திரமே, அவர் தான் அந்த மகத்தான சிருஷ்டிகராகிய யேகோவா. ஆகவே பரலோகப் பிதவே, இதை நாங்கள் எங்கள் இருதயங்களில் விசுவாசிக்கிறவர்களாக நாங்கள் ஜெபிக்கிறோம், இவளை உம்மிடமாக நாங்கள் கொண்டு வருகிறோம், எங்களுடைய விசுவாசம்... இரத்தம் நிறைந்த பலியாகிய கிறிஸ்து கிடத்தப்பட்டு இருக்கின்ற அந்த மகத்தான தேவனுடைய பொற்பீடத்தண்டை விசுவாசத்தினாலே நாங்கள் - நாங்கள் வருகிறோம். ஏசாயாவின் புஸ்தகம் 53வது அதிகாரம் 5ஆம் வசனத்தில் கூறப்பட்ட விதமாக ''நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமானோம்”. இப்பொழுது, இவளுடைய விசுவாசத்துடனே எங்களுடைய விசுவாசத்தையும் உம்முடைய பலிபீடத்தின் மீது வைக்கிறோம், எங்கள் சகோதரிக்கு இருக்கும் குருட்டு நிலை இவளை விட்டு நீங்கி, அதினால் தேவனுடைய மகிமையும் கனத்தையும் இவள் காண ஏதுவாகும் என்று இயேசுவின் நாமத்தில் கேட்கின்றோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென். சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. 14ஆனால்...?... ஓ, ஆமாம்...?... ஆம் ஐயா. நல்லது. இப்பொழுது, நம்முடைய சகோதரன் காபிள்ஸ், அவர்களின் ஊழியத்தின் அபிஷேகத்திற்காகவும், அவர் சென்று என்னுடைய நண்பரை சந்திப்பதற்காகவும் இப்பொழுது நாம் ஜெபிக்கிறோம். இவருடன் நான் நியூயார்க்கில் பணியில் இருந்தேன். பாரீஸ் ரீட்ஹெட், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெறுவதற்காக என் வீட்டிற்கு வந்திருந்தவர். சூடான் மிஷனுடன் அவருக்கு ஏதாவது காரியம் இருக்கிறதா? அருமையானது. இப்பொழுது அவர் லூயிவில்லை விட்டுச் செல்கின்றார். ஓ, என்னே. சகோதரன் காபிள்ஸை லூயிவில்லிலிருந்து இழப்பதை நாங்கள் வெறுக்கிறோம். சகோதரனே கர்த்தர் உங்கள் இருதயத்தை ஆசீர்வதிப்பாராக. என்... சகோதரன் காபிள்ளை என்னால் எப்பொழுதும் நினைவில் கொள்ள முடியும். இந்த அருமையான சகோதரன், தேவனுடைய பரிசுத்தவான், முதல் முதலாக நான் அவரை சந்தித்ததை நினைவு கூறுகிறேன். அவர் இரத்தம் வெளியேறி மரித்துக் கொண்டிருந்தார். அவருடைய மகத்தான பெயரை சகோதரன் மத்தியில் அறிந்து கொண்டேன், நான் அங்கே சென்றேன். அவருடைய சகோதரன் மருத்துவமனையில் நின்று கொண்டிருந்தார். நானும், சிறியவனான நான், உள்ளே செல்ல வெட்கப்பட்டு நின்றிருந்தேன், ஆகவே அந்த மருத்துவமனையில் கொக்கோ கோலா இடத்திற்கு பின்புறம் நான் ழுழங்காலிட்டு அவருக்காக ஜெபித்து திரும்பிச் சென்றேன். தொலை பேசி மணி திரும்பவுமாக அடித்து, ''நீங்கள் சென்று சகோதரன் காபிள்ஸை பார்க்கவில்லையா?“ என்று கேட்கப்பட்டது. நான் அங்கே சென்றேன். அவர்கள் அவருடைய மூக்கில் ஏதோ ஒரு அறுவை சிகிச்சை செய்யும் போது, ஏதோ ஒன்று இரு துண்டாக வெட்டி விட்டார்கள், அதினால் இரத்தம் வெளியேறி அவர் மரித்துக் கொண்டிருந்தார். அங்கே முழங்கால்படியிட்டு ஜெபித்தேன், உடனடியாக அது நின்று போயிற்று. 15எங்கள் பரலோகப் பிதாவே, இவர் உம்முடைய ஊழியக்காரன், இவர் எங்கள் மத்தியில் இருந்து வேறு இடத்திற்கு செல்கிறார், உம்முடைய மகத்தான ஊழியக்காரரான சகோதரன் பாரீஸ் ரீட்ஹெட்டிற்கு உதவி செய்ய அங்கே செல்லுகின்ற என் சகோதரனை ஆசீர்வதிக்கும் படியாக பிதாவே, உம்மிடம் நான் ஜெபிக்கிறேன், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தில் மிகவும் ஆவல் கொண்டவராக, எல்லா அடிப்படையான..?... இன்னுமாக தேவனை ஆராதித்து...?... சகோதரன் காபிள்ஸை ஆசீர்வதியும். கர்த்தாவே, உமக்காக அவர்கள் செய்யும் பணியில், அவர்களுடைய பிரயாசத்தை ஆசீர்வதியும். அவர்கள் இருவரும் பவுலும் சீலாவும் போன்று கூட்டாக செயல்படட்டும். இதை அருளும் கர்த்தாவே. பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை அவருக்குத் தாரும். கர்த்தாவே, அவர் விருப்பப்பட்டு, முயற்சி செய்து, நீர் தாமே உண்மையாகவே அந்த இடத்திற்கு செல்லவேண்டும் என்று நீர் தீர்மானித்த இடத்திற்குச் செல்ல உந்தித் தள்ளப்பட்டு அந்த இடத்தை கண்டுபிடிப்பாராக. மகத்தான காரியங்களை அவருக்கு திறந்து அளியும். கார்த்தாவே நாங்கள் இந்த சாயங்கால நேரத்தில் இருக்கையில், நீர் அவருக்கு பயிற்சியை அளித்து இந்த மணி நேரத்தில் அவர் பணிபுரிய வேண்டும் என்று விசுவாசித்த அந்த நேரம், இந்த மணி நேரமாக இருப்பதாக. கர்த்தாவே, இவருடைய சரீரத்தை பெலப்படுத்தும். கர்த்தாவே, இவருக்கும் பெலம் தேவைப்படுகிறது. இயேசு கிறிஸ்துவை உயிரோடெழுப்பின அந்த வல்லமை தாமே...?... இவருடைய சரீரத்தில் சுகமளித்தலை ஓ, இவர் தாமே வல்லமையில் சென்று... ஓ, உம்முடைய இருதய...?... ஆசீர்வதிக்கப்படுவதாக. என் சார்பில் சகோதரன் பாரிஸ் அவர்களுக்கு வாழ்த்துதல் சொல்லுங்கள், உங்களை பின்னர் சந்திப்பேன் என்று நான் நம்புகிறேன்...? இந்திய பயணம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 16சகோதரியே, எப்படி இருக்கிறீர்கள்? சகோதரன், உங்களுக்கு நன்றி. கர்த்தாவே இயேசுவே, எங்கள் கரங்கள் வைக்கப்பட்டவைகளாக அந்த சிறு பெண்னை உம்மிடமாக நாங்கள் கொண்டு வருகையில், பலிக்கு எங்களை இணைத்துக் கொள்வது போல எங்களையும் இவளோடு இணைத்துக்கொண்டு, நீர் அதை எங்களுக்கு வாக்களித்திருக்கிறீர் என்பதை அறிந்தவர்களாக இயேசுவின் நாமத்தில் இவளுடைய சுகமளித்தலைக் கோருகிறேன். ஆமென். இங்கே சரிந்த தோள்களை கொண்டு இங்கே நின்று கொண்டிருக்கின்ற இந்த சிறிய தாய், இவர்களுடைய நரைத்த தலைமயிர் வரப்போகின்ற உலகிற்கு ஏமாற்றம் தான் என்பதை உணர்த்துகிறது. தேவனே, எங்கள் கர்த்தராகிய இயேசுவை கல்லறையிலிருந்து எழுப்பின அந்த வல்லமை தாமே, எங்களை அவளோடும் மற்றும் கிறிஸ்துவோடும் இணைத்துக் கொண்டு இவள் மீது எங்கள் கரங்களை நாங்கள் வைக்கையில், அவரை கல்லறையிலிருந்து எழுப்பின் அந்த வல்லமை தாமே இவளுடைய சரீரத்தை சுகப்படுத்தட்டும், இயேசுவின் நாமத்தில். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, என்...?... பரலோகப் பிதாவே, எங்கள் சகோதரியின் மீது எங்கள் கரங்களை நாங்கள் வைக்கையில், அதே விதமாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தேவனுடைய மகிமைக்கென்று இவள் தாமே சுகமாக்கப்படுவாளாக. ஆமென். இரக்கமுள்ள தேவனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே எங்கள் சகோதரியின் மீது எங்கள் கரங்களை நாங்கள் வைக்கின்றோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே, தேவனுடைய மகிமைக்கென்று இவள் தாமே சுகமாவாளாக. சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. பரலோகப் பிதாவே, இங்கே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகத்திற்காக, எங்கள் சகோதரனாகிய இவர் மீது எங்கள் கரங்களை நாங்கள் வைக்கிறோம். இயேசுவின் நாமத்திலே இவர் தாமே சுகமடைவாராக. 17எங்கள் பரலோகப் பிதாவே, எங்கள் சகோதரிகளில் ஒருவராக... கூட்டத்தில் இருப்பதற்காக அதிக தூரம் பிரயாணப்பட்டு வந்துள்ளார்கள், இப்பொழுது இக்காலை இங்கு நின்று கொண்டிருக்கிறார்கள், கர்த்தாவே, சுவிசேஷத்திலே எங்களை நாங்கள் இணைத்துக் கொள்கிறோம், எங்கள் கரங்களை எங்கள் ஒவ்வொருவரின் மீதும் இவளின் மீதும் வைக்கப்பட்டிருக்கையில் ''இரண்டு பேராவது மூன்று பேராவது ஒருமனப்பட்டு பூமியில்...'' என்று கூறுகிறது, பரலோகத்தின் தேவன் தாமே இதைக் காணட்டும். இதோ நாங்கள் கர்த்தாவே மூன்று பேராக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நிற்கின்றோம். இவளைச் சுகப்படுத்தும் கர்த்தாவே, இயேசுவின் நாமத்தில். அதேவிதமாக, எங்கள் கரங்களை...?... நாங்கள் ஒருமித்து வைக்கின்றோம், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவள் சுகமாவாளாக. பரலோகப் பிதாவே, அவருடைய அருமையான கிறிஸ்தவ ஜீவன்... மனைவி புற்றுநோய் உடையவளாக இருக்கின்றாள். ஓ, தேவனே, தன் மனைவிக்காக இவர் நிற்கின்றார். கிறிஸ்து அவளுக்காக நிற்கின்றார். இப்பொழுது பிசாசே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவளை விட்டு போ. சகோதரனே அதை விசுவாசி. சரியாக நடப்பட்டுள்ள கழுமரம் இது. நினைவில் கொள்ளுங்கள் இது...?... எங்கள் பரலோகப்பிதாவே, அவர்கள் எங்களிடம் வருகின்ற ஒரு சகோதரி ஆவார், ஒரு முன்னுதாராணமான ஜீவியத்தை இவர்கள் செய்துக் கொண்டிருக்கிறார்கள், தங்களுடைய சுகமளித்தலுக்காக இவர்கள் வருகிறார்கள். நாங்களும் எங்களுடைய இருதயங்களையும் கரங்களையும் உம்முடனே இணைத்திருக்கிறோம், கர்த்தாவே, இந்த ஆசீர்வாதத்திற்காக நாங்கள் கேட்கின்றோம், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். 18உம்முடைய பணியாளாகிய எங்கள் சகோதரி ரிசன்தோர், இந்த கிறிஸ்துமஸ், பண்டிகை காலத்தில் நாங்கள் வருகின்றோம், இயேசுவின் நாமத்தில் இவள் தாமே சுகமாவாளாக. ஆமென். இயேசுவின் நாமத்தில். பரலோகப் பிதாவே, இக்காலையில் இந்த அருமையான பெண்னை கொண்டு வருகிறோம்; கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் எங்கள் கரங்களை இவள் மீது வைத்து இவளுடைய சுகத்தை இயேசு நாமத்தில் நாங்கள் கேட்கின்றோம். ஆமென். எங்கள் பரலோகப் பிதாவே, நாங்கள் வந்து எங்கள் சகோதரியின் மீது கரங்களை வைக்கிறோம்; அந்த நாமத்தில், அந்த மகா பரிசுத்த நாமமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இவள் தாமே தேவனுடைய மகிமைக்கென்று சுகமாவாளாக. எங்கள் பரலோகப் பிதாவே, உம்முடைய கிருபையின் பரிசாகிய எங்கள் சகோதரியை இன்று உம்மிடமாக நாங்கள் கொண்டு வருகிறோம், இந்த ஸ்திரீயிடமாக எவ்வளவாக நீர் இருந்து வந்துள்ளீர், அநேக வருடங்களுக்கு முன்பாக புற்று நோயால் அரிக்கப்பட்டு சில மணி நேரம் மாத்திரமே உயிரோடு இருக்க வேண்டியவளாக இருந்தார்கள். ஆனால் இவர்கள்...? ஜீவித்திருக்கிறார்கள். கர்த்தாவே, என்ன கோளாறாக இருந்தாலும் இன்று இவர்களை சுகப்படுத்தும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 19பரலோகப் பிதாவே, இந்த எங்கள் சகோதரியும் கூட தேவனுடைய கிருபையின் பரிசாக நிற்கின்றார்கள், மிகவும் நொறுங்கிப் போய் மிக மோசமாக போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், குடிகாரியாக இருந்தவர்கள், ஆனால் முழுமையாக ஆக்கப்பட்ட ஒரு அருமையான பெண்ணாக இப்பொழுது நின்று கொண்டிருக்கின்றார்கள், கர்த்தாவே, எப்பேற்பட்ட ஒரு சுகமாக்குதல். இந்த விதமாக பாதிக்கப்பட்டவர்களுக்காக இந்த ஸ்திரீயின் இருதயம் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது, ஏனென்றால் மகத்துவமிக்க சுகமளிப்பவர் ஒருவர் இருக்கின்றார் என்பதை இவர்கள் அறிவார்கள். பிதாவே, இப்பொழுது மூன்று வெவ்வேறு பெயர்களை இப்பொழுது சொல்லியிருக்கிறார்கள். பிதாவே இங்கிருக்கும் எங்கள் சகோதரன், எங்கள் மேய்ப்பர் இந்த பெண்மணி ஆகியோர் கர்த்தருடன் இணைப்பை ஏற்படுத்தி நானும் ஜெபிக்கின்றேன். தம்முடைய மகிமையுள்ள நாமத்தினாலே, அந்த மூன்று பேர்களும் தேவனுடைய ராஜ்யத்திற்கென்று விடுவிக்கப்படுவார்களாக கர்த்தாவே. உங்களுக்கு நன்றி, சகோதரனே, மகிமையுள்ள பிதாவே, எங்கள் சகோதரன் வே அவர்களின் மீது எங்கள் கரங்களை வைக்கின்றோம். இவர் மூன்று காரியங்களைக் கேட்கின்றார். கர்த்தாவே, நீர் அவைகளை அறிந்திருக்கின்றீர். ''எல்லா காரியங்களும்...'' என்று வேதாகமம் கூறுகிறதை அறிந்து அது எழுதப்பட்டுள்ளது என்று நாங்கள் விசுவாசிக்கின்றோம். ஆகவே எங்கள் பரலோகப் பிதாவே, நாங்கள் ஜெபிப்பது என்னவென்றால், இவர் என்ன கேட்கின்றாரோ, அது இவருக்கு பிரத்தியட்சமாகும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். மகிமையுள்ள பிதாவே, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் எங்கள் சகோதரனின் மீது எங்கள் கரங்களை வைத்து தேவனுடைய மகிமைக்கென்று இவருடைய சுகத்தை நாங்கள் கேட்கின்றோம். அதை அருளும் பிதாவே, இயேசுவின் நாமத்தினாலே. ஆமென். பரலோகப் பிதாவே, தேவனுடைய ராஜ்யத்தின் பொருட்டு எங்கள் சகோதரியின் மீது எங்கள் கரங்களை நாங்கள் வைக்கின்றோம். செய்யுங்கள் என்று அவர் கூறினதற்கு நாங்கள் கீழ்ப்படியத்தக்கதாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இதைச் செய்கிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இவள் சுகமடைவாளாக. ஆமென். சகோதரியே தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. பிதாவாகிய தேவனே தேவனுடைய ராஜ்யத்திற்கென இவரை நீர் தாமே சுகப்படுத்தத்தக்கதாக அதே விதமாக எங்கள் சகோதரனின் மீது எங்கள் கரங்களை வைக்கின்றோம். என் சகோதரனே தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. பரலோகப் பிதாவே, சகோதரி ஆர்கன் பிரைட். எங்கள் சகோதரி ஆர்கன் பிரைட்டிற்காக நாங்கள் ஜெபிக்கின்றோம், நீர் தாமே அவர்களை சுகப்படுத்தும். கர்த்தாவே, இதை அருளும். எங்கள் பரலோகப் பிதாவே இவர்களுடைய வேண்டுதல் இவர்களுக்கு அளிக்கப்படுவதாக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். கர்த்தராகிய இயேசுவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எங்கள் கரங்களை எங்கள் சகோதரனின் மீது வைக்கின்றோம், இவருடைய விண்ணப்பம் அருளப்படுவதாக. எங்கள் சகோதரனே அதை விசுவாசியுங்கள். பரலோகப் பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த சிறு பையனின் மீது எங்கள் கரங்களை வைக்கின்றோம், இக்காலை நாங்கள் ஒன்று கூடி நின்று விசுவாசத்தினாலே இந்த பிள்ளையை உம்மிடமாக நாங்கள் கொண்டு வருகிறோம். கிறிஸ்துவின் சுகமளிக்கும் வல்லமையாகிய தேவனுடைய ஆசீர்வாதம் தாமே இந்த சிறு சரீரத்திற்குள்ளாக வெளிப்படட்டும், இயேசுவின் நாமத்தில். ஆமென். பிதாவாகிய தேவனே, இந்த பிள்ளையைக் கொண்டு வருகின்ற இந்த அருமையான தந்தையின் மீதும் நீர் தாமே உம்முடைய சுகமளிக்கும் வல்லமை கிரியை பிறப்பிக்கும் படிக்குச் செய்ய வேண்டுமென்றும் நாங்கள் ஜெபிக்கின்றோம். இயேசுவின் நாமத்தில். ஆமென். என் சகோதரனே தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. 20பரலோகப் பிதாவே, எங்கள் சகோதரி பெக்கன்பாஹ், எங்கள் அருமையான சகோதரிக்கு தேவையாயிருப்பது... கர்த்தாவே, சகோதரியிடம் எவ்வளவு கிருபையாக நீர் இருந்துள்ளீர். உம்முடைய ஆசீர்வாதங்களின் தொடர்ச்சி சகோதரியின் இருதயத்திற்குள்ளாக பாய்ந்து செல்லுமாறு நான் ஜெபிக்கின்றேன். இவர்கள் கடந்து சென்றுள்ள எல்லா வியாதிகளும் சோகங்களும், கிறிஸ்துவின் வல்லமையானது இவர்களுக்கு காரியங்களை திரும்ப அளிக்கட்டும், கர்த்தாவே, நூறத்தனையாக அளித்து, இவர்களுக்கு அருமையானவர்களையும், இவர்களையும் முழுமையாக்கட்டும், இயேசுவின் நாமத்தில். பரலோகப் பிதாவே, நாங்கள் எங்கள் சகோதரனின் மீது கரங்களை வைத்து இயேசு கிறிஸ்துவின் வல்லமை தாமே இவரை சுகப்படுத்த, இந்த சமயத்தில் நாங்கள் யாரைக் குறித்த கொண்டாட்டத்தில் இருக்கின்றோமோ அந்த குழந்தை - கிறிஸ்துவின் நாமத்தின் மூலமாக நாங்கள் கேட்கின்றோம். ஆமென். கிருபையுள்ள தேவனே, எங்கள் கரங்களை உம்முடைய பணியாளாகிய எங்கள் சகோதரியின் மீது நாங்கள் வைக்கையில், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உம்முடைய மகிமைக்காக அவர்கள் சுகமாவார்களாக. கர்த்தாவே, எங்கள் கரங்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எங்கள் சகோதரியின் மீது வைக்கின்றோம், இவர்கள் சுகமடைவார்களாக. பரலோகப் பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இங்கே எங்கள் சகோதரியின் மீது எங்கள் கரங்களை நாங்கள் வைக்கின்றோம். தேவனுடைய வல்லமை தாமே இவள் சுகமடையச் செய்யட்டும், ஆமென். கர்த்தராகிய இயேசுவே, எங்கள் சகோதரியின் விண்ணப்பத்திற்கு பதிலளித்தருளும், தேவனுடைய மகிமைக்கென்று இயேசுவின் நாமத்தில் இதை நாங்கள் கேட்கின்றோம். எங்கள் பரலோகப் பிதாவே, எங்கள் சகோதரி இத்தனை வருடங்களாக எங்களோடே இருப்பதை நாங்கள் காண்கிறோம். கர்த்தாவே, அதற்காக நாங்கள் நன்றியை ஏறெடுக்கின்றோம். இவளுடைய விண்ணப்பத்திற்கு நீர் தாமே பதிலளித்தருளுமாறு இயேசுவின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கின்றோம். 21தேவனாகிய கர்த்தாவே (சற்று பொறுங்கள்?). தேவன் சர்வ வியாபியாக, கடல்களுக்கு அப்பால், இங்கும் அங்கும், எவ்விடங்களிலும் இருப்பாரானால், தேவன் இக்காலையில், நார்வே தேசத்தில் இருப்பவர்களை...?... உங்களுடைய மகளையும் மற்றும் உங்களுடைய தந்தையையும் சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா, அவர்களுடைய இரட்சிப்புக்காக ஜெபம் ஏறெடுக்கப்பட நீங்கள் விரும்புகிறீர்களா? கர்த்தாவே, நீர் இந்த பெண்மணியைக் காண்கிறீர், இவர்களுடைய விண்ணப்பங்களையும் நீர் அறிந்திருக்கின்றீர் என்பதை நாங்கள் அறிவோம். இவர்களுடைய சத்தத்தை நீர் கேட்டீர். உமக்குத் தெரியாமல் ஒரு குருவியும் கூட தெருவில் பறக்காது என்கின்ற ஒரு நிலையில், இவர்கள் இங்கு நின்று கொண்டிருப்பதை எவ்வளவாக நீர் அறிந்திருப்பீர். ஆகையால் இவர்களுடைய விண்ணப்பம் உமக்குத் தெரியும் என்பதை நான் நன்கறிவேன். ஆகையால் இந்த காரியங்கள், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இவர்களுக்கு அளிக்கப்படுவதாக என நாங்கள் கேட்க மாத்திரம் செய்கின்றோம், இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலமாக. ஆமென். பரலோகப் பிதாவே, வயதாகிக் கொண்டிருக்கின்ற மற்றும் அறுவை சிகிச்சை செய்யப்படப் போகின்ற இந்த தாய்க்காக நாங்கள் ஜெபிக்கிறோம். தேவனே, உதவி செய்யும். இதை விட இன்னும் அதிகமாக எங்களால் செய்யக் கூடுமானால், கர்த்தாவே அதை என்னிடமோ அல்லது வேறொருவரிடமோ இந்த நாளுக்கு முன்பாக கூறி அதினால் எங்கள் சகோதரனுக்கு நாங்கள் ஆறுதல் சொல்ல ஏதுவாக இருக்கும். இதை அருளும், கர்த்தாவே. இயேசுவின் நாமத்தில் நான் கேட்கிறேன். ஆமென். கர்த்தாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எங்கள் சகோதரியின் மேல் நாங்கள் கைகளை வைக்கின்றோம். நீர் தாமே இவளை சுகமாக்கி ஆரோக்கியமடையச் செய்யும். ஆமென். பரலோகத்தின் தேவன் தாமே இவர்களுடைய தேவையை இயேசுவின் நாமத்தில் அளிப்பாராக, நான்...?... சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீர் சகோதரி மார்கரெட் தானே? கர்த்தராகிய இயேசுவே, எங்கள் - எங்கள் சகோதரிக்காக நாங்கள் ஜெபிக்கின்றோம், இவர்களின் கணவர் இவருக்காக நின்று கொண்டிருக்கின்றார். எப்படியாக இவர்கள் போராட்டத்திற்குள் இருந்தார்கள், எவ்வளவாக நீர் தாமே உம்மை இவர்களுக்கு வெளிப்படுத்தி, இவர்களுக்கு உம்மை தாமே காண்பித்தீர் தேவனே, ஆகவே நான் உமக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இதை அருளும் தேவனே, எங்களுடைய விலையேறப் பெற்ற சகோதரியாகிய இவருடைய மனைவியை சுகப்படுத்தும், இயேசுவின் நாமத்தில். பரலோகப் பிதாவே, இந்த சகோதரன் கேட்கின்ற இந்த விண்ணப்பத்தின், எல்லாக் காரியங்களையும் நீர் அறிந்திருக்கின்றீர் கர்த்தாவே, உம்முடைய ஊழியக்காரனுக்காக நான் ஜெபிக்கின்றேன். இவர் கூறுகின்ற அந்த சரீரங்களுக்காக சுகத்தை தேவனே இவர் விண்ணப்பத்தின்படி இவருக்கு அளியும். இப்பொழுதும் என்னை விட நீர் தாமே இந்த விண்ணப்பங்களை சிறந்த விதத்தில் செவி கொடுத்துக் கேட்டீர். ஆகவே உம்முடைய பீடத்தின் மேலே என்னுடைய திறந்த இருதயத்தைக் கொண்டு மாத்திரமே நான் கேட்டுக் கொண்டு, இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே என் ஜெபத்தை என்னுடைய சகோதரனின் ஜெபத்தோடு, அவை தாமே பதிலளிக்கப்படத் தக்கதாக இங்கே சமர்ப்பிக்கின்றேன். ஆமென். பரலோகப் பிதாவே, எங்கள் சகோதரியின் விண்ணப்பத்திற்காக எங்கள் கரங்களை சகோதரியின் மீது வைக்கின்றோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே அது தாமே அவர்களுக்கு அருளப்படட்டும். ஆமென். சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 22கர்த்தாவே, எங்கள் சகோதரியின் விண்ணப்பத்திற்காக நாங்கள் கரங்களை இவர்களின் மீது வைக்கின்றோம். அது தாமே இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அருளப்படுவதாக. பிதாவாகிய தேவனே, இங்கே எங்கள் சகோதரினின் மீது, அவருடைய விண்ணப்பத்திற்காக, கர்த்தாவே, அது தாமே அவர்களுக்கு அருளப்படட்டும். இவ்வளவு வருடங்களாக உமக்கு ஊழியம் செய்ய பிரயாசப்பட்டுக் கொண்டிருக்கின்றார், கஷ்டங்களினூடாக அவர் இன்னுமாக தரித்து நின்று கொண்டிருக்கின்றார். தேவனே, இவர்தாமே பீடத்தின் கொம்பை பிடித்துக் கொண்டு, தன்னுடைய பிடியை அந்த பக்கவாட்டில் நட்டு “அது வருகிறதென்றால் இந்த மணிநேரத்தில் தான்” என்று உறுதியாக இருக்கட்டும். அதை அருளும் கர்த்தாவே. இயேசுவின் நாமத்திலே இந்த விண்ணப்பம் தாமே இவருடைய மனைவிக்கும் மற்றும் பேரக் குழந்தைக்கும் அருளப்படட்டும், அதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக...?... அதை விசுவாசியுங்கள். எங்கள் பரலோகப் பிதாவே, இக்காலையில் இங்கே நின்று கொண்டிருக்கின்ற, இந்த சிறு தாயார், அநேகருக்கு தாயைப் போல இவர்கள் இருக்கின்றார்கள். இப்பொழுது, தன்னுடைய அருமையானவர்களுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள் கர்த்தாவே. இதை விசுவாசிக்கிறவர்களாக, ஒரு குழுமமாக ஒன்று சேர்ந்து எங்கள் கரங்களை அவர்கள் மீது வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். ஆகவே உம்முடைய பீடத்திற்கு முன்பாக எங்கள் இருதயங்கள் இருக்க, அளிக்கப்பட வேண்டுமென்று இவர்கள் கேட்கின்ற இந்த வேண்டுதலை இயேசுவின் நாமத்தில் நாங்கள் கேட்கின்றோம். ஆமென்...?... சகோதரியே. 23தேவனே, இந்த நேரத்தில் இவர் எந்த நபர்களுக்காக இங்கே நிற்கின்றார் என்பதையும், இந்த நேரத்தில் தன்னுடைய இருதயத்தில் இருக்கின்ற ஒவ்வொரு நபரைக் குறித்தும் நீர் அறிந்திருக்கின்றீர். கர்த்தாவே நாங்களும் எங்களையும் இவரோடே பொருத்திக் கொள்கிறோம், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இவருடைய விண்ணப்பம் தாமே...?... கர்த்தாவே, இயேசுவின்...?... ஓ, தேவனே சகோதரி ஹாட்டியை நாங்கள் அறிவோம். நாங்கள் அவர்கள் மீது எங்கள் கரங்களை வைத்து ஜெபிக்கின்றோம். பரிசுத்த ஆவியானவர் தாமே சகோதரியுடன் இருக்க அருள் புரியும், பிதாவே, அதை சகோதரியினுடைய இருதயத்திற்கு வெளிப்படுத்தும். இவருடைய விலையேறபெற்ற மகன், இரண்டு மகன்களையும் நாங்கள் நினைவு கூறுகிறோம். அந்த தாழ்மையான சிறிய வீட்டில் நான் உட்கார்ந்திருந்த அந்த நாளைக் குறித்து நினைவில் கொள்கின்றேன். நீர் தாமே, ''அவள் எதை வேண்டுமானாலும் கேட்கலாம் என்று அவளுக்கு கூறு, பிறகு வார்த்தையை அப்படியே உரை'' என்று கூறினர். அவர்களும் கேட்டார்கள். தேவனே, இந்த மக்களுக்காக நீர் அக்கறை கொள்கிறீர் என்பதை நான் அறிவேன், நான் சகோதரியின் மீது கரத்தை வைத்து ஜெபிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இவர்களுடைய விண்ணப்பம் தாமே அளிக்கப்படட்டும், அது அருளப்பட...?... கர்த்தாவே எங்களுடைய சகோதரியின் மீது நாங்கள் கரங்களை வைக்கையில், இந்த வழுக்குகின்ற சாலைகளினூடாக காரில் பிரயாணம் செய்து இங்கே வந்து காரியங்களைப் பெற்றுக் கொள்ள வருகிறார்கள். அதைக் குறித்து எல்லாவற்றையும் நீர் அறிந்திருக்கின்றீர். கர்த்தாவே இவளின் மீது கரங்களை வைத்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். இவள் கேட்டுக் கொள்வது எதுவோ அதை இவள் பெற்றுக் கொள்வாளாக. ஆமென். 24எங்கள் பரலோகப் பிதாவே, இந்த விலையேற்பெற்ற சகோதரன், எவ்வளவாக உறுதி கொண்டவராக இவர் இருந்தார், ஒரு காலத்தில் சிகரெட்டுகளும் மற்றும் காரியங்களும் இவரை கட்டிப் போட்டிருந்தன. நீர் ஒரு நேர்காணலை (interview) அமைப்பீர், நாங்களும் காத்துக் கொண்டே இருப்போம், நீரும் எங்களுக்கு எதையுமே கூறமாட்டீர். இவரும் மற்றுமொரு நேர் காணலுக்கு வருவார்; நீரும் காத்துக் கொண்டே இருப்பீர், எங்களுக்கு ஒன்றுமே கூறமாட்டீர். பின்னர் முடிவில் ஒருநாள் காலை நாங்கள் உட்கார்ந்திருந்த பொழுது அது வெளிப்பட்டது. அப்பொழுது எல்லாமே முடிவு பெற்றது. கர்த்தாவே, உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். நீர் உண்மையானவர். உம்முடைய வார்த்தை ஒருபோதும் தவறாது. “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைவார்கள்'' என்று அது கூறியிருக்கிறது. இப்பொழுது இவர் தன்னுடைய மூன்று விண்ணப்பங்களுக்காக இக்காலை வந்திருக்கிறார் கர்த்தாவே. நாங்களும் மூவராக, மூன்று அலுவல்கள் ஒரே தேவனின் வெளிப்பாடு என்ற வாக்குத்தத்தத்தோடு இங்கே நின்று கொண்டிருக்கிறோம். அந்த உண்மையான ஜீவிக்கின்ற ஒரே தேவனாகிய இயேசுவின் நாமத்தில், இவருடைய விண்ணப்பம் தாமே இவருக்கு அருளப்படுவதாக. ஆமென். சகோதரனே, நீர் ஆசீர்வதிக்கப்படுவீராக. ஓ, அது...?... கர்த்தாவே, நீர் தாமே இந்த விண்ணப்பங்களை கேட்டுக் கொண்டிருக்கின்றீர், இவைகளுக்கு எப்படி பதிலளிக்க வேண்டுமென்று நீர் அறிந்திருக்கிறீர் கர்த்தாவே. ஆகவே நாங்கள் சகோதரி பேக்கரின் மீது கைகளை வைத்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இவர்களுடைய சுகத்திற்காக வேண்டுகோளை நாங்கள் ஏறெடுக்கின்றோம். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக என் சகோதரியே. பரலோக பிதாவே, இந்த அருமையான சகோதரனின் மீது நான் கைகளை வைக்கையில், இன்று இருக்கும் இவருடைய உடல் நலத்தைக் குறித்ததான காரியத்தை நான் கண்டு கொள்கிறேன், சில சமயங்களில் அது மறைந்து காணப்படுகிறது. ஆகவே கர்த்தாவே, இவருடைய இருதயத்தில் என்னென்ன விண்ணப்பங்கள் இருக்கின்றதோ அதற்கு பதிலளித்து அருள வேண்டுமென்று நான் ஜெபிக்கின்றேன். இவர் என்னென்ன கேட்டாரோ அதை இவருக்கு இயேசுவின் நாமத்தில் அளித்தருளும். ஆமென். 25பரலோகப் பிதாவே, எங்கள் சகோதரியின் மீது நாங்கள் கைகளை வைத்து, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், இவர்களுடைய விண்ணப்பத்தை உமது மகிமைக்கென்று நீர் தாமே அளித்தருள வேண்டுமென்று நாங்கள் கேட்கின்றோம். ஆமென். கர்த்தராகிய இயேசுவே, எங்கள் சகோதரனின் மீது நாங்கள் கைகளை வைத்து இவருடைய விண்ணப்பத்திற்காக நாங்கள் வேண்டுகிறோம். இவரின் மீது நாங்கள் கரங்களை வைக்கையில், கர்த்தாவே, இதை நாங்கள் அடையாளமாக அமைக்கின்றோம். எங்களை நாங்களே ஒருங்கிணைத்து இந்த இணைப்பிலே இயேசுவின் நாமத்திலே நாங்கள் ஜெபிக்கிறோம். ஆமென். என் சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. பிதாவாகிய தேவனே, அதைப் போலவே எங்கள் சகோதரிக்கும் கூட அவ்விதமாகவே செய்கின்றோம், இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே இவள் தாமே தன்னுடைய விண்ணப்பத்திற்கான பதிலைப் பெறட்டும்...?... சகோதரி. தேவனே, எங்கள் விலையேறப்பெற்ற சகோதரன் அன்றைய நாளிலே கொல்லப்பட்டிருப்பார், ஆனால் இவருக்காக நீர் ஆயத்தப்படவில்லை. ஆகவே இவருடைய விண்ணப்பத்திற்கான பதிலை இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே இவருக்கு அருள் வேண்டுமென்று நான் ஜெபிக்கின்றேன். ஆமென். அது எப்படி செய்யப்பட வேண்டுமென்று உமக்குத் தெரியும். எங்கள் பரலோகப்பிதாவே, நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள எங்கள் சகோதரி முன்னே வருகையில், கர்த்தாவே, இவருடைய துன்பங்கள் அதிகமானவைகள் என்பதை அறிந்திருக்கிறோம், ஆனால் நீர் இவ்விதமாக வாக்களித்திருக்கிறீர்: நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும். ஆனால் தேவன் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவர்களை விடுப்பார். கர்த்தாவே, இவ்விதமான விடுதலை இந்த சகோதரிக்கு மிகவுமாக தேவைப்படுகிறது. இவள் மீது நாங்கள் கைகளை வைத்து இந்த பயங்கரத்தை நாங்கள் கடிந்து கொள்கிறோம். கர்த்தாவே, உம்முடைய பொற் பீடத்தின் மேல் தேவனுடைய வல்லமை தாமே இவளுடைய காரியங்களை அகற்றி இவளை சுகமாக்கட்டும்...?... 26சரி. நீங்கள்...?... அந்த..?... இங்கே இவ்வளவு நேரமாக இங்கே பின்னால் உட்கார்ந்திருந்தது நீங்கள் தானா? அஹ்? நான் உங்களை பார்க்கவில்லை. ஓ, நீங்கள் இங்கே... “மைனர்'' என்று அழைக்கப்படுகின்ற மனிதர் இவர் தான். அது தான் இவருடைய பெயர், ஆனால் இந்த ஒரு முறை ”மைனர்'' ''மேஜர்'' ஆகட்டும். சில வார்த்தைகள் கூற விரும்புகிறீரா? கூறுங்கள். நீங்கள் என்ன விரும்புகின்றீறோ எதை வேண்டுமானாலும் கூறுங்கள். சகோதரன் மைனர் ஆர்கன் பிரைட், முழு சுவிசேஷ வர்த்தகரின் சங்கத்தில் ஒருவர், இந்த மகத்தான அசைவை ஆரம்பிக்க உதவியவர்களில் ஒருவர், எல்லா மனிதரும் - அவர்கள் எதைச் சேர்ந்தவர்களாயும், மற்றும் எந்த ஒரு ஸ்தாபனத்தை சார்ந்தவர்களாகவும் இருந்தாலும், நாமெல்லாரும் கிறிஸ்துவுக்குள் சகோதரரே என்ற விதத்தில் எல்லாரையும் ஒன்று கூட்ட முயல்வதே அந்த அசைவாகும். அங்கே அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கடிதம் எழுதினதைக் குறித்து அவர் ஒன்றைக் கூறினார். அது மிகவும் வியப்பூட்டும் ஒன்றாக அது அமைந்திருந்தது. ஆகவே நான், “நீங்கள் அதை எழுதி வெளியிட வேண்டுமென்று கூறியிருந்தேன். நீங்கள் சபைக்கு வந்து அதைக் கூற வேண்டுமென்று நான் விரும்புகிறேன்'' என்றேன். “அதை நான் ஏற்கனவே கூறிவிட்டேன்'' என்று அவர் கூறினார். ஆகவே அதை ஒலிநாடாவில் நாம் வைத்திருக்கிறோம். ஒலிநாடாவில் பதித்து வைக்க வேண்டாமென்று எடுத்துவிட்டார்கள். சகோதரரே, இங்கே அறையில் இருக்கும் சகோதரன் ஜிம், நான் கூறுவது கேட்கிறது என்று எனக்குத் தெரியும். இது பதிவு செய்யப்பட விரும்புகிறேன். அது நல்ல செயலாண்மையாகும். சரி. சகோதரன் ஆர்கன்பிரைட் நீங்கள் விரும்புவதைக் கூறுங்கள் (சகோதரன் ஆர்கன் பிரைட் பேசுகின்றார் -ஆசி) ஆமென். (நீங்கள் அங்கே உட்காரலாம். அப்படியானால் சரி) எவ்வளவு உண்மையானது, ஆமென், எவ்வளவு உண்மை. அமைதி வருகிறது பிறகு போகிறது, இன்பம் அப்படியே மறைந்து போகின்றது. ஆனால் சந்தோஷம் அப்படியே இருக்கின்றது. 27நல்லது, வெளியில் இது மோசமான நாள், உள்ளே நல்ல நாள். நான் ஒரு மனிதனைச் சந்தித்தேன். அந்த மனிதன் அவர் சந்தித்த வேறொரு மனிதனைக் குறித்து என்னிடம் கூறினார். அவன், ''இது பயங்கரமான நாள் மழை பெய்து கொண்டேயிருக்கிறது'' என்று கூறினானாம். ஆனால் இந்த மனிதனோ, “இது அற்புதமான நாள்” என்றாராம். அவன், ''இதை அற்புதமான நாள் என்று எப்படி அழைக்கிறீர்?'' என்று கேட்டானாம். இவரோ, ''அதன் காரணத்தைக் கூறுகிறேன் கேள். ஒரு ஆண்டுக்கு முன்பு மருத்துவர் என்னிடம், நான் ஒரு வாரம் மாத்திரம் உயிரோடிருப்பேன் என்று கூறினார். எனவே ஒவ்வொரு நாளும் எனக்கு அற்புதமான நாள்'' என்றாராம். ஆம். அது உண்மை அது அற்புதமான நாள். எனவே நாம் அனைவரும்... அது என்ன... சகோதரன் கூறினது போன்று, “நாம் எல்லோருமே மரண ஆக்கினைக்குட்பட்டிருந்தோம் அது உண்மை. நாம் மரித்து நரகத்துக்கு செல்ல வேண்டுமென்று தீர்ப்பு இருந்தது. ஆனால் இப்பொழுதோ, இது ஒரு அற்புதமான நாள். நாம் கிறிஸ்துவுக்குள் பிழைத்திருக்கிறோம். நாம் இனி ஒருபோதும் மரிக்க முடியாது. அதெல்லாம் முடிந்துவிட்டது, பாருங்கள். நாம் உண்மையாகவே கிறிஸ்துவுக்குள் இருக்கிறோம். இப்பொழுது நாம்... 28சகோ. ஆர்கன்பிரைட், இந்த கூடாரத்தில் நான் வழக்கமாக என் நேரத்தை எடுத்துக் கொள்வேன். எனவே இரவு உணவு நேரத்தின் போது உங்களுக்கு பசியெடுத்தால், நீங்கள் மெல்ல நழுவி சென்றுவிடலாம்... இன்று காலை எனக்கு அதிகக் களைப்பாயுள்ளதால், என்னை சற்று உற்சாகப்படுத்திக்கொள்ள நான் ஏதாவதொன்றை கூற வேண்டியதாயுள்ளது. கர்த்தருடைய ஆவி என் மேல் இறங்கும் வரைக்கும். எனவே நாம் வார்த்தையைப் படிக்கும் முன்பு, நமது தலைகள் வணங்கி ஜெபம் செய்வோம். வேறு காரியங்களுக்காக உங்களுக்கு விண்ணப்பங்கள் இருக்கக்கூடும். அவைகளுக்காக உங்களுக்கு ஜெபம் ஏறெடுக்கப்படாமல் இருந்திருக்கலாம். உங்கள் கைகளை உயர்த்தி அதை தெரியப்படுத்துங்கள். நாம் ஜெபம் செய்யும் போது இன்று காலை எழுந்து நிற்போம். அது உங்கள் தேகம் உள்ள நிலைக்கு (Posture) ஒரு மாறுதலை அளித்து, ஒருக்கால் சற்று உதவியளிக்கும். ஜெபத்திற்குப் பிறகு, நான் வார்த்தையை படித்து முடிக்கும் வரைக்கும், நீங்கள் நின்று கொண்டிருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். நாம் தேவனுடைய வார்த்தையை படிக்கும் போது, பயபக்தியாய் நின்று கொண்டிருப்பது சிறந்ததென்று எண்ணுகிறேன்.————————————————————————————————————————————————————————- 29எங்கள் பரலோகப் பிதாவே, எங்களுக்குத் தெரிந்த வரைக்கும் நாங்கள் தாழ்மையுள்ளவர்களாய், உலக வாஞ்சையும் இன்பங்களையும் எங்கள் இருதயங்களிலிருந்து நீக்கிவிட்டு வருகிறோம். உங்கள் சகோதரன் எங்களிடம் எடுத்துரைத்தது போன்று, “கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே எங்களுடைய பெலன்”. உமது சமுகத்தில் நாங்கள் வந்து, நாங்கள் விரும்பும் எந்த விண்ணப்பத்தையும் உம்மிடம் ஏறெடுக்க நாங்கள் பெற்றுள்ள சிலாக்கியத்திற்காக, மகிழ்ச்சியுள்ள இருதயங்களோடு உம்மிடம் வருகிறோம். நாங்கள் உமது வார்த்தையை நோக்கும் போது, எங்களுக்கு மகிழ்ச்சியுண்டாகிறது. நாங்கள் விசுவாசித்தால், அது எங்களுக்கு அருளப்படும் என்று வாக்களிக்கப்பட்டது. என்றென்றும் உயிரோடிருக்கிற நித்திய தேவன் அத்தகைய வாக்குத்தத்தத்தை அளித்துள்ளார் என்பதைக் காட்டிலும் வேறெது இருதயத்துடிப்பு கொண்ட ஒரு மனித இருதயத்தை சிலிர்க்கச் செய்ய முடியும்? கர்த்தாவே, எங்களை மன்னியும். நாங்கள் பாவம் செய்திருந்தால், அல்லது உமக்கு அதிருப்தியை விளைவிக்க ஏதோவொன்றைச் செய்திருந்தால், இவைகளை நாங்கள் கேட்பதற்கு முன்பாக ''நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், நாம் வேண்டிக் கொள்ளுகிறதெதுவோ அதைப் பெற்றுக் கொள்ளுகிறோம்'' என்று எழுதியிருக்கிறது என்று நாங்கள் அறிவோம். நாங்கள் செய்த எல்லாவற்றையும் எங்களுக்கு மன்னியும். கர்த்தாவே, எங்களை இரக்கத்தோடும் அனுதாபத்தோடும் நோக்கிப் பாரும். கர்த்தாவே, நாங்கள் எவ்வளவு பரிதாபமுள்ளவர்கள்! மரித்துப் போகக் கூடிய மானிடர்களாகிய நாங்கள், இவ்வுலகில் ஊர்ந்து சென்று, பாவமுள்ள இந்த இடத்தில் காலங்கழித்து வருகிறோம். ஆனால் எங்கள் இருதயத்தின் ஆழத்தில், என்றாகிலும் ஒரு நாள் ஒருவர் வந்து, எங்களை இந்த இடத்திலிருந்து மேலான இடத்துக்கு உயர்த்துவார் என்பதை அறிந்துள்ளோம், அதில் நாங்கள் களிகூருகிறோம். இங்கு ஏறெடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு விண்ணப்பத்துக்காகவும் நான் ஜெபிக்கிறேன். உயர்த்தப்பட்ட கரங்களுக்குப் பின்னால் என்ன உள்ளதென்பதை நீர் அறிந்திருக்கிறீர். கர்த்தாவே, அதை அவர்களுக்கு அருளுவீராக. எனக்காகவும் இன்று காலை நான் ஜெபித்துக் கொள்கிறேன். எனக்கு பெலத்தையும், சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க தெளிவான சத்தத்தையும் தாரும். கிறிஸ்துமஸ் காலத்தை நாங்கள் கொண்டாடுகின்ற இவ்வேளையில் எங்களை ஒருமித்து ஆசீர்வதிக்க வேண்டுமென்று உம்மை வேண்டிக் கொள்கிறோம். கர்த்தாவே நாங்கள் உண்மையான கிறிஸ்துமஸ் ஆவியைக் கண்டுகொண்டு, அது எங்களுடன் என்றென்றைக்கும் தங்கியிருக்கும்படி அருள்புரியும். நாங்கள் இதை இயேசுவின் நாமத்திலும் அவர் நிமித்தமாகவும் கேட்கிறோம். ஆமென். 30நீங்கள் சற்று நேரம் எழுந்து நிற்பீர்களானால், இன்று காலை நான் மீகாவின் புஸ்தகத்திலிருந்து ஒரு பாகத்தையும், பின்பு எபிரெயர் 12ம் அதிகாரத்திலிருந்து மற்றொரு பாகத்தையும் படிக்க விரும்புகிறேன்... இன்று காலை கிறிஸ்துமஸ் செய்தியையளிக்க இதிலிருந்து ஒரு பொருளைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அது எபிரெயர் 12:25. இன்று காலை நான் படுக்கையைவிட்டு எழுந்தவுடனே துரிதப்பட வேண்டியதாயிருந்தது. எனவே நான் எல்லாவற்றையும், நான் விரும்பினதை அதனதன் இடத்தில் எழுதி வைக்கமுடியவில்லை. நான் மீகா முதலாம் அதிகாரத்தில் 2ம் வசனத்திலிருந்து படிக்கிறேன். சகல ஜனங்களே, கேளுங்கள்; பூமியே, அதிலுள்ளவைகளே, செவி கொடுங்கள்; கர்த்தராகிய ஆண்டவர், தம்முடைய பரிசுத்த ஆலயத்திலிருக்கிற ஆண்டவரே, உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருப்பார், இதோ, கர்த்தர் தமது ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வருகிறார்: அவர் இறங்கிப் பூமியின் உயர்ந்த இடங்களை மிதிப்பார். மெழுகு அக்கினிக்கு முன்பாக உருகுகிறது போலவும், மலைகளிலிருந்து பாயுந்தண்ணீர் தரையைப் பிளக்கிறது போலவும், பர்வதங்கள் அவர் கீழே உருகி, பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும். மீகா.1:2-4 எபிரெயர் 12 ம் அதிகாரம் 25 ம் வசனத்தில் இவ்வாறு வாசிக்கிறோம். பேசுகிறவருக்கு நீங்கள் செவிகொடுக்க மாட்டோமென்று விலகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் பூமியிலே பேசினவருக்குச் செவி கொடுக்கமாட்டோமென்று விலகினவர்கள் தப்பி போகாமலிருக்க, பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டு விலகினால் எப்படித் தப்பிப் போவோம்? எபி.12:25 இப்பொழுது, கர்த்தராகிய தேவனே, வாசிக்கப்பட்ட உமது வார்த்தையுடன் உமது ஆசீர்வாதங்களைக் கூட்டித் தந்து, நாங்கள் அறிய வேண்டுமென்று நீர் விரும்புகிறவைகளை எங்கள் ஒவ்வொருவருக்கும் இன்று தந்து, நாங்கள் இவ்விடம் விட்டுச் செல்லும் போது உமது சமுகத்தில் இருந்தோம் என்னும் உணர்ச்சியைக் கொண்டவர்களாய், ஒரு புது நோக்கத்துடனும், மேலான புரிந்து கொள்ளும் தன்மையுடனும், இக்கட்டிடத்தில் நாங்கள் நுழைந்த போது இருந்ததைக் காட்டிலும் மேலான தீர்மானத்துடனும் செல்ல அருள்புரியும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென் (நீங்கள் உட்காரலாம்) 31கிறிஸ்துமஸுக்கு இது வினோதமான வேத வாசிப்பு அல்லவா? அப்படி செய்வதற்கு என் நோக்கம் என்னவெனில் இச்சபைக்கு சற்று வித்தியாசமான ஒன்றை அளிக்க வேண்டும் என்பதே. ஏனெனில் வானொலியில் நீங்கள் திரும்பத் திரும்ப, உங்களுக்குத் தெரிந்த அந்த பழையக் கதையையே கேட்டுக் கொண்டிருப்பீர்கள் - கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் வந்து குழந்தையாகிய கிறிஸ்துவைக் கண்டு பிடித்தல், மேய்ப்பர்கள் பணிந்து கொள்ளுதல், நட்சத்திரம் தோன்றுதல் போன்ற கிறிஸ்துமஸ் கதைகள். இன்று இவை நமக்கு மார்க்க சம்பந்தமான நம்பிக்கையை அளித்துள்ளன. அவை மிகவும் நல்லவை. அதற்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். ஆனால் இன்று காலை இச்சபையில்... ஒருக்கால் நமது போதகர் இன்றிரவோ அல்லது அடுத்த ஞாயிரன்றோ, இதன் பேரில் ஒரு செய்தியையளிப்பார். எனவே கிறிஸ்துமஸைக் குறித்த வேறொரு கருத்தை அளிக்கலாமென்று கருதி இப்பொருளைத் தெரிந்து கொண்டேன். இப்பொழுது ஒரு சில வார்த்தைகள். 32இப்பொழுது நீங்கள் இடம் மாற்றிக் கொள்வதைக் காண்கிறேன். சிலர், எழுந்து நின்று மற்றவர்களுக்கு உட்கார இடம் அளிக்கின்றனர். அது நல்லது. விரைவில் நமக்கு போதிய இடம் இருக்கும்... மன்னிக்கவும், இந்த உட்பாதைகளை ஜனங்கள் நிறைந்திருக்க எங்களால் அனுமதிக்க முடியாது. ஏனெனில் தீப்படை அதிகாரி அதற்கு சம்மதிக்கமாட்டார். ஆனால் கர்த்தருக்கு சித்தமானால், நாங்கள் கூடுதல் இடத்தை பெறப் போகின்றோம்; அவர்கள் ஏற்கெனவே அதை துவங்கிவிட்டனர். நம்மால் இயன்றவரை அதை விரைவில் கட்டி முடிப்போம். அது கட்டிமுடிந்த பிறகு வித்தியாசமான இடமாகக் காணப்படும். பழைய கூடாரத்தின் எந்த ஒரு பகுதியும் வெளியே காணப்படாது. அதில் சாயம் தீட்டப்பட்ட கண்ணாடி ஜன்னல்கள் இருக்கும். அதைச் சுற்றிலும் கற்களைப் போன்று தோற்றமளிக்கும் மேல் வெளிப்பூச்சு இருக்கும். அது முற்றிலும் வித்தியாசமானதாயிருக்கும். ஆனால் பழைய கட்டிடம் அப்படியே இருக்கும். ஏனெனில் அதற்கு ஒரு நோக்கம் உள்ளது. பாருங்கள். “பழைய சுவர்கள் அப்படியே இருக்கட்டும் பாருங்கள். அதை நாங்கள் மறைத்து, அதைச் சுற்றிலும் கற்களை வைக்கப் போகின்றோம். அது அப்படியே இருக்கும். 33இப்பொழுது, கிறிஸ்துமஸ். கிறிஸ்துமஸ் என்றால் உண்மையில் என்னவென்பதை இவ்வுலகில் ஜனங்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். கிறிஸ்துமஸ் (C-h-r-i-s-t-rm-a-s) என்பது கத்தோலிக்கரின் சொல்லாகும். அதன் அர்த்தம் ''கிறிஸ்துவின் மாஸ்“ (Christ's mass) என்பதாகும். பாருங்கள். அது ரோம சபையில் தொடங்கி அவர்களால் நியமிக்கப்பட்டது. கிறிஸ்து டிசம்பர் இருபத்தைந்தாம் தேதி பிறக்கவில்லை. அது ”கோட்பாடுகளின் தொகுப்பாகும்'' அது மாத்திரமே. அது முழு உலகமே நொதிக்கிற ''இரணமாயுள்ளது'' என்று தீர்க்கதரிசி கூறினான். அது உண்மை. சுத்தமானது எங்குமே கிடையாது. ஒவ்வொரு விடுமுறையும் ஏதோ ஒன்றுடன் தொடர்பு கொண்டுள்ளது. ஏன், சான்டாகிளாஸ் கிறிஸ்துமஸின் ஸ்தானத்தை எடுத்துக் கொண்டார்- முன்னணையின் பிறப்பை. அவ்வாறே முயல், கோழி, புது தொப்பிகள் போன்றவை உயிர்த்தெழுதலின் ஸ்தானத்தை எடுத்துக் கொண்டன. இவையனைத்திலும் தேவன் எங்கே காணப்படுகிறார்? பாருங்கள்? இதற்கெல்லாம் காரணம் என்னவெனில், மனிதன் வாணிப மனோபாவத்தைப் பெற்றுவிட்டான். கிறிஸ்துமஸ் வருவதற்கு அநேக மாதங்களுக்கு முன்பே அவர்கள் வெகுமதிகளை வாங்கத் தொடங்குகின்றனர். அது அஞ்ஞான பழக்கவழக்கம். அதில் தேவ பக்திகுரியது ஒன்றுமில்லை. ஓ, அவர்கள் “வெகுமதிகளை சாஸ்திரிகளுக்கு கொடுக்கிறோம்'' என்கின்றனர். அது பிசாசின் சாக்கு போக்கு, நீங்கள் ஏதாவதொன்றைக் கொடுக்க விரும்பினால், உங்கள் ஜீவனைக் கிறிஸ்துவுக்குத் தாருங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் கொடுக்காதீர்கள், அவருக்கு தாருங்கள். அதற்காகத்தான் அவர் மரித்தார். அவர் உலகிற்கு வந்த நோக்கம் அதுவே. பாருங்கள்? 34அது சிறு பிள்ளைகளுக்கு சாபக்கேடாக்கும் நிலையை அடைந்துவிட்டது. தெருவிலுள்ள அண்டைவீட்டு பிள்ளைக்கு நிறைய கிடைக்கிறது. ஆனால் மற்ற சிறுவனுக்கோ ஒன்றும் கிடைப்பதில்லை. அவர்கள் ஏக்கத்துடன் நோக்குகின்றனர். அந்த முழு முறையையுமே தவறானது. அவ்வளவுதான். வர்த்தகர்கள் தங்கள் சரக்குகளை இந்த இடங்களில் அதிகமாக விற்கின்றனர். அவர்கள். மூன்று வாரங்களுக்கு முன்பு, சிறு பிள்ளைகளுக்கு சில பொருட்கள் வாங்குவதற்காக என் மனைவி சென்றிருந்தாள். ''எல்லாமே விற்றுவிட்டது. இந்த முறை இரட்டிப்பாக சரக்குகளை வரவழைத்தோம். ஆனால் எல்லாமே விற்றுவிட்டது'' என்றனர். கடையில் வாங்கப்போகும் நேரத்துக்கு மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு முன்பே. ஓ, என்னே ஒரு பெரிய வர்த்தக அமைப்பு - இது! நாம் கிறிஸ்துமஸ் என்று அழைக்கிறோமே, அது எப்படி துவங்கினது என்று உங்களுக்கு தெரியுமா? 'கிறிஸ்துவின் மாஸ்'. இதோ அதன் வரலாறு. அதை ஒரு தாளில் எழுதி வைத்திருக்கிறேன். ஏழு சபை காலங்கள் இங்கு பிரசங்கிப்பதற்கு முன்பே, சென்ற ஆண்டிலேயே நான் ''நிசாயா ஆலோசனை சங்கம்,'' ''நிசாயா ஆலோசனை சங்கத்திற்கு முன்பிருந்த காலம், நிசாயா ஆலோசனை சங்கத்துக்கு பின்பிருந்த காலம்“, ''நிசாயா பிதாக்கள், ஹிஸ்லப் எழுதிய இரு பாபிலோன்கள்,'' ஃபாக்ஸ் எழுதிய இரத்த சாட்சிகளின் புத்தகம் போன்ற புத்தகங்களை எடுத்து படித்தேன். மற்ற போதகர்கள் அதைக் குறித்துச் சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் அதைப் படித்து அறிந்துகொண்டு, ஜனங்களிடம் என்ன எடுத்துரைக்கிறேன் என்பதை உறுதியாக அறிய விரும்பினேன். ஏனெனில் ஜனங்களிடம் நான் உரைப்பவைகளுக்கு நியாயத் தீர்ப்பின் நாளிலே தேவன் நான் பதிலளிக்கும்படி செய்வார். எனவே மற்றவர்கள் கூறுவதை நான் கூற விரும்பாமல், நானே படித்து அதை அறிந்து கொள்ள வேண்டுமென்று விரும்பினேன். 35இப்பொழுது உண்மையான கிறிஸ்துமஸ், கிறிஸ்து, அதை நிரூபிக்க முடியுமென்று விசுவாசிக்கிறேன்... எப்படி சிருஷ்டிகரை கண்டு உயிர்த்தெழுதலை நிரூபிக்க முடியுமோ, அது போன்று. அவர் இந்த தாவர ஜீவன் அனைத்தையும் படைத்தார். அவர் நோக்கத்தை நிறைவேற்றும் அனைத்துமே சாகவேண்டும். அது செத்தால், மறுபடியும் பிழைக்கிறது. ஏனெனில் அதற்கு நிலையான ஜீவன் உள்ளது. அது மறுபடியுமாக பிழைக்கக் கூடிய ஒரே வழி ஜீவனுள்ள வித்தின் மூலமே. பாருங்கள்? தேவன் தம்மை அந்த சிருஷ்டிப்பின் மூலம் வெளிப்படுத்துகின்றார். நமது மத்தியில் உள்ள அஞ்ஞான தெய்வங்கள் அனைத்துமே சரியானதல்ல என்பதை அது காண்பிக்கின்றது. பாருங்கள், அவை தத்துவங்களும் கற்பனைகளும் மாத்திரமே. ஆனால் வானத்தையும் பூமியையும் படைத்த அவர், தமது சிருஷ்டிப்பின் மூலமாகவே தம்மை வெளிப்படுத்தி, அவருடைய திட்டத்தில் அவர் என்னவாயிருக்கிறார் என்பதைக் காண்பிக்கிறார். கிறிஸ்து தேவனுடைய குமாரனாக பிறந்தபோது, அவர் ஏன் தொழுவத்தில், தானியக் களஞ்சியத்தில் பிறந்து, தொழுவத்தில் கிடத்தப்பட வேண்டும் என்று எப்பொழுதாவது நீங்கள் சிந்தித்துப் பார்த்ததுண்டா? ஏனெனில் அவர் ஆட்டுக் குட்டியாயிருந்தார். எனவே அவர் வீட்டில் பிறக்க முடியாது. ஆட்டுக் குட்டிகள் வீட்டில் பிறப்பதில்லை. இதை கவனித்தீர்களா?அவரை அவர்கள் கல்வாரிக்குக் கொண்டு சென்றபோது, அவரால் ஓடிப்போக முடியவில்லை. சிலுவை அவர் மேல் சுமத்தப்பட்டது. அவருடைய முதுகிலிருந்து இரத்தம் வெளிவரும் வரைக்கும் அவர் அடிக்கப்பட்டார். அவர்கள் அவரைக் கொண்டு போனார்கள். அடிக்கப்படும்படிக்கு ஆட்டுக்குட்டியானவரை அவர்கள் கொண்டு போனார்கள். பாருங்கள்? அவர் ஒரு ஆட்டுக்குட்டி. இயற்கை அனைத்துமே அவர் யாரென்று சாட்சி பகருமானால்... ஆட்டுக் குட்டிகள் எப்பொழுது பிறக்கின்றன? டிசம்பரிலா அல்லது ஏப்ரலிலா? நிச்சயமாக. அவர் டிசம்பரில் பிறந்தார் என்று கருதுவது அர்த்தமற்ற ஒருசெயல். 36இது ரோமன் கத்தோலிக்க சபையால் - அது ரோமாபுரியில் கத்தோலிக்க சபையாக ஆவதற்கு முன்பு - ஏற்படுத்தப்பட்டது. சுமார் 86, 106, அல்லது 206ம் ஆண்டில் ரோம அஞ்ஞானிகள் ஜூபிடரை வழிப்பட்டனர் என்று நாம் காண்கிறோம். அது சூரிய தேவன். அவர்கள் அஸ்தரோத்தையும் வழிப்பட்டனர். அது சந்திர தேவதை. அது வானத்தின் ராணி. இதை அவர்கள் நிலைநாட்ட, அவர்கள் அஸ்தரோத் என்னும் வானத்தின் ராணி இனி இல்லையென்றும் அவள் தன்னை மரியாளில் பிரதிபலிக்கிறாள் என்றும் கூறினர். எனவே அது இப்பொழுதும் விக்கிரகாரதனையாக அமைந்து, கிறிஸ்தவ மார்க்கத்தை விக்கிரகாராதனையுடன் இணைக்கின்றது. அவர்கள் ஜூபிடராகிய சூரிய தேவனை வழிபட்டு, அவனுடைய பிறந்த நாளுக்கு மரியாதை செலுத்தினர். டிசம்பர் முதலாம் தேதிலிருந்து இருபத்து ஐந்தாம் தேதி வரைக்கும் அது மாறுவதில்லை, அது மகர ரேகையைக் கடக்கின்றது. நான் செய்தித்தாளிலிருந்து ஒரு தகவலை வெட்டி எடுத்திருக்கிறேன். என்றாவது அதை உங்களுக்குப் படித்துக் காண்பிக்க விரும்புகிறேன். அது உங்களுக்கு அதிர்ச்சியுண்டாக்கும். இங்கு நதிக்கரையில் அன்று என்ன நடந்தது என்பதைக் குறித்து பேசி வருகின்றீர்கள். அதை உறுதிப்படுத்த, எருசலேமில் கண்டு பிடிக்கப்பட்டதை உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். சில வாரங்களுக்கு முன்பு அது செய்தித்தாளில் வெளியானது. சில வாரங்களுக்கு முன்பு எருசலேமில் அவர்கள் ஒன்றைக் கண்டு பிடித்தனர். அதே சமயத்தில் தேவதூதன் இங்கு பிரத்தியட்சமாகி, இந்த ஊழியத்தை அனுப்பினதை அது நிச்சயமாக உறுதிப்படுத்துகின்றது. ஆம். பாருங்கள்? சில வாரங்களுக்கு முன்பு வரைக்கும் அதை நான் அறிந்திருக்கவில்லை. இதோ அது செய்தித்தாளில் வெளியாகியுள்ளது. 37கவனியுங்கள், அது அதைக் கடக்கும் போது, பாருங்கள். டிசம்பர் இருபத்தொன்றாம் தேதிக்குப் பிறகு நாட்கள் சிறிது குறுகிக் கொண்டே, இல்லை, ஜூலை வரைக்கும் நீண்டு கொண்டே வரும். பிறகு அது குறுகிக் கொண்டே வந்து... அது ஓய்வெடுக்கும் நேரம். ரோம அஞ்ஞானிகள் அது சூரிய தேவனின் பிறந்த நாள் என்று கூறினர். டிசம்பர் முதலாம் தேதியிலிருந்து இல்லை, டிசம்பர் இருபத்தொன்றாம் தேதியிலிருந்து டிசம்பர் இருபத்தைந்தாம் தேதி வரைக்கும் அவர்கள் ரோம் சர்க்கஸ் வைத்திருந்தனர். அச்சமயத்தில் இரதங்களின் ஓட்டப்பந்தம் போன்றவை நிகழ்ந்தன. அப்பொழுது கிறிஸ்தவர்கள் - ரோம கிறிஸ்தவர்கள் - அஞ்ஞானிகளையும் கிறிஸ்தவர்களையும் ஒன்று சேர்க்கக் கருதி, அஞ்ஞானிகளின் பழக்க வழக்கங்களை சேர்த்துக் கொண்டனர். அவர்கள், ''அது சூரிய தேவனின் (Sun-god's) பிறந்த நாளாக இருந்தால், அதை தேவனுடைய குமாரனின் (Son of God's) பிறந்த நாளாக செய்து விடுவோம்“ என்றனர். அங்கே தான் உங்கள் டிசம்பர் இருபத்தைந்தாம் தேதி மாஸ், கிறிஸ்துமஸ் தொடங்கினது. ஓ, என்ன பயங்கரமான காரியம்! பாருங்கள்? ''அதை இணைக்க வேறெதாவது நாள் போதாதா?'' என்று நீங்கள் கேட்கலாம். ஆம், ஆனால் கிறிஸ்துவை அஞ்ஞானத்துடன் இணைப்பதற்கு? அவர் எதை ஒழிப்பதற்காக தோன்றினாரோ, அதனுடன் அவர்கள் அவரை இணைத்துவிட்டனர். பாருங்கள்? அது தவறான செயல். சான்டாகிளாஸ் என்பவர் ஜெர்மனி நாட்டிலிருந்த ஏதோ ஒரு வயோதிபர். அவருடைய பெயர் கிரிஸ்கிரிங்கில். அவர் கிறிஸ்துவின் மாஸ் நாளன்று சுற்றிலும் சென்று பிள்ளைகளுக்கு வெகுமதிகளைக் கொடுப்பது வழக்கம். அவர் ஒரு கத்தோலிக்கர். அவர்கள் அவரைப் பரிசுத்தவானாக்கிவிட்டனர். இப்பொழுது அவர் செயின்ட் நிக்கோலாஸ். பாருங்கள்? நான் இங்கு... அவர்கள்... அது உங்களுக்குத் தெரியும்? பாருங்கள், அது சபைக் காலங்களின் புத்தகத்தில் உள்ளது. 38இன்று காலை நான் கூற விரும்புவது என்னவெனில், ஆயிரத்து தொளாயிரம் அல்லது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்து வந்தபோது இவ்வுலகம் இருந்த நிலையைக் காட்டிலும், வரவிருக்கும் கிறிஸ்துமஸ் நாளன்று அது மேலான நிலையில் இல்லை என்பதே. அதில் எவ்வித வித்தியாசமும் இல்லை. அது அதே நிலையில் உள்ளது. அப்பொழுது அது என்ன நிலையில் இருந்ததோ, அதே நிலையில் இப்பொழுதும் உள்ளது. அதிலிருந்து நான் ஒரு தீர்மானத்துக்கு வந்து... அல்லது நான் பேசுவதற்கு வேண்டிய பொருளைத் தெரிந்து கொண்டால், அது, ''உலகம் விழுந்து போதல்“ என்னும் தலைப்பு கொள்ளும். ஆயிரத்து தொளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்துமஸ் அன்று கிறிஸ்து வந்த போது, உலகம் விழுந்து போன நிலையில் இருந்தது. உலகம் மாசுபட்டிருந்தது. மதசம்பந்தமான உலகம் மாசுபட்டிருந்தது. ரோம் உலகம், நல்லொழுக்கம் விஷயத்தில், மிகவும் தாழ்வான நிலையில் இருந்தது. ஓ, உலகத்தின் நடத்தை கெட்ட தன்மை! யூதர்கள் தங்கள் தேவனைப் புறக்கணித்து, தங்கள் புனிதமான பயபக்தியான பண்டிகைகள் அனைத்தையும் சடங்காச்சாரமாக மாற்றி அமைத்தனர். தேவன் அவர்களை விட்டுவிலகிச் சென்றார். முழு உலகத்தையும் ஒன்றாக சேர்த்து அணைக்க, ஏதோ ஒன்று நிகழ வேண்டுமென்று அவர்கள் அறிந்திருந்தனர் - முழு உலகமும் அறிந்திருந்தது. அது விழுந்து போய்க் கொண்டிருந்தது. அதை விழாமல் ஒன்றாக வைக்க, என்ன நடக்கும் என்பதைக் குறித்து ஒவ்வொரு தேசமும் தனக்குச் சொந்தமான வழியில், ஏதோ ஒன்று நிகழ, அல்லது யாராவது ஒருவர் தோன்றி அதை ஒன்றாகப் பிடித்து வைக்க எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தது. 39இன்றைய காட்சியும் அதுவாயிராமல் போனால், எனக்கு உலகத்தைப் பற்றி தெரியவில்லையென்று அர்த்தம். அதை ஒன்றாகப் பிடித்து வைக்க, அது ஏதோ ஒன்றை எதிர் நோக்கியிருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எவ்வாறிருந்ததோ, அவ்வாறே இன்றும் உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அதை ஒன்றாகப் பிடித்து வைக்க, உலகமானது மேசியாவை எதிர் நோக்கியிருந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தேவன் உலகிற்கு ஒரு மேசியாவை அருளினார். ஏனெனில் நாம் ஏதாவதொன்றை எதிர்நோக்கி, அதன் வருகைக்காக காத்திருப்போமானால், தேவன் அதை நமக்கு அனுப்புவார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அது இருந்த அதே நிலையை அடைந்துள்ளது. அது விழுந்து போய்க் கொண்டிருக்கிறது - நாடுகள். எங்கும் அஸ்திபாரமே இல்லை. கம்யூனிஸம், கத்தோலிக்க மார்க்கம், பிராடெஸ்டெண்டு மார்க்கம், அரசியல் நல்லொழுக்கம் இவையனைத்துமே விழுந்து போய்விட்டது. அவர்கள் ஒரு மேசியாவுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கின்றனர். நான் இதைத்தான் கூற விரும்புகிறேன். அவர் வருவரானால், அவரை நாம் ஏற்றுக் கொள்வோமா, அல்லது அவர்கள் செய்தது போல் நாமும் செய்வோமா? அவரை நாம் ஏற்றுக் கொள்ள மறுப்போமா? நமக்கு உண்மையில் என்ன தேவையென்று நமக்குத் தெரியுமா? சில சமயங்களில் நமக்குத் தேவை உண்டாகின்றது. நமது விருப்பங்களுக்காக நாம் ஜெபிக்கிறோம். சில சமயங்களில் நமது விருப்பங்கள் நமது தேவைகள் அல்ல. நமது தேவை என்னவென்று நாம் புரிந்து கொள்வதில்லையென்று நாம் உணரவேண்டும். நமக்கு தெரியுமென்று நாம் நினைக்கிறோம். தேவன் நமது தேவைகளையெல்லாம் தருவதாக வாக்களித்துள்ளார். அவர் நிச்சயம் செய்வார். 40ஏழு வயது நிரம்பிய என் சிறு மகன் ஜோசப் என்னுடன் வேட்டைக்கு வர வேண்டுமென்றும், என் தானியங்கி துப்பாக்கியை அவன் தோட்டாவினால் நிறைக்க வேண்டுமென்றும் ஒட்டாரம் பிடித்து அழுது, “அப்பா, என்னால் முயலைக் கொல்ல முடியும்'' என்று கூறுகிறான் என்று வைத்துக்கொள்வோம். அவ்வாறு அவன் செய்ய நான் சம்மதிக்க மாட்டேன். அவனுக்கு அது தேவையென்று அவன் நினைக்கிறான். ஆனால் அவனைக் காட்டிலும் எனக்கு அதிகமாகத் தெரியும். உங்கள் ஒன்றரை வயது குழந்தை, நீங்கள் சவரக் கத்தியினால் சவரம் செய்வதைக் கண்டு, அந்த சவரக் கத்தி வேண்டுமென்று அழுது ஒட்டாரம் பிடிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் சவரம் செய்து கொள்வதை அவன் காண்கிறான், அவனும் அதையே செய்ய வேண்டுமென்று விரும்புகிறான். அவனுக்கு எது நல்லதென்று உங்களுக்குத் தெரியும். அவன் அதை எடுக்க நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள். நீங்கள் புத்திசாலியான தந்தையாயிருந்தால், நீங்கள் அப்படி செய்யமாட்டீர்கள். அவன் அதை எடுக்காதபடிக்கு தடுப்பீர்கள். நாமும் அநேக சமயங்களில், தேவன் நமக்கு என்ன தேவையென்று அறிந்திருக்கிறாரோ, அதற்குமுரணானவைகளை விரும்புகிறோம். அவர் அதை நமக்குத் தரமாட்டார். 41அவர்கள் மேசியாவுக்காக ஜெபம் செய்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு மேசியா அவசியமிருந்தது. ஆனால் காரியம் என்னவெனில், அவர்களுக்கு விருப்பமான வழியில் அவரைப் பெற அவர்கள் விரும்பினர். தேவன் தமது சொந்த வழியில் அவரை அனுப்பினார், அவர்களோ அவரைப் புறக்கணித்தனர். இன்றைக்கும் அவர்கள் அதையே செய்கின்றனர். அவர்கள் மறுபடியும் அவரைப் புறக்கணிக்கின்றனர். அன்று அவர்கள் செய்த அதையே இன்று செய்கின்றனர். ஏன்? அதே காரணம்தான், அதே காரணம். அவர் அப்பொழுது வந்தார், அவர் வந்தாரென்று நாமறிவோம். அவர்கள் அவர்களிடம் வந்தார், ஆனால் அவர் எவ்வாறு வர வேண்டுமென்று அவர்கள் விரும்பினார்களோ, அவ்விதமாக அவர் வரவில்லை. இன்றைக்கு தேவன் ஒன்றை நமக்கு அனுப்பும் போது, அது நமக்கு வேண்டாம். நமது ஸ்தாபன ருசியை அனுசரித்து அது வருவது கிடையாது. நமது வேத சாஸ்திர கருத்துக்களுடன் பொருந்தும் வண்ணம் அது வருவதில்லை. ஆனால் அதற்காகத் தான் நாம் ஜெபித்து வந்தோம். தேவனுக்கு முன்பாக நாம் ஏறெடுத்த அந்த விண்ணப்பத்துக்கு செவி கொடுத்து தேவன் அதை நமக்கு அனுப்பினார், நாமோ அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம். நாம் தேவனிடத்திலிருந்து ஒரு கிறிஸ்துமஸ் வெகுமதியை விரும்புகிறோம். ஆனால் நாம் விரும்பும் வழியில் வரவேண்டுமென்று நினைக்கிறோம். தேவனோ நமது தேவைக்கு ஏற்ற வழியில் அதை அனுப்புகிறார். நாட்டுக்கு என்ன தேவையென்றும், சபைக்கு என்ன தேவையென்றும் அவர் அறிந்திருக்கிறார். நமக்குத் தெரியுமென்று நாம் நினைக்கிறோம். ஆனால் உண்மையில் அது என்னவென்று அவருக்குத்தான் தெரியும். 42சில நிமிடங்களுக்கு முன்பு நான் கூறினது போன்று, உலகம் மறுபடியும் விழுந்து போகின்ற நிலையில் நாம் இந்த கிறிஸ்துமஸை அடைந்துள்ளோம். நான் இங்கு குறிப்பு எழுதி வைத்துள்ள சிலவற்றை இங்கு கூறலாம். உலகத்தின் நடத்தை கெட்ட முறையைப் பாருங்கள். அது இவ்வளவு தாழ்வாக எப்பொழுதும் இருந்ததில்லை. ஒரு கட்டுரை என்னிடமுள்ளது. அதிலிருந்து சில வரிகளைப் படிக்க விரும்புகிறேன். இது ஆப்பிரிக்காவின் ஒரு செய்தித்தாளில் ஆப்பிரிக்காவின் ஸ்டாண்டர்ட் பேரர் (Standard bearer of Africa) என்னும் பெயர் கொண்ட செய்தித்தாளில் -காணப்படுகிறது. அது இவ்வாறு கூறுகின்றது: ''அடக்கம் என்பது மரித்துவிட்டது. பெண்களின் அடக்கம், அந்த அழகான தன்மையை தேவன் மானிட குடும்பத்தாரில் வைத்து அதன் நல்லொழுக்கத்தைப் பாதுகாத்து வந்தார். ஆனால் அது இன்று மரித்துக் கொண்டு வருகிறது. களங்கமற்ற ஸ்திரீகளும் பெண்களும் நாகரீகத் தேவதைக்கு முன்னால் தங்கள் முழங்கால்களை முடக்கி, மிகவும் அவமானமுள்ள நவீன அலங்காரப் போக்குக்கு தங்களை அர்ப்பணிக்கத் தயங்குவதில்லை. இங்கு சுமார் ஒரு பக்கம் எழுதி வைத்திருக்கிறேன். “இப்படிப்பட்ட ஒன்றை நான் கேட்டதேயில்லை! 'செக்ஸ் அப்பீல்' என்பது கிறிஸ்தவர்களாலும் கிறிஸ்தவரல்லாதவர்களாலும் நியாயமானதாகக் கருதப்படுகிறது.'' 43இந்த விலையேறப்பெற்ற சகோதரன் ஆர்கன் பிரைட்டும் நானும் இன்று விடியற்காலை சாலையில் வந்துகொண்டிருந்த போது இந்த விஷயத்தைக் குறித்து பேசிக்கொண்டு வந்தோம். நாணத்தால் முகம் சிவக்கும் அளவிற்கு போதிய அடக்கம் கொண்ட பெண்ணைக் காண்பது அரிது. அவர்கள் அவலட்சணமான அநேக ஹாஸ்ய துணுக்குகளைக் கேட்டிருப்பதனால், அவர்களை முகம் சிவக்க வைப்பதற்கு கூற உங்களிடம் ஒன்றும் கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் சிறு பையனாயிருந்தபோது, ஒரு சிறு தவறு நேர்ந்தாலும் கூட, அவர்கள் முகம் சிவந்துவிடும். ஒரு சிறு பெண்ணின் உள்பாவாடை பள்ளிக்கூடத்தில் வெளியே தெரிந்து கொண்டிருந்தது. நான் நின்றுகொண்டு ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தேன். இந்த பெண், வெளியே தெரியும் அந்த பெண்ணின் உள்பாவாடையைக் கண்ட மாத்திரத்தில் அவளுடைய சிறு முகம் சிவந்து, அவள் என்னிடமிருந்து ஓடிப்போய்விட்டாள் - பதினாறு வயதுள்ள பெண். ஏன், என்ன ஒரு... அது நமது நல்லொழுக்கத்தைப் பாதுகாக்க தேவனால் அளிக்கப்பட்ட தன்மை. நான் ஏன் இன்று நாம் அடைந்துள்ள இப்படிப்பட்ட மூடத்தனமான செயல்களுக்கு விரோதமாய் கூக்குரலிடுகிறேன் என்று புரிகிறதா? நாம் நம்மை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்கிறோம். ஆனால் பெண்கள் இவ்வாறு அவலட்சணமாய் உடுத்தி, கேவலமாய் நடந்து கொள்கின்றனர். ஆண்களும் சிகரெட்டுகள் புகைத்தும் மற்ற செயல்களைப் புரிந்தும் தங்கள் போக்கில் சென்று கொண்டிருக்கின்றனர். பிரசங்க பீடத்திலுள்ள போதகர்கள் இதனுடன் ஒத்துப்போய், இதற்கு விரோதமாய் பிரசங்கிப்பதற்கு அவர்கள் உங்களை பிரசங்க பீடத்திற்கு வர அனுமதிக்க மாட்டார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் என்ன செய்தனரோ அதையே நாம் செய்து கொண்டிருக்கவில்லையா என்று வியக்கிறேன். 44இஸ்ரவேல் ஜனங்கள் அப்படி செய்தபோது, தேவன் ஒரு ஏசாயாவை எழுப்பினார் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள், அந்த காலம் கடந்து போய், அவர்கள் மறுபடியும் அவ்வாறு செய்யத் தொடங்கினபோது அவர் ஒரு எரேமியாவை எழுப்பினார். அப்படியே காலங்கள் தோறும் செய்து கொண்டே வந்தார். தேவன் தமது வழிமுறைகளை மாற்றிக் கொள்வதில்லை. அவர் நித்திய தேவன். அவரால் மாறமுடியாது. அவர் முதலாவதாக கொண்டிருந்த கருத்து சிறந்தது, அது எப்பொழுதுமே அவ்வாறே நிலைத்திருக்க வேண்டும். இன்றைக்கு நமக்குத் தேவை, கிறிஸ்துவின் மேசியாவின் தன்மையினால் அபிஷேகம் பண்ணப்பட்ட ஒரு செய்தியே, ஆனால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவார்களா? அவர்கள் அதற்காக ஜெபிக்கின்றனர், ஆனால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா? இல்லை, ஐயா, அவர்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் முதலில் செய்தது போல், இப்பொழுதும் அதை சிலுவையில் அறைகின்றனர். மனித இருதயம் வஞ்சகமுள்ளது. நல்லொழுக்கமின்மை, தேசங்களுக்கிடையே சச்சரவு. நல்லொழுக்க விஷயத்தில் இன்று உலகம் அடைந்துள்ள விழுந்து போகும் நிலையைப் போல் எப்பொழுது இருந்திருக்கிறது? இதைத் தொடங்கினது யார்? அமெரிக்கர்களாகிய நாமே. அண்மையில் நான் ரோமாபுரியிலுள்ள சான் ஆஞ்சலோவுக்கு சென்றிருந்தபோது, அங்குள்ள கல்லறையில் இப்படி எழுதப்பட்டிருந்தது. ''அமெரிக்கப் பெண்களே, நீங்கள் கல்லறைத் தோட்டத்தில் பிரவேசிக்கும் முன்பு, உடைகளை அணிந்து, மரித்தோரை கெளரவியுங்கள்.'' மதாபிமானமுள்ள ஒரு தேசம், தேவனுக்குப் பயப்படுவதாகக் கருதப்படும் ஒரு தேசம்! நாம் கிறிஸ்தவர்களாகிய நமது முன்னோர்களின் கடந்த கால அனுபவங்களின் பேரில் வாழ்ந்து வருகிறோம். 45தேசங்களுக்கிடையே சச்சரவு. இப்பொழுது தேசங்களுக்கிடையே காணப்படும் பிரிவினையும் விழுந்து போதலையும் போல் வேறெந்த காலத்திலும் இருந்ததில்லை. நீங்கள் பத்திரிகை ஆசிரியர்கள் எழுதும் தலையங்கம், வானொலி செய்தி, விரிவுரையாளர்களின் உரைகள், முன்னுரைப்போரின் விமர்சனம் போன்றவைகளைக் கண்டிருப்பீர்கள். அவர்கள் வெடிகுண்டுகளைக் குறித்தும் அவை என்ன செய்யமுடியும் என்பதைக் குறித்தும் அறிவித்து வருகின்றனர். இன்றைக்கு ஒரு சிறு தேசம் கூட முழு உலகத்தையும் அழித்து விட முடியும். அவைகளுக்கிடையே சமாதானம் இல்லை. அம்முறையில் நீங்கள் சமாதானத்தைக் கொண்டு வர முடியாது. சமாதானமும் ஐக்கியமும் அரசியல் மூலம் ஒருக்காலும் வராது. அது கிறிஸ்துவின் மூலம் மாத்திரமே வரும். ஆனால் அவர்களுக்கு அதை ஏற்றுக்கொள்ள மனதில்லை. இங்கே சில காரியங்களை என்னால் கூறமுடியும். நமது சொந்த அரசியலிலேயே ஊழல், அரசியல் மிகவும் மோசமாகிவிட்டது. அன்றிரவு நீங்கள் லூயிவில்லிலிருந்து ஒலிபரப்பாகும் மானிடர் ஒலிபரப்பைக் கேட்டிருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். அவர்கள் தேசம் முழுவதும் அதை ஒலிபரப்புகின்றனர். அவர்கள் வெவ்வேறு பொருள்களின் மேல் எப்பொழுதாவது ஒரு முறை நடத்துகின்றனர். அன்று அவர்கள், திரு. நிக்ஸன் தன் அரசியல் போட்டியில் கலிபோர்னியாவில் தோற்ற பிறகு அரசியலை விட்டு விலகினதைக் குறித்து ஒலிப்பரப்பு ஒன்றை நடத்தி, “அவர் மறுபடியும் அரசியலுக்குத் திரும்ப வருவரா?'' என்பதைக் குறித்து விவாதித்தனர். சகோ. உட்ஸும் நானும் சகோ. சார்லியின் வீட்டுக்கு வந்துகொண்டிருக்கும் வழியில் வானொலியில் இந்த ஒலிப்பரப்பைக் கேட்டோம். நாம் கண்டுகொண்டது என்னவெனில், இங்குள்ள கிழக்கத்திய நாடுகள் அனைத்திலும் மிஸ்ஸிஸிப்பி தொடங்கி பென்ஸில்வேனியா வரைக்கும், இந்த ஒலிபரப்பு சென்ற இடங்களில் எல்லாம், நிக்ஸன் கென்னடியைத் தோற்கடித்தார். ஜனங்கள் ஏறக்குறைய நான்குக்கு ஒன்று என்ற கணக்கில் நிக்ஸனை ஆதரித்து வோட்டு அளித்தனர். அப்பொழுது ஒரு மனிதன், ''கள்ளத் தனமான இயந்திரங்கள் இல்லாமல் இருந்தால், நிக்ஸன் ஜனாதிபதியாகியிருப்பார் என்றார். பார்த்தீர்களா? அரசியலில் ஏமாற்றுதல், அது இருபக்கங்களிலும் அழுகியுள்ளது. அவர்களை நான் குற்றப்படுத்தவில்லை. நானும் என் கைகளை உயர்த்தி, அது ஊழலாயிருக்கும்படி விட்டுவிடுவேன். ஏனெனில் அது உலகத்தின் போக்கில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் உங்கள் கரங்களை கிறிஸ்துவை நோக்கி உயர்த்தி, ”ஆண்டவரே, இதோ வருகிறேன்'' என்று கூறுங்கள். 46தேசங்களுக்கிடையே சச்சரவு. அவர்கள் ஒன்றாக இணைந்திருக்க வேண்டுமென்று நீங்கள் கருதும் இடங்களிலெல்லாம் அவர்கள் பிரிந்துள்ளனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகம் அப்படித்தான் விழுந்து போகும் நிலையில் இருந்தது. இன்றைக்கு அது விழுந்து போகும் அதே நிலையில் உள்ளது. பிறகு சபையில் ஊழல்! ஓ, என்னே! மதசம்பந்தமான ஊழல்! வேதாகமும் பரிசுத்த ஆவியும் இரண்டாயிரம் ஆண்டுகளாக இவ்வுலகில் இருந்த பிறகும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அது எந்த மோசமான நிலையில் இருந்ததோ, அதே விழுந்து போகும் நிலையில் இன்றைக்கும் உள்ளதைக் காண விசித்திரமாய் உள்ளது. மதசம்பந்தமான ஊழல். அரசியல் மதத்திலும், மதம் அரசியலிலும் நுழைந்துவிட்டது. இந்த நிலையில் அதைக் காண்பது பயங்கரமாயுள்ளது. அது அப்படியுள்ளது என்று நானறிவேன். நீங்கள், “சகோ. பிரன்ஹாமே, கிறிஸ்துமஸ் சமயத்தில் நீங்கள் உலகத்தைக் குறித்து இவ்வளவு மோசமான காட்சியை அளிக்கக்கூடாது'' என்று கூறலாம். நீங்கள் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும், நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது என்னவோ அதை அறிந்து கொள்ளுதல் அவசியம்! 47தேவன் ஆசீர்வதிப்பார், ஆனால் அந்த ஆசீர்வாதம் சில பிரத்தியேக சூழ்நிலைகளில், சில நிபந்தனைகளை நீங்கள் அனுசரிக்கும்போது மாத்திரமே வரும். அந்த நிபந்தனைகளை நீங்கள் அனுசரிக்காமல் போனால், ஆசீர்வாதங்களும் தேவனுடைய வாக்குத்தத்தங்களும் உங்களுக்கு எந்த பயனையும் தராது. இஸ்ரவேல் ஜனங்கள் பண்டிகைகளை பரிசுத்தமாயும் பயபக்தியாயும் உத்தமமாயும் ஆசரித்தல், தேவன் அவர்களைச் சந்திப்பதாக வாக்கருளியிருந்தார். தேவன் அவர்களை சந்தித்தார். ஆனால் அவர்கள் அதை வெறும் குடும்பச் சடங்காச்சாரமாக ஆக்கினபோது, தேவன் அவர்களைச் சந்திக்க மறுத்துவிட்டார். அவர்கள் நாற்றமெடுத்துவிட்டார்கள் என்று அவர் கூறினார். இன்றைக்கும் அது அவ்வாறேயுள்ளது. ஆகவே நாம் காரியத்தின் உண்மைக்கும் திரும்ப வேண்டியவர்களாயிருக்கிறோம். சபைகளில் அரசியல் சச்சரவு! இன்றைக்கு நாம் கிறிஸ்தவ மார்க்கத்தின் தொளாயிரம் ஸ்தாபனங்களால் சூழப்பட்டவர்களாய் நின்று கொண்டிருக்கிறோம். ஒரு ஸ்தாபனம் மற்றொரு ஸ்தாபனத்துடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது. இயேசு இவ்வுலகிற்கு வந்த போது அது அவ்வளவு மோசமாக இல்லை. அப்பொழுது நான்கு அல்லது ஐந்து பகுதிகள் மாத்திரமே இருந்தன - பரிசேயர், சதுசேயர் போன்றவர். ஆனால் இப்பொழுதோ நாம் ஏறக்குறைய தொளாயிரம் ஸ்தாபனங்களைப் பெற்றுள்ளோம். இந்த கிறிஸ்துமஸின்போது சபையானது, ஆயிரத்து தொளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்துமஸின்போது இருந்ததைக் காட்டிலும் மோசமான நிலையில் உள்ளது. அது இப்பொழுது மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. ஸ்தாபனங்களுக்கிடையே சச்சரவு! நண்பனே, இதற்கெல்லாம் காரணம் என்ன? பரிசுத்த ஆவியின் ஸ்தானத்தை அரசியல் அபகரித்துக் கொண்டது. 48பரிசுத்தஆவி தேவனுடைய வார்த்தையை எடுத்துக்கொண்டு சபையை வெற்றிக்கு வழி நடத்தவிரும்புகிறது. ஆனால் கல்வி திட்டங்களும், அரசியல் திட்டங்களும், கோட்பாடுகளும், ஸ்தாபனங்களும் அதை தொளாயிரம் திசைகளில் வழி திருப்பிவிட்டன. எனவே சபைக்கு... ''சபை“யென்று அழைக்கப்படுவதற்கு. நான் உண்மையான சபையைக் கூறவில்லை. அது இன்னமும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. ஓ, ஆமாம். அது இன்னமும் அதே விதமாய் உள்ளது. ஆனால் உலகில் ''சபை''யென்று அழைக்கப்படுவது, அது உலகத்தை ஒன்றாக சேர்க்கும் அமைப்பாக உள்ளது. அது இன்று நாம் நல்லொழுக்கம் என்று அழைப்பதையும் உலகத்தின் காரியங்களையும் ஒன்றாக இணைக்கின்றது. ஆனால் அது மாசுபட்டுள்ளது. அதன் தசை நார்கள் அழுகிப் போயுள்ளன. அவள்... சுயநலம் என்னும் கரையான் அதன் அஸ்திபாரத்தையே அரித்துவிட்டது. அது முற்றிலும் உண்மை. அந்நிலையை அடையும் என்று வேதம் கூறுகின்றது. 2:தீமோ:3 ”துணிகரமுள்ளவர்கள், இறுமாப்புள்ளவர்கள், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியர்“ போன்றவை. 49தேசங்களில் அரசியல் அந்நிலையை அடைந்திருப்பதை நாம் காண்கிறோம், ஸ்தாபனங்களில் ஊழலை நாம் காண்கிறோம். இருப்பினும் இவைகளின் மத்தியில் தேவன் வரவேண்டுமென்று நாம் விரும்புகிறோம். தேவன் அந்த சாக்கடையில் நம்முடன் கூட இருக்க வரமாட்டார் - அந்நிலையில் அவர் வர வேண்டுமென்று நாம் விரும்புகிறோம். அவர் அப்படி செய்யமாட்டார். அவர் பரிசுத்தமுள்ளவர். அவர் எது சிறந்தது என்பதை அறிந்திருக்கிறார். நாம் கூப்பிட்டால் அவர் நமக்கு மறு உத்தரவு அருளுகின்றார், அவர் மறு உத்தரவு அனுப்பும் போது, அதை நாம் புறக்கணிக்கிறோம். நமது வழியில் அதைப் பெற நாம் விரும்புகிறோம். தவறென்று நிரூபிக்கப்பட்டுள்ள ஒன்றின் மூலம் நாம் தேவனைப் பெற்று நம்மை இரட்சித்துக் கொள்ள விரும்புகிறோம். சபையே, தயவு கூர்ந்து இதைக் கேள்! தேவனால் உண்டானது என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பதே நம்மை கெடுத்துப் போட்டது. இருப்பினும் நம்மை இரட்சித்துக் கொள்ள அதே முறைமையை நாம் எதிர் நோக்கியிருக்கிறோம். வார்த்தைக்குத் திரும்புங்கள். அதைத்தான் மேசியா கூறுவார். ஆனால் நாமோ அரசியலின் மூலம் இரட்சிக்க முயன்று கொண்டிருக்கிறோம். சபையானது அரசியலின் மூலம் நமது உலகத்தை (சபை உலகத்தை) இரட்சிக்க விரும்புகிறது. இதே சம்பவம் ஒவ்வொரு காலத்திலும் மோசேயின் காலம் முதற்கொண்டு நடந்து கொண்டு வருகிறது. அதே காரியம், அரசியல் ஆள முயலுதல், அது ஊழல் நிறைந்ததாயுள்ளது. அதைச் செய்ய மனிதனுக்கு ஒரு வழியும் இல்லை. சொல்லப்போனால், மனிதனில் நல்லது எதுவுமேயில்லை. அதனால் தான் அவன் மரிக்கவேண்டும். 50உலகத்தை இந்த நிலையில் நாம் காணும்போது, ஒவ்வொரு காலத்திலும் உலகம் விழுந்து கொண்டேயிருக்கிறது. உலகம் அந்நிலையை அடையும்போது, ஜனங்கள் ஜெபிக்கின்றனர். ஜனாதிபதியும் கூட (அது என்ன?) பத்து நிமிடம் அல்லது ஒரு மணி நேரம் ஜெபம் செய்யும்படி வேண்டுகோள் விடுக்கிறார். அதனால் ஒரு உபயோகமுமில்லை. நமக்கு தேவை ஜெபமல்ல, ஆனால் மனந்திரும்புதல், நாம் புரியும் செயல்களைப் புறக்கணித்து, அதை விட்டு விலகுதல், தேவனிடத்தில் திரும்புங்கள் அரசியலும் சபைகளும் எனக்கு அளிக்கும் பாதுகாப்பைக் காட்டிலும் என் ஆறுதலை நான் தேவனுடைய வார்த்தையின் மேலும், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் மேலும், கிறிஸ்துவின் சமுகத்தின் மேலும் கட்டுவதையே விரும்புவேன். நிச்சயமாக. ஏனெனில் அது நிலைநிற்குமென்று நானறிவேன். 51நமக்கு ஒரு தேசம் இருந்திராமல், தேவனுடைய தேசம் - தேவனுடைய ராஜ்யம் - மாத்திரம் இருந்திருக்குமானால், நாம் மேலான நிலையில் இருந்திருப்போம். தேவன் எப்பொழுதுமே பதிலளித்து அவர்களுக்கு உதவியை அனுப்புகிறார், அவர்களோ அதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். தேசமானது இப்படிப்பட்ட நிலையை அடையும்போது, தேவன் உத்தரவு அருளுகிறார். உலகமானது விழுந்து போகும் நிலையை அடையும் போது, தேவன் எப்பொழுதுமே அவர்களுடைய ஜெபத்துக்கு செவி கொடுத்து, ஒரு தீர்க்கதரிசியை - ஒரு மகத்தான தீர்க்கதரிசியை அனுப்பி அதைத் தகர்க்கிறார். ஆனால் அவர்களோ அந்த தீர்க்கதரிசிக்கு செவி கொடுப்பதில்லை. அவர்கள் என்ன செய்கின்றனர்? அவனைக் கல்லறையில் வைக்கின்றனர். இயேசு, ''உங்களில் யார்; உங்கள் பிதாக்கள் எந்த தீர்க்கதரிசிகளைக் கொலை செய்து, கல்லறையில் வைத்து, சமாதிகளைக் கட்டி அதை வெள்ளையடிக்காமலிருந்தனர்? நீங்கள் தான் அவர்களைக் கல்லறையில் வைத்தீர்கள்'' என்றார். அது உண்மை. ''உங்களில் யார்?'' அவர்கள் உதவிக்காக கதறினர், தேவன் அதை அவர்களுக்கு அனுப்பினார். அவர்களோ அதைப் புறக்கணித்தனர். அப்படியானால் யார் இதற்கு குற்றவாளி? தேவனா அல்லது ஜனங்களா? ஜனங்களே. நிச்சயமாக. 52இயேசு இவ்வுலகில் பிறந்த போது, நான் கூறினது போன்று, அக்காலத்து உலகம் விழுந்து போய்க் கொண்டிருந்தது. அது அரசியலால் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அந்நாட்களில் அரசியல் ஊழலாக இருந்தது. தேசிய சபையும் ஊழலாயிருந்தது. ரோமர்களும் கிரேக்கர்களும் அபிஷேகம் பண்ணப்பட்ட ஒரு மேசியாவுக்காக காத்திருந்தனர். கிரேக்கர்களும் ரோமர்களும் உலகின் சிறந்த பாகத்தை தங்களுக்குள்ளே கொண்டிருந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். எனவே அவர்கள் அபிஷேகம் பண்ணப்பட்ட ஒரு மேசியா வருவதற்காக காத்துக்கொண்டிருந்தனர். யூதர்களும் மேசியா வரவேண்டுமென்று விரும்பினர். ரோமர்கள், ஒரு பெரிய அரசியல்வாதி ரோமாபுரியில் தோன்றி கிரேக்க நாட்டைக் கைப்பற்றி, அவர்கள் என்ன செய்யவேண்டுமென்று கட்டளையிடுவான் என்றும், அப்பொழுது ரோமாபுரி உலகை ஆளுமென்று எதிர் நோக்கியிருந்தனர். அவ்வாறே கிரேக்கர்களும், அபிஷேகம் பண்ணப்பட்ட ஒரு அரசியல்வாதி - ஒரு மேசியா - அவர்களிடையே எழும்பி, ''ரோமர்களையும், யூதர்களையும் மற்றவர்களையும் கைப்பற்றுவோம்'' என்று கூறுவான் என்று எதிர் நோக்கியிருந்தனர். பாருங்கள், அதைத்தான் அவர்கள் எதிர் நோக்கியிருந்தனர். அதே காட்சி இன்றைக்கும் காணப்படவில்லையென்றால் வேறென்னவென்று எனக்குத் தெரியவில்லை. 53அரசியல் அபிஷேகம் பண்ணப்பட்ட ஒரு மேசியாவை விரும்பினது. யூதர்கள் மேசியாவை எதிர்நோக்கியிருந்தனர்: அவர்கள் பெற்ற மேசியாவைப் போன்ற ஒருவரை அவர்கள் விரும்பாமல், ஒரு தளபதி எழும்பி ரோமாபுரியையும் கிரேக்க நாட்டையும் பூண்டோடு அழித்துவிட வேண்டுமென்று விரும்பினர். அப்படிப்பட்ட ஒரு மேசியாவை அவர்கள் விரும்பி, அதற்காக ஜெபித்து வந்தனர். ரோமர்கள், ''எங்களுக்கு ஒருவரை அனுப்பும். அபிஷேகம் பெற்ற ஒருவருக்கு புரிந்து கொள்ளக் கூடிய ஒருவருக்கு - நாம் வோட்டு போட்டு உள்ளே கொண்டு வருவோம். அவர் அரசியலில் வல்லுனராக இருப்பார். கிரேக்க நாட்டையும் உலகின் மற்ற பாகங்களையும் கைப்பற்ற அவர் யுத்த தந்திரம் அனைத்தும் அறிந்தவராயிருப்பார்'' என்றனர். உலகின் மற்ற பாகங்களிலுள்ளவர்கள், ''நுண்ணறிவினால் அபிஷேகம் பெற்று இவ்வுலகை கைப்பற்றக் கூடிய திறன் வாய்ந்த யாராகிலும் ஒருவரை அனுப்பும்'' என்று கதறினர். இன்றைய உலகின் காட்சி அதுவாக இராமல் போனால், எனக்கு ஒன்றும் தெரியவில்லையென்று அர்த்தம். சபை, ''எங்களுக்கு ஒரு தளபதியை அனுப்பும். அவர் எங்கள் ஒவ்வொருவருக்கும் யுத்த பயிற்சி அளித்து, பட்டயத்தை எப்படி உபயோகிக்க வேண்டுமென்று கற்பித்துக் கொடுத்து, யுத்த தந்திரம் அனைத்தும் சொல்லிக் கொடுப்பார். நாங்கள் ரோமாபுரி, கிரேக்கநாடு, இன்னும் மற்ற நாடுகளை உலகிலிராதபடி பூண்டோடு அழித்துவிடுவோம்'' என்றது. அதைத்தான் அவர்கள் செய்ய விரும்பினர், ஆளுதல் அது அதிகாரம். 54சபைகளிலும் நாம் அதையே காண்கிறோம். மெதோடிஸ்டுகளே, நீங்கள் ஒரு மேசியாவை எதிர்நோக்கியிருக்கிறீர்கள். எப்படிப்பட்ட மேசியாவை? தேவன் உங்களிடம் அனுப்பும் ஒருவரையல்ல, பாப்டிஸ்டுகளே, நீங்கள் ஒரு மேசியாவை எதிர்நோக்கியிருக்கிறீர்கள். அசம்பிளீஸ் ஆஃப்காட் சபையே, நீங்களும் ஒருவரை எதிர்நோக்கியிருக்கிறீர்கள். ஒருத்துவக்காரரே, நீங்கள் ஒருவரை எதிர்நோக்கியிருக்கிறீர்கள். அது உண்மை. ஆனால் நீங்கள் எதை எதிர்நோக்கியிருக்கிறீர்கள்? அரசியல் உலகம் எதை எதிர் நோக்கியிருக்கின்றதோ, அதையே. எவரோ ஒரு கணித மேதை, அல்லது டி.டி., பிஎச்.டி பட்டம் பெற்ற ஒரு அறிவாளி தோன்றி இந்த ஸ்தாபனங்களையெல்லாம் தகர்த்தெறிந்து உங்களை ஒன்று சேர்ப்பதற்கு நீங்கள் எதிர்நோக்கியிருக்கின்றீர்கள் - உங்களை மதம் மாறச் செய்து முழுவதையுமே தன் ஆதிக்கத்தில் கொள்ளக் கூடிய ஒரு மனிதனை. கிறிஸ்துமஸ் சமயத்தில் இங்கே அவர்கள் மேசியாவுக்காக கதறினர். அவர்களுக்கு என்ன கிடைத்தது? அவர்கள் அதை விரும்பினர். அவர்கள் தங்கள் ஆதிக்கத்தில் கொள்ள விரும்பினர். உலகம் தன் ஆதிக்கத்தில் கொள்ள விரும்பினது. சபை தன் ஆதிக்கத்தில் கொள்ள விரும்பினது - ஒவ்வொரு ஸ்தாபனமும். ஆனால் தேவன் அவர்களுக்கு என்ன கொடுத்தாரென்று பாருங்கள்! அவர்கள் இராணுவ மேதையை விரும்பினர். அவர்கள் விஞ்ஞான மேதையை விரும்பினர். ஆனால் தேவனோ ஒரு ஆட்டுக் குட்டியை - ஒரு குழந்தையை -அவர்களுக்குக் கொடுத்தார். என்னே ஒரு வித்தியாசம்! அவர்கள் அழும் குழந்தையை ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? ஆனால் அதுதான் அவர்களுக்குத் தேவைப்பட்டது. தேவன் உங்கள் தேவைகளுக்கேற்ப தருகிறார். நிச்சயமாக. அவர்கள் தளபதியை விரும்பினபோது ஒரு குழந்தையைப் பெற்றுக் கொண்டனர்; சாந்தகுணமுள்ள, தாழ்மையான ஒரு குழந்தையை. தேவன் அவர்கள் தேவையை அறிந்திருந்தார். 55அவர் தேசத்து அரசியல்வாதியாக அல்லது சபை அரசியல்வாதியாக ஆவதற்கு வரவில்லை. இன்று மேசியா வருவரானால், அவர் ஒரு தேசத்து அரசியல்வாதி அல்லது சபை அரசியல்வாதியாக இருக்கமாட்டார். அப்படிப்பட்ட ஒருவருக்காக நாம் கதறினால், தேவன் நமக்கு விடுதலையை அனுப்புவார். ஆனால் அவர் அனுப்பும் விதத்தில் அதை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் அப்படி செய்யவில்லை. அந்த விதமாக அது வருவதை அவர்கள் விரும்பவில்லை. சபை இன்று, “ஓ, பரலோகப் பிதாவே, தயவு கூர்ந்து இன்று இயேசுவை எங்களுக்கு அனுப்புவீரா? தயவு கூர்ந்து'' என்று கதறுகிறது. ஆனால் பரிசுத்த ஆவி அசைவாடத் தொடங்கினால், ''ஓ, அது... அது எங்களுக்கு வேண்டாம்'' என்கிறது. பாருங்கள்? ”ஓ, ஓ, இந்த மனிதன் எங்கள் மேல் ஆளுகை செய்ய நாங்கள் விடமாட்டோம். ஓ, அதை நான் கேட்கப் என்... பிரியப்படவில்லை. இல்லை, என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. என் ஸ்தாபனம் அதை விசுவாசிக்காது. அப்படியானால் உனக்கு மேசியா வேண்டாம், உனக்கு அபிஷேகம் வேண்டாம். தேவன் மேசியாவை அனுப்புவாரானால், அவர் வார்த்தைக்கு வார்த்தை வேதாகமத்துக்கு ஒத்ததாக வருவார் - முதன்முறை வந்தபோது எவ்வாறிருந்தாரோ அதேவிதமாக, உலகத்தின் கதறுதல், அரசியல்வாதிகளும் மற்றவர்களும் சபையின் ஜீவனையே உறிஞ்சுவதைக் கண்டு நாம் கதறுகிறோம், தேவன் நமக்கு அதை அனுப்புகிறார், அப்பொழுது அதை நாம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம். அது உண்மை. “அது நமக்குத் தேவையில்லை. அது நமது ஸ்தாபன கருத்துக்களுடன் இணையாமல் போனால், அதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.” பாருங்கள்? உண்மையான கிறிஸ்துமஸ் என்னவென்று உங்களால் காணமுடிகிறது அல்லவா... ஜனங்களுக்கு அது வேண்டியதில்லை. அதை அனுப்ப தேவன் கடை பிடிக்கும் வழியை அவர்கள் விரும்புவதில்லை. அவர்கள் வேறெதோ ஒன்றை எதிர்நோக்கியிருக்கின்றனர். அது அவர்களுக்கு வேண்டாம். 56அவர்கள் கதறின அந்த நாளில் தேவன் அவர்களுக்கு அனுப்பித் தந்தார் - ஒரு இராணுவ மேதையை அல்ல; ஒரு பெரிய தளபதி ஆயுதங்களைக் கொண்டவராய், இயற்கைக்கு மேம்பட்ட ஒரு பட்டயத்தை அல்லது ஈட்டியைக் கையிலேந்தி ரோமர்களையும் கிரேக்கர்களையும் மற்றவர்களையும் கடலில் துரத்தி அவர்களை மூழ்கடிக்கவில்லை. அப்படிப்பட்ட ஒன்றை அவர்களுக்கு அனுப்பவில்லை - மோசேயின் காலத்தில் அவர் அவ்வாறு செய்த போதிலும். ஆனால் அந்த சமயத்தில் அது அவர்களுக்குத் தேவைப்பட்டது. அவர் அவர்களுக்கு ஒரு இரட்சகரை அனுப்பினார், அவர்களுக்கோ அது வேண்டாம். அவர்கள் இரட்சிக்கப்பட்டுவிட்டதாக எண்ணியிருந்தனர். பாருங்கள்? இன்றைய சபைகளின் போக்கும் அவ்வாறேயுள்ளது. கிறிஸ்துமஸ் நேரத்தின் போது கிறிஸ்துமஸின் எல்லா அலங்காரமும் சான்டா கிளாஸின் விளக்குகளும், அஞ்ஞான பழக்க வழக்கங்களும் கத்தோலிக்க பிராடெஸ்டெண்டு சபைகள் இரண்டிலும் காணப்படுகின்றன - மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. தேவன் அவர்களுக்கு ஒரு இரட்சகரை அனுப்புகிறார். எதற்கு? வார்த்தைக்குத் திரும்பச் செல்வதற்கு, பரிசுத்த ஆவி, தேவனுடைய மேசியாவும் அவருடைய அபிஷேகம் பெற்றவரும், அவருடைய சபையை அபிஷேகித்து அதை வார்த்தைக்குத் திரும்ப அனுப்ப. அவர்களுக்கு அது வேண்டும் என்று நினைக்கிறீர்களா? இல்லை, ஐயா, அவர்களுக்கு அது வேண்டாம். அவர்கள் எப்பொழுதும் போல அதைப் புறக்கணிப்பார்கள். 57அவர் ஒரு இரட்சகரை அனுப்புகிறார், அவர் எதற்காக ஒரு இரட்சகரை அனுப்பவேண்டும்? உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்க இங்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன். அதை ஏற்றுக் கொள்ள முன்குறிக்கப்பட்ட ஜனங்கள் இருப்பார்கள். அவர் முதன் முறை வந்தபோதும் அவர்கள் இருந்தனர், அவர் இரண்டாம் முறை வரும் போதும் அவர்கள் இருப்பார்கள். சபை உலகம் அதைக் குறித்து என்னதான் நினைத்த போதிலும் அவர் அதை விருதாவாக அனுப்புவதில்லை. யாராவது அதை ஏற்றுக் கொள்வார்கள், யாராவது அதை பெற்றுக் கொள்வார்கள். அவ்வளவுதான்; ஆனால் அரசியல் உலகமோ, அரசியல் சபையோ, வேறெதுவுமோ அல்ல. நீங்கள் கதறி, தேவன் அதை அனுப்பும்போது, யாராவது அதை ஏற்றுக் கொள்ளத்தான் போகிறார்கள். அது உண்மை. 58அவர் ஒரு இரட்சகரை அனுப்பினார் - நாடுகளை அழிக்க அல்ல. இன்றைக்கு தைரியத்தோடு நிற்கும் மனிதன் நமக்குத் தேவையென்று நாம் எண்ணுகிறோம். ருஷ்யாவைக் கீழே தள்ளக் கூடிய ஒரு மனிதன் அமெரிக்காவுக்கு அவசியமாயுள்ளது. உலகத்திலுள்ள மற்றவர்களை கீழே தள்ளி, அவர்களை சந்திரனுக்குக் கொண்டு செல்லக்கூடிய ஒரு மனிதன் ருஷியாவுக்கு அவசியமாயுள்ளது. ஆனால் தேவன் நமக்கு சமாதானத்தை அனுப்புகிறார், தேவன் நமக்கு நம்பிக்கையை அனுப்புகிறார். நமக்கோ அது வேண்டாம். நாம், ''நாங்கள் சமாதானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும், நாடுகளுக்கு சமாதானம் அவசியம்'' என்கிறோம். உண்மையாக. ஐக்கிய நாடுகளின் சபை ஒன்றுகூடும் போது, அவர்கள் அதைப் பெற்றுக் கொள்ள முடியுமென்று நினைக்கின்றனர். ஆனால் ஐக்கிய நாடுகளின் சபையோ அதற்கு தூரமாயுள்ளது. இன்று இவ்வுலகம் பெற்றுள்ள சமாதானம் காற்றில் மிதந்து கொண்டிருக்கும் ஒரு ரப்பர் பலூனைப் போன்றது. சிறிது காற்றும் கூட அதை தன் விருப்பமான இடத்துக்கு கொண்டு சென்றுவிடும். நிச்சயமாக அரசியலில் ஏற்படும் சிறு மாறுதலும் அதை ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்துக்கு கொண்டு சென்றுவிடும். தேவன் பேரில் நம்பிக்கையில்லாதவர்களின் மனது புண்படக் கூடாதென்று அவர்கள் ஐ.நா. சபையில் ஜெபம் செய்வதில்லை. அதுதான் சமநிலையா? அதை என்ன வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். வேறொரு காரியம், பலூன் வெடித்துப் போகக்கூடியது. ஆமென். ஐ. நா. வினால் நிலை நிறுத்தப்பட்டும் சமாதானம் என்றழைக்கப்படுவது வெடித்து போகும். உண்மை. அதில் சமாதானம் எதுவுமில்லை. மனிதனின் சாதனையினால் நீங்கள் சமாதானத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. அது அங்கில்லை. அது ஒவ்வொரு காற்றினாலும் கொண்டு செல்லப்படுகின்றது. 59சபையும் சமாதானத்தை விரும்புகிறது. அவர்கள். அவர்களுடைய சமாதானம்... அவர்கள் போதகமாகிய ஒவ்வொரு காற்றினாலும் அலைகளைப் போல் அடிபட்டு அலைகின்றனர். எல்லாமே அவர்களைக் காற்றில் கொண்டு செல்கின்றது. அவர்களில் ஒருவர், ''ஓ, நான் நினைக்கிறேன். நாம் செய்ய வேண்டியதெல்லாம்...'' என்கிறார். நீ நினைக்கிறாயா? உனக்கு நினைவு வரக்கூடாதே. தேவன் தமது நினைவுகள் அனைத்தையும் ஏற்கெனவே தெரியப்படுத்திவிட்டார். எனவே நீ நினைப்பதற்கு உனக்கு உரிமையில்லை. “கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக் கடவது'' அவர் தேவனுடைய சித்தத்தை மாத்திரமே அறிந்து செய்தார். அவர், ''என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை'' என்றார். பாருங்கள்? உங்களுக்கு சொந்த நினைவு வரக்கூடாது. அவரே சிந்திக்க வேண்டியவராயிருக்கிறார். அவருடைய சிந்தை உங்களில் இருந்தால், அவர் சிந்திப்பதையே நீங்களும் சிந்திப்பீர்கள், அதுவே அவருடைய வார்த்தை. அப்படியானால் நீங்கள் எப்படி வித்தியாசமாக சிந்திக்க முடியும்? அவர் தமது சிந்தைகளை நமக்குத் தெரியப்படுத்தியுள்ளாரே! நாமோ சுயமாக சிந்திக்க விரும்புகிறோம். ”அவர்கள் இப்படி செய்ய வேண்டுமென்று நினைக்கிறேன்'' என்கிறோம். 60வியாதியாயுள்ள குழந்தைக்கு ஜெபிப்பதற்காக நேற்று ஒரு அருமையான வயோதிப ஆத்துமாவுடன் காரில் சென்று கொண்டிருந்தேன். நாங்கள் குழந்தையை அடைந்தவுடன், நாங்கள் குழந்தைக்காக ஜெபம் செய்ய கூடாதென்று அந்த குடும்பம் கூறிவிட்டது. அது அந்த மனிதனின் கருத்து. நாங்கள் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, இந்த ஸ்திரீ, சுமார் எண்பத்தொன்று வயதுள்ள அந்த வயோதிப ஸ்திரீ - மிகவும் சமார்த்தியமுள்ளவர்கள். புத்திசாலி - என்னிடம், “நான் என்ன நினைக்கிறேன் என்றால்'' (பாருங்கள், ''நான் என்ன நினைக்கிறேன்'') ”எல்லா சபைகளும் ஒன்றாக இணைந்து ஒன்றாயிருக்க வேண்டும்'' என்றாள். அப்படியேதான் பிசாக நினைக்கிறது. ஆனால் தேவனோ தமது சபை உலக காரியங்களினின்று பிரிந்து விடுதலையடைய விரும்புகின்றார். அது சபை அரசியலுடன் கலந்திருப்பதை அவர் விரும்புவதில்லை. பாருங்கள்? தேவன் உலகிற்கு ஒரு மேசியாவை அனுப்பினால் என்னவாயிருக்கும்? அந்த ஸ்திரீ முழு உலகமும் கொண்டுள்ள கருத்துக்களையே தன் சிந்தனையில் கொண்டிருந்தாள். சபை சங்கமும் அதே கருத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது அல்லவா? உலக சபைகளின் ஆலோசனை சங்கம் அதே கருத்தின் அடிப்படையில் அதே நோக்கத்துக்கு அல்லவா உண்டானது? அது உண்மை. அந்த ஸ்திரீயும் உலகம் கொண்டுள்ள கருத்தையே வெளிப்படையாய்க் கூறினாள். ஆனால் தேவன் கொண்டுள்ள கருத்துக்கள் இதோ வேதாகமத்தில் காணப்படுகின்றன. அதைக் காட்டிலும் வித்தியாசமான கருத்துக்களைக் கொண்டிருக்க நமக்கு எந்த உரிமையும் இல்லை. இதில் தேவனுடைய சிந்தனைகள் நமக்கு வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்வுலகம் விழுந்து போதலை நாம் கண்டு, ஏதோ ஒன்றிற்காக கதறுகிறோம். அதை நாம் பெற்றுக் கொள்வோம். ஆனால் நாம் பெற்றுக் கொண்டுள்ளது நம்மை அரசியலுக்கு வழிநடத்துமானால், அது நம்மை கெடுத்து விடும். 61கிறிஸ்தவ வர்த்தகரின் தேசியத் தலைவருக்கு ஒரு சிறு ஆலோசனையைக் கூற விரும்புகிறேன். அது அருமையானவர்களைக் கொண்ட ஒரு குழு. ஆனால் அவர்கள் தவறான வழியில் செல்லத் தொடங்கினால், மற்றவர்களைப் போல் அவர்களும் தவிடு பொடியாகி ஒரு ஸ்தாபனமாகி விடுவார்கள். எனக்காகவும் இந்த மனிதனுக்காகவும் நீங்கள் ஜெபம் செய்யவேண்டும். நான் செல்ல வேண்டும். அவருக்காக ஒரு தரிசனத்தை நான் தேவனிடமிருந்து பெற்றுள்ளேன். பாருங்கள்? அவர்கள் திரும்பாமல் அதே வழியில் சென்று கொண்டிருப்பார்களானால், அவர்கள் ஒரு ஸ்தாபனமாகி விடுவார்கள். அவர்கள் அப்படி ஸ்தாபனமாகிவிட்டால், தேவன் அதை விட்டு விலகிவிடுவார். அது உண்மை. பாருங்கள், மனிதர் தங்கள் சொந்த கருத்துக்களின் அடிப்படையில் அல்லாமல், வேறெந்த அடிப்படையில் ஒன்று சேர முடியாது. அதனால்தான் தேவன் தனிப்பட்ட நபர்களைத் தெரிந்து கொள்கிறார். பாருங்கள்? தேவன் ஒரு ஸ்தாபனத்துடன் தொடர்பு கொள்வதில்லை, அவர் எப்பொழுதுமே ஸ்தாபனத்துடன் தொடர்பு கொண்டதில்லை. அவர் அப்படி செய்ததாக சரித்திரத்தில் எங்கும் இல்லை. அவர் தனிப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொள்கிறார் - ஒரு மனிதனுடன். அது உண்மை. ஆனால் நாமோ ஒரு கூட்ட மனிதர்களை ஒன்று கூட்டி, “இது இப்படி அது அப்படி'' என்கிறோம். முதலாவதாக நீங்கள் அறியவேண்டியது என்னவெனில், பிசாசு அனுப்பியுள்ள பெரிய சாமர்த்தியமுள்ள, நுண்ணறிவு படைத்த மேதைகள் உள்ளே வந்து, ”இது இப்படி இருக்கவேண்டும். அதை என்னால் உங்களுக்கு நிரூபித்துக் காண்பிக்க முடியும் என்கின்றனர். நீங்கள் என்னதான் நிரூபித்தாலும், அது தேவனுடைய வார்த்தைக்கு முரணாயிருக்குமானால், அதனின்று விலகுங்கள். அது உண்மை. போதகமாகிய காற்றினால் அடிப்பட்டு அலைதல். அது எங்கேயும் எந்த நேரத்திலும் அடிக்கும். அது உண்மை. 62ருஷியா இன்று அபிஷேகம் பண்ணப்பட்ட ஒரு மேசியாவை எதிர்நோக்கியிருக்கிறது, அவர்கள் எதை எதிர் நோக்கியிருக்கின்றனர்? தேவன் அவர்களுக்கு, அவர் ஆயிரத்து தொளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செய்தது போல், அபிஷேகம் பண்ணப்பட்ட மேசியாவாக ஒரு ஆட்டுக்குட்டியானவரை அனுப்பினால் எப்படியிருக்கும்? அவர்கள் ஏரோது செய்தது போல், அதை எப்படியாகிலும் ஒழித்துவிட பிரயாசப்படுவார்கள். மேசியா எப்படியிருக்க வேண்டுமென்று ருஷியா கருதுகிறது? அவர்களுக்கு விஞ்ஞானம் வேண்டும். அவர்களுக்கு உலகமனைத்தையும் ஜெயித்து, அவர்களை சந்திரனுக்கு கொண்டு போகக் கூடிய ஒரு அபிஷேகம் பெற்ற விஞ்ஞான மேதை; விண்வெளியை அடைந்து அவர்களை நட்சத்திரங்களுக்கும் அப்பால் கொண்டு செல்லக்கூடிய ஒருவரை பெற விரும்புகின்றனர். அப்படிப்பட்ட ஒருவரையே ருஷியா எதிர்நோக்கியுள்ளது. ஓ, தேவனே, இப்பொழுது கவனியுங்கள், நாம் மறுபடியும் கிறிஸ்துமஸ் காலத்தில் இருக்கிறோம். அவர்கள் அதை பெற்றுக் கொண்டால் என்னவாகும்? அதற்கு வித்தியாசமான ஒன்றைப் பாருங்கள். அப்படியானால் தேவன் சிருஷ்டித்த மற்ற ஜனங்களின் கதி என்ன? பாருங்கள், தேவனுக்கு நமது தேவை என்னவென்று தெரியும், நமது விருப்பங்கள் அல்ல. அதை சற்று ஆராய்ந்து பாருங்கள். ருஷியா தங்களது அபிஷேகம் பெற்றவரைப் பெற்றுக் கொண்டால் என்னவாகும்? அவர்கள் ஒரு ஆட்டுக்குட்டியானவரை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இல்லை, இல்லை, அப்படிப்பட்ட ஒன்றையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். இல்லை ஐயா. அது அவர்களுக்கு வேண்டாம். அப்படிப்பட்ட ஒன்றும் அவர்களுக்கு வேண்டவே வேண்டாம். அவர்கள் அபிஷேகம் பெற்ற மேசியாவை விரும்புகின்றனர். மேசியா என்றால் ''அபிஷேகம் பண்ணப்பட்டவர்'' என்று பொருள். அவர்கள் அபிஷேகம் பண்ணப்பட்டவரை விரும்புகின்றனர், ஆனால் அவர்களுக்கு அணுவைப் பிரித்து, விண்வெளிக்கு சென்று, ருஷியாவை சந்திரனுக்கு கொண்டு சென்று, தன் மார்பைத்தட்டி, ''உலகிலுள்ள மற்றவர் அனைவரும் நாய்கள், எங்களைச் சேவியுங்கள்'' என்று சொல்லக் கூடிய அபிஷேகம் பண்ணப்பட்ட ஒரு விஞ்ஞான மேதையே வேண்டும். அதுதான், அதைத்தான் ருஷியா விரும்புகிறது. ஓ, ஆம், ஐயா, உங்களுக்குத் தெரியும், முழு உலகமே கதறிக் கொண்டிருக்கிறது... 63அண்மையில் ஜெர்மனி ஒருவருக்காக கதறினது. அவர்கள் ஒருவரைப் பெற்றுக் கொண்டனர். அனால் அதனுடன் அவர்களுக்கு என்ன கிடைத்ததென்று பாருங்கள். பார்த்தீர்களா? உங்களுக்குப் புரிகிறது அல்லவா? அவர்கள் ஹிட்லரைப் பெற்றுக் கொண்டனர். அதனால் அவர்களுக்கு என்ன கிடைத்தது? குழப்பம். நீங்கள் தேவனுடைய மேசியாவைப் புறக்கணித்தால், அபிஷேகம் பண்ணப்பட்ட இந்த மேசியாக்கள் அதைத்தான் உங்களுக்குத் தருவார்கள். அவர்களுக்கு என்ன கிடைத்தது? பெந்தெகொஸ்தே ஆசீர்வாதங்கள் ஜெர்மனியில் விழுந்த போது, அவர்கள் செய்தியைப் புறக்கணித்து, அவர்களைக் கேலி செய்து சிறையிலடைத்தனர். அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் சிலுவையைப் புறக்கணித்து, அதற்கு பதிலாக இரட்டை சிலுவையை - ஸ்வஸ்திகாவை - ஏற்றுக்கொண்டனர். நீங்கள் இரக்கத்தைப் பெறவில்லை என்றால், உங்களுக்கு நியாயத்தீர்ப்பைத் தவிர வேறொன்றும் விடப்படவில்லை. நண்பனே, அது உண்மை. இன்று அவர்கள் எங்குள்ளனர் என்பதைப் பாருங்கள். அவர்கள் எங்கும் உறுப்பினராயில்லை, அவர்கள் சிதறுண்டவர்களாக இருக்கின்றனர். ஏனெனில் அவர்கள் தவறான மேசியாவை ஏற்றுக்கொண்டனர். ருஷியாவும் அப்படிப்பட்ட ஒருவரை ஏற்றுக் கொள்ளுமானால், அவர்கள் எவ்வளவுதான் மேதையை ஏற்றுக்கொண்டாலும் அதே நிலையையடைவார்கள். அது முழு தேசத்தையும் அழித்துவிடும். பாருங்கள்? இந்தியா இன்றைக்கு அபிஷேகம் பண்ணப்பட்ட ஒருவரை விரும்புகிறது. அவர்களுக்கு ஒரு மேசியா வேண்டும். மேசியா என்றால் ''அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று பொருள் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அவர்கள் மேசியாவைப் பெற விரும்புகின்றனர். அவர்களுக்கு என்ன வேண்டும்? அவர்கள் வேலை செய்யாமலேயே அவர்களைப் போஷித்து, அவர்களுக்கு உண்ண ஏதாவதை அளித்து, அவர்களுக்கு உடைகளைக் கொடுத்து, வீதிகளில் நடந்து சென்று அவைகளை இருப் பக்கங்களிலும் தூக்கியெறியும் ஒருவர் வேண்டும். பார்த்தீர்களா, அவர்கள் வேலை செய்யமாட்டார்கள். அவர்கள் பிச்சையெடுக்க விரும்புகின்றனர். எனவே அவர்கள், மரத்தின் உச்சியையடைந்து அங்கிருந்து ஆகாரத்தை அவர்களுக்கு உலுக்கித் தரும் ஒரு வகையான பரிசுத்த மனிதன் எழும்ப வேண்டுமென்று அவர்கள் விரும்புகின்றனர். அவர்கள் சும்மா உட்கார்ந்து கொண்டு உண்டு, நாள் முழுவதும் உறங்கி, உறக்கத்தினின்று எழுந்து, சிறந்த உடைகளை உடுத்திக்கொள்ள விரும்புகின்றனர். அப்படிப்பட்ட ஒரு மேசியாவே இந்தியாவுக்கு வேண்டியதாயுள்ளது. 64இந்த கிறிஸ்துமஸின் போது ருஷியா ஒரு விஞ்ஞான மேதையை தங்கள் அபிஷேகம் பண்ணப்பட்ட மேசியாவாகப் பெற விரும்புகின்றனர். அதைத்தான் அவர்கள் பெற்றுக் கொள்ள விரும்புகின்றனர். வேலை செய்யாமலே அவர்களுக்கு உண்ண உணவும் உடுக்க உடையும் அளிக்கும் ஒரு மேசியாவை இந்தியா விரும்புகின்றது. அமெரிக்காவே, உனக்கு என்ன வேண்டும்? அமெரிக்காவே: உன் கருத்து என்ன? நீயும் ஒரு மேசியாவுக்காக கதறி கொண்டிருக்கிறாய். இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்படுகிறது என்பதை அறிவேன். நீ ஒரு மேசியாவுக்காக கதறிக் கொண்டிருக்கிறாய். உனக்கு என்ன வேண்டும்? உனக்கு வேண்டியதை நீ பெற்றுக் கொண்டுவிட்டாய். நீ அரசியல்வாதியை விரும்பினாய், அதை நீ பெற்றுக் கொண்டுவிட்டாய். அதைக் கொண்டு நீ என்ன செய்யப்போகிறாய்? அவர் உன் தோலை உரிக்கப்போகிறார். அதைத் தான் அவர் செய்யப்போகின்றார். அவர் உங்களை கல்லறைக்கு அனுப்பப் போகின்றார். நீ அதை விரும்பினாய். நீ விரும்பினதைப் பெற்றுக் கொண்டாய். அதைக் கொண்டு நீ என்னசெய்ய போகின்றாய்? அது உன் கரங்களில் உள்ளது - நவீன ஆகாபும் யேசபேலும். நீ சுதந்தரத்தைத் தேடி ஓடினாய், ஆனால் நீ எதிலிருந்து ஓட முயன்றாயோ அதற்குள் சிக்கிக் கொண்டாய். ஆனால் அதைத்தான் நீ விரும்பினாய். உனக்கு ஏதோ ஒரு தட்டை தலை ரிக்கி, இன்றைய எல்விஸ் விருப்பமாயிருந்தது, அதை நீ பெற்றுக் கொண்டாய். அதை எப்படி பெற்றுக்கொண்டாய்? அதைக் கொண்டு வர நீ கள்ளத்தனமான தேர்தல் இயந்திரங்களை உபயோகித்து, நல்லவர்களின் கண்களுக்கு அதை மறைத்துவிட்டாய். 65நான் டெமாக்ரட் அல்லது ரிபப்ளிக்கன் கட்சியை சார்ந்தவன் அல்ல. நான் ஒரு கிறிஸ்தவன். பாருங்கள்? பாருங்கள்? இரு கட்சிகளும் மோசமானவைகளே. ஆனால் ஒரு கட்சியைச் சார்ந்த மனிதன் கிறிஸ்தவ மார்க்கத்தின் கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் ஓரளவாவது வெளிப்படுத்தி வந்தார். நீங்களோ அதனின்று விலகி இயந்திரங்களை நிறுவி (என்ன செய்ய?) நீங்கள் விரும்பின மேதாவியை தேர்ந்தெடுத்தீர்கள். அதை எப்படி செய்தீர்கள்? அவரைத் தொலைகாட்சியில் புகுத்தி, அதை உலகம் முழுவதும் காண்பித்து, ஜனாதிபதி பதவிக்காக நின்ற இரு வேட்பாளர்களின் அறிவுத் திறனையும் சோதித்து பார்த்தீர்கள். ஓ, என்னே! நுண்ணறிவு படைத்ததாக நீங்கள் கருதின அந்த நபரைத் தேர்ந்தெடுத்து, அதற்கு பின்னால் என்ன மறைந்துள்ளது என்பதை காணாமல் விட்டுவிட்டீர்கள். 66இந்த பேரத்தினால் உங்களுக்கு என்ன கிடைத்ததென்று பார்த்தீர்களா? உ, ஊ, உ, ஊ. ஓ. இது மறுபடியும் கிறிஸ்துமஸ். அது அமெரிக்கா தன் மேசியாவை பெற்றுக் கொண்டுவிட்டாள். அவரைக் கொண்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? அவர் உங்களுக்கு என்ன செய்யப் போகிறார் என்பதை கவனித்து வாருங்கள். ஹிட்லர் ஜெர்மனிக்கு என்ன செய்தாரென்று நினைவு கூருங்கள். அதை நினைவு கூருங்கள். அதை உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்படுகிறது: ஆம். நீங்கள் அதை பெற்றுக் கொண்டீர்கள். தேசத்தில் நடந்த இந்த எழுப்புதல்களின் மூலம் கிடைக்கப்பெற்ற தேவ பக்தியுள்ள மனது கொண்ட நாணயமான மக்கள் போதிய அளவு உள்ளனர். அவர்கள் இது நிகழாமல் இன்னமும் நீட்டி வைத்திருக்கக்கூடும். ஆனால் நீங்கள் உங்கள் பொறியியல் அறிவைக் கொண்டு வோட்டு போடுதலில் ஏமாற்றும் இயந்திரங்களை உங்களுக்கென்று கண்டுபிடித்தீர்கள். உங்கள் செய்தித்தாள்களே இந்த ஏமாற்றுதலை தேசமெங்கும் பரப்பினது. நீங்களோ அதை சரியென்று ஒன்றுமே செய்யவில்லை. நீங்கள் அதை பெற்றுக் கொண்டீர்கள். அவர்கள் அப்படிப்பட்ட ஒரு மேசியாவை விரும்பினர். எனவே அதிக கல்வியறிவும் நுண்ணறிவும் கொண்ட ஒரு மேதையைப் பெற்றுக் கொண்டதன் நிமித்தம் அவர்கள் சமாதானத்துடன் இளைப்பாறிக் கொண்டிருப்பார்கள் என்று எண்ணுகிறேன். 67இந்நாளின் பொல்லாதவர்கள் ஒவ்வொரு காலத்திலுமுள்ள பொல்லாதவர்கள் - மிகவும் சாமார்த்தியமும் நுண்ணறிவும் படைத்தவர்களாயிருப்பார்கள் என்னும் உங்கள் கர்த்தரின் போதகத்தை நீங்கள் நன்கு அறிந்திருக்கிறீர்கள். காயீனின் சந்ததியார்தான் விஞ்ஞானிகளும் நுண்ணறிவு படைத்த மேதைகளும் ஆயினர் என்றும், தேவனுடைய பிள்ளைகள் மேய்ப்பர்கள் போன்ற சாதாரண வேலைகளைச் செய்து வந்தனர்; இது ஜலப்பிரளயம் வரைக்கும் அவ்வாறிருந்தது என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் அல்லவா? தாழ்மையுள்ள விவசாயிகள் பேழையில் காக்கப்பட்டனர், மேதைகளோ அழிக்கப்பட்டனர். “இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் ராஜ்யத்தின் பிள்ளைகளைப் பார்க்கிலும் அதிக புத்திமான்களாயிருப்பார்கள்'' என்று இயேசு கூறியுள்ளார் என்று உங்களுக்குத் தெரியுமல்லவா? என் ராஜ்யத்தின் புத்திரர் ஆட்டுக்குட்டிகள், அவர்களுக்கு ஒரு வழிகாட்டி அவசியம். ஆனால் புத்திமான்களோ நுண்ணறிவின் அடிப்படையில் தங்கள் தலைவரை தேர்ந்தெடுக்கின்றனர். தாழ்மையுள்ளவர்களோ பரிசுத்த ஆவியை தங்கள் தலைவராக தெரிந்து கொள்ளுகின்றனர். சபையானது - ஸ்தாபன மேதைகள் - அதைத்தான் செய்துள்ளனர். அவர்கள் நுண்ணறிவு படைத்த மேதைகளை தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் உண்மையான கிறிஸ்துவின் சரீரமோ பரிசுத்த ஆவியையும் அவருடைய வார்த்தையையும் தெரிந்து கொண்டுள்ளது. உங்களுக்கு வழிகாட்ட நீங்கள் எதை அனுமதிக்கிறீர்களோ அதைப் பொறுத்தது. ஆட்டுக்குட்டி வழி நடத்தப்படவேண்டும். அந்நிலையைத் தான் நாம் அடைந்துள்ளோம். 68அவர்களுக்கு அவர்களுடைய மேசியா இருக்கிறார் - அபிஷேகம் பண்ணப்பட்ட கல்விமான், புத்திசாலி, நுண்ணறிவு படைத்தவர். ஓ, என்னே! அந்த மனிதனைப் போன்ற ஒரு புத்திசாலியான ஜனாதிபதி இருந்ததேயில்லை. அவர் அங்கு நின்று கொண்டு... இன்று பகலோ அல்லது இரவோ என்று நினைக்கிறேன். அல்லது நாளையோ அல்லது மற்ற நாளோ, அன்று வானொலி ஒலிபரப்பில் இதைக் கேட்டேன். அவரிடம் நீங்கள் எந்த கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம், நிச்சயமாக - படித்த இயந்திரம், அதில் தான் அமெரிக்கா தன் நம்பிக்கையை வைத்துள்ளது. அதைக்கொண்டு நீங்கள் எங்கு செல்கின்றீர்கள் என்று பார்க்கலாம். உ, ஊ. அமெரிக்காவே, நீ புறக்கணித்தாய், நீ கிறிஸ்துவின் செய்தியை புறக்கணித்தாய், நீ பரிசுத்த ஆவியைப் புறக்கணித்தாய். அது உனக்கு முன்னிலையில் உன் சட்டமன்றக் கட்டிடத்திலேயே உறுதிப்படுத்தப்பட்டது. அங்கு கிறிஸ்துவின் வல்லமை வெளியரங்கமாகி, மனிதர்களுடைய சிந்தனைகளை அறிந்து கொள்ள முடிந்தது. அவர் வியாதியஸ்தரை சுகப்படுத்தி இருதயத்திலுள்ள இரகசியங்களை கண்டு பிடித்து, இக்கடைசி நாட்களில் என்ன நடக்குமென்று தேவன் கூறியுள்ளாரோ அவையனைத்தையும் செய்தார். நீயோ அதைப் புறக்கணித்துவிட்டாய் - அது போதிய அளவு மெருகேற்றப்படவில்லை என்பதற்காக. அது மாட்டுத் தொழுவத்தில் பிறந்தது. எனவே தேசத்துக்கு அது துர்நாற்றமாகிவிட்டது. ஆனால் இதை ஞாபகம் கொள்ளுங்கள். உங்கள் அரசியலும் ஸ்தாபன தத்துவங்களும் தேவனுக்கு முன் துர்நாற்றமாயுள்ளது. தேவன் தாழ்மை என்னும் நறுமணம் கொண்ட சுவையை விரும்புகிறார். ஆனால் சபைக்கோ அது வேண்டாம். பொய்யான தாழ்மை. தேவனுக்கு உண்மையான தாழ்மையே வேண்டும். அதுதான் அவருக்குப் பிரியம். அவர்கள் கல்வியறிவு கொண்ட மேதையைப் பெற்றுள்ளனர். 69சபையும் ஒரு மேசியாவை விரும்புகிறது. அது எதை விரும்புகிறது? ஸ்தாபன அமைப்பு அபிஷேகம் பண்ணப்பட்ட ஒரு மேதையை விரும்புகிறது -அவர்களை ஒரு இடத்திற்கு கொண்டு வர. நான் கூறுவது இங்கும் வெளிநாடுகளுக்கும் செல்கின்றன என்று நீங்கள் உறுதி கொள்வதற்கென இதைக் கூற என் நேரத்தை நான் எடுத்துக் கொள்கிறேன். சபையானது இன்று தாங்கள் உலகில் வாழ்வதற்கென எல்லாவற்றையும் ஒழுங்கு செய்து, பெண்கள் தலைமயிரைக் கத்தரிக்கவும், தங்கள் முகங்களில் வர்ணம் தீட்டிக் கொள்ளவும், ஆண்கள் நான்கு அல்லது ஐந்து முறை மணந்து அப்பொழுதும் டீகன்களாக (Deacons) இருக்கவும், “ஓ அவர்கள் விரும்பும் எதை வேண்டுமானாலும் செய்து அதே சமயத்தில் தாங்கள் கிறிஸ்தவர்கள்” என்று அறிக்கையிடவும் அனுமதிக்கும் அபிஷேகம் பண்ணப்பட்ட ஒரு மேதையை விரும்புகிறது. நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளப் போகின்றீர்கள்! உங்களுக்கு தேவனுடைய மேசியா வேண்டாம் - அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தை, வார்த்தை வெளிப்படுதல், வார்த்தை தன்னை முன்னால் கொண்டு வருதல். உங்களுக்கு அது வேண்டாம். தேவன் அதை உங்களிடம் அனுப்பினார். ஆனால் சபைக்கோ அது வேண்டாம். அவர்களுக்கு தங்கள் கோட்பாடுகளே வேண்டும். எல்லோரும் தலைவணங்கும் கோட்பாடுகளை அளிக்கும் ஒரு மேதையே அவர்களுக்கு வேண்டும். நீங்கள் அதை பெற்றுக் கொள்வீர்கள், உ, ஊ, அது வந்து கொண்டிருக்கிறது. அதற்கு நீங்கள் நிறைய பிள்ளைகளைப் பெற்றிருக்கிறீர்கள். ஆனால் இந்நாட்களில் ஒன்றில் ஒரு பாட்டன் (Great-papa) தோன்றுவார் - யோசேப்பை அறியாத ஒரு பார்வோன், அதைத்தான் நீங்கள் விரும்பினீர்கள், அதைத்தான் சபையும்... அவர்கள் செய்யும் முறைகளை நீங்கள் காண்கின்றீர்கள், ஆம், ஐயா, அந்த முறைகளை. 70வெளிப்படுத்தல்: 17ம் அதிகாரம் வேசியைக் குறித்தும் அவளுடைய குமாரத்திகளைக் குறித்தும் தெளிவாய் விளக்குகின்றது. நிச்சயமாக. அவையனைத்தும் தன் தாயினிடம் சென்றுவிடும். இப்பொழுது ஒரு உலக சபையை நிறுவ அவை பாதையில் சென்று கொண்டிருக்கின்றன. ஸ்தாபனங்களே, நீங்கள் விரும்புவதை அப்படியே பெற்றுக்கொள்ளப் போகின்றீர்கள். நான் கூறுவதைக் கேளுங்கள்! அது அப்பொழுது நடக்கும். ஒருக்கால் அதற்குள் நான் இவ்வுலகத்தை விட்டு சென்றிருக்கக் கூடும். சாயங்கால வெளிச்சம் தோன்றி மறையும் வரைக்கும் அதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் என்ன செய்வதென்று அறியாமல் திகைப்பார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள் ஸ்தாபனங்களினால் ஏதோ ஒன்றுக்குள் பலவந்தமாக சேர்க்கப்படுவார்கள். ஸ்தாபனங்களும் தங்கள் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள அதை ஏற்றுக் கொண்டுவிடும். அவர்கள் அனைவருமே அப்படி செய்வார்கள். அந்த முறைமையை ஏற்றுக்கொள்ள விரும்பாமல், தேவனுடைய முறைமையை - பரிசுத்த ஆவியையும் அவருடைய வார்த்தையையும் ஏற்றுக் கொண்டவர்கள், “அந்த மனிதன் கூறினது தான் சரியானது'' என்பார்கள். ஆனால் அப்பொழுது காலதாமதமாயிருக்கும். எபிஸ்கோபாலியர்கள், பிரஸ்பிடேரியன்கள், பாப்டிஸ்டுகள், இன்னும் மற்றவர்கள் முழு சுவிசேஷ வர்த்தகர் கூட்டத்துக்கு வந்து பரிசுத்த ஆவியைப் பெற முயல்வதை நாம் காண்கிறோம். உறங்கிக்கொண்டிருந்த கன்னிகைகள் எண்ணெய் வாங்கச் சென்ற அந்த நேரத்தில் தான் மணவாளன் வருகிறார் என்பதை ஜனங்கள் உணருவதில்லை? அப்படித்தான் இயேசு கூறினார், மணவாளன் உள்ளே வந்து விட்டார். அவர்களோ உள்ளே பிரவேசிக்க முடியவில்லை. இந்த மனிதர்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? அவர்கள் உள்ளே பிரவேசிக்கவில்லையென்று வேதாகமம் நிரூபிக்கின்றது, இவர்களோ இங்கு கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் இவ்வாறு செய்ய முயலும்போது, மணவாளன் வந்துவிடுகிறார், அவர்கள் புறம்பான இருளில் தள்ளப்பட்டனர். அது என்ன? அவர்களுக்கு எல்லாவித அசைவுகளும், பாவனைகளும், உணர்ச்சிகளும் உண்டாயிருந்து, அது பரிசுத்த ஆவியைப் பெற்றதன் அடையாளம் போல் காணப்படலாம். ஆனால் சபையானது முத்தரிக்கப்பட்டு, அவள் போய் விட்டிருப்பாள். உ, ஊ, அது ஒருக்கால் தீர்க்கதரிசனமாக இருக்கலாம். 71அவர்களுக்கு ஏதாவதொன்று வேண்டும். அவர்களுடைய விருப்பம் போல வாழ அவர்களை அனுமதிப்பதற்கு அவர்களுக்கு ஏதாவதொன்று வேண்டும். அதைத்தான் சபை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது - யாராகிலும் ஒருவர். நகரத்தில் உள்ள புகழ் வாய்ந்தவர் சேர்ந்துள்ள நகரத்திலேயே மிகப்பெரிய ஆலயத்துக்கு அவர்கள் போகத்தக்கதாக அங்கே மிகுந்த உயரமான கூர்கோபுரம் இருக்கும். அங்கே அவர்களுக்கு மிகச் சிறந்த 'ஆர்கன்' இருக்கும். அங்கே இருக்கை வரிசைகள் இருக்கும். அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையைக் குறித்து ஒன்றுமே கூறாத ஒரு போதகர் அவர்களுக்கு இருப்பார். அவர்கள் நடனமாட பிரியப்பட்டால், அவர்கள் பாவனைசெய்யப் பிரியப்பட்டால், குட்டை கால் சட்டை அணியவோ, தலைமயிரைக் கத்தரிக்கவோ, சிகரெட்டுகள் புகைக்கவோ, சமுக மது அருந்துதலில் கலந்து கொள்ளவோ விரும்பினால், அதையெல்லாம் செய்யலாம். சமுக மது அருந்துதல் சபைகளில் கையாளப்பட்டு வருகின்றது. நவீன மது அருந்துதல், உங்கள் பிள்ளைகளுக்கு அளவாக மது அருந்த கற்பித்துக் கொடுத்தல், அதிகமாக அல்ல. அவ்வாறே அளவாக புகை பிடித்தல். அதிகமாக அல்ல. எதை வேண்டுமானாலும் உடுத்திக் கொள். ஆனால் உனக்குத் தெரிந்த வரையில் நாணயமாக இருக்க பிரயாசப்படு போன்றவை. பாருங்கள்? ஓ, அது மாய்மாலம்! அந்த அபிஷேகம் பண்ணப்பட்ட பிசாசு ஸ்தாபனம் என்று அழைக்கப்படும் அது! மதம் என்று அழைக்கப்படும் அது! அது பிசாசினால் உண்டானது. கிறிஸ்துவுக்கும் அவருடைய வார்த்தைக்கும் திரும்புங்கள். இந்த மாறுபாட்டிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். மனந்திரும்புவதற்கு கால தாமதமாவதற்கு முன்பு நீங்கள் ஒவ்வொருவரும் மனந்திரும்புங்கள். அந்த கால தாமதமாகும் நேரம் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். 72உறங்கும் கன்னிகை இப்பொழுது நடந்து கொள்ளும் விதத்தைப் பார்க்கும் போது, அது ஜனங்களுக்கு பயத்தை உண்டாக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக அவர்கள், “ஓ, மகிமை. இது அற்புதம் அல்லவா? அல்லேலூயா!'' என்கின்றனர். ஓ, என்னே ஜனங்கள் எவ்வளவு தூரம் விலகிச் செல்ல முடியும்! உ, ஊ. அவர்களுடைய அரசியல் சிந்தையைக் கொண்டும், நவீன கருத்துக்களைக் கொண்டும் அவர்கள் எப்படிப்பட்ட நிலையை அடைந்துள்ளனர் எப்படி தென்ஆப்பிரிக்கப் பழங்குடியினனுக்கு (Hottentot) எகிப்திய போர்வீரனைக் குறித்து ஒன்றும் தெரியாதோ, அவ்வாறே இவர்களுக்கு தேவனுடைய வார்த்தையைக் குறித்து ஒன்றும் தெரியாது. உண்மை! அதைக் குறித்த வேத சாஸ்திரக் கருத்தை அல்லது அவர்களுக்கு கோட்பாடுகள் என்னும் வகையில் கற்பிக்கப்பட்ட ஏதோ ஒரு மனோதத்துவ கருத்தை அவர்கள் கொண்டவர்களாயுள்ளனர். பெந்தெகொஸ்தே அப்படிப்பட்ட அசுத்தத்தத்தில் நிறைந்துள்ளது. அப்படி கூறுவதனால் என்னை மன்னிக்கவும். பெண் பிரசங்கிகள் போன்ற அநேக காரியங்கள் பெந்தெகொஸ்தேயிலிருந்து தான் தொடங்கின. உண்மை! பார்த்தீர்களா? நடனம், ராக் அண்டு ரோல், கல்வி - அப்படிப்பட்ட ஒரு சபையைத் தான் உலகம் விரும்புகிறது. அப்படிப்பட்ட மேசியா தான் அவர்கள் வேண்டுமென்கின்றனர் - அவர்களை ஒன்றாக இணைக்கக்கூடிய ஒருவர் அப்படிப்பட்ட ஒருவரை நீங்கள் பெறப் போகின்றீர்கள். உ, ஊ, அதன் ஆவி ஏற்கெனவே மனுபுத்திரர்களில் கிரியை செய்து கொண்டு வருகிறது. அது உண்மை. அவர்கள் அப்பொழுதும் கிறிஸ்தவ மார்க்கத்தைப் பின்பற்றுவதாக உரிமை கோருவார்கள். அவர்கள் அதை பெற்றுக் கொள்வார்கள். 73தேவன் அவர்கள் மேல் அனுப்பினார்; 1963-ல் நம் மேல் அனுப்பினார். தேவன் துவக்கத்தில் அனுப்பின அதே அபிஷேகத்தை 1963-ல் நம்மேல் அனுப்பினால், அவர்களைப் போல் நாமும் அதைப் புறக்கணிப்போம். ஏனெனில் அபிஷேகம் பண்ணப்பட்ட மேசியா சபைக்கு வருவாரானால், அவர் எப்படியிருந்தார் என்று வேதம் கூறுகிறதோ இப்பொழுதும் அப்படியேயிருப்பார். “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” ஒருவருக்காக - ஜெபிப்போமானால், நமக்கு என்னவேண்டும்? மதசம்பந்தமான அரசியல்வாதியா? நமக்கு இராணுவ மேதையா வேண்டும்? நமக்கு படித்த விஞ்ஞானியா வேண்டும்? உங்களுக்கு ஒரு ஆட்டுக்குட்டி அவசியம் - தனக்கு மகிமையை எடுத்துக் கொள்ளாமல், உங்களை வார்த்தைக்கு திரும்பக் கொண்டு செல்லும் ஆட்டுக்குட்டி. என்னவாயினும் உங்களுக்கு சத்தியத்தை எடுத்துரைத்து அதில் நிலை கொண்டிருக்கும் ஒருவர்: ஆனால் அவர்களுக்கோ அது வேண்டாம். இன்றைக்கு அவர் வருவாரானால், அவர் முன்பிருந்ததைப் போல் இப்பொழுதும் இருப்பார்; அவர் பிதாவின் வார்த்தையில் அப்படியே நிலைத்திருப்பார். வேதத்தில் வாக்குத்தத்தம் செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு வசனமும் மனுபுத்திரர்களுக்குள் வெளிப்படுகின்றதா என்று அவர் உறுதி கொள்வார். அது நிச்சயம். 74இயேசு, “என்னில் பாவம் உண்டென்று உங்களில் யார் நிரூபிக்கக்கூடும்? என்னில் பாவம் - அவிசுவாசம் - உண்டென்று யார் குற்றப்படுத்தக்கூடும்?'', ''நான் செய்வேன் என்று பிதா கூறினவை அனைத்தையும் நான் செய்யாமலிருந்தால், நான் எங்கே அதை செய்யாமல் இருந்தேன் என்று என்னிடம் கூறுங்கள்” என்றார். ஆமென்! “நான் எங்கே செய்யாமல் குறைவுபட்டேன்.” ஆமென். அவிசுவாசம் பாவம் என்று உங்களுக்குத் தெரியும். அது உண்மை. நமக்கு அது தெரியும். “நான் செய்வேன் என்று பிதா கூறின ஒவ்வொரு வார்த்தையும் நான் எங்கே நிறைவேற்றாமல் இருந்தேன் என்று யார் எனக்குக் காண்பிக்கக்கூடும்? யார் தங்கள் விரலை என்னிடம் சுட்டிக் காட்டி, நான்அதைச் செய்யவில்லை? ஏனெனில் அவர்கள் அவரைக் குற்றப்படுத்துவதை நிறுத்தவில்லை? ஏனெனில் அவர்கள் அவ்வாறு செய்வார்களென்று தீர்க்க தரிசனம் உரைக்கப்பட்டிருந்தது. முதன் முறை அவர் எவ்வாறு பிதாவின் வார்த்தையை கைகொண்டாரோ, அவ்வாறே இம்முறையும் செய்வார். ஏனெனில் அவரால் மாறமுடியாது. தேவனே வார்த்தை. அதுதான் அவர். அவர் வார்த்தையாயிருக்கிறார். அவர் தேவனுடைய வார்த்தையை எடுத்து அதை வெளிப்படுத்தும் பரிசுத்த ஆவியாயிருக்கிறார். அதைத்தான் இயேசு கிறிஸ்து... ஆவியாகிய தேவன் - பிதா - அவருடைய குமாரனுடைய ரூபத்தில் நமது மத்தியில் வாசம் செய்தபோது, அவர் தேவனுடைய வார்த்தையை எடுத்து அதை வெளிப்படுத்தி, அதை ஜனங்களுக்குக் காண்பித்தார். ஆனால் அவர்களோ அதை வேண்டாமென்று தள்ளிவிட்டனர். அவர்களுக்கு தங்கள் சொந்த கோட்பாடுகளும், சொந்த ஸ்தாபனங்களும் இருந்தன. அப்படிப்பட்ட ஒன்று தங்கள் ஸ்தாபனங்களுக்கு முரணாக இருந்தபடியால், அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. 75இன்றைக்கும் அவ்வாறே இருக்கும் மேசியா வருவாரானால், அவர் தேவன் வேதத்தில் வாக்குத்தத்தம் செய்துள்ளவைகளை எடுத்து, அதை மனுபுத்திரருக்கு முன்பாக வெளிப்படுத்திக் காண்பிப்பார். ஆனால் ஸ்தாபனங்கள் ஒவ்வொன்றும் அவரைப் புறக்கணிக்கும். அவர்களுக்கு அது வேண்டாம். அவர்கள் அதனுடன் எவ்வித தொடர்பு கொள்ளவும் மாட்டார்கள். ஆனால் அதைத் தான் தேவன் அவர்களிடம் அனுப்புவார். அவர் எதையாவது அவர்களுக்கு அனுப்புவாரானால், அது அதுதான். அவர்கள் அதைக் குற்றப்படுத்தி தங்கள் மீது ஆக்கினையை வருவித்துக் கொள்வார்கள். அந்த நாளில் யூதர்கள் செய்தது போல, இந்த மானிடவர்க்கமும் அதைச் செய்யும், ஆம் ஐயா. அவர் என்ன செய்வார் தெரியுமா? மேசியா 1963-ல் வருவரானால், அவர் என்ன செய்வார் தெரியுமா?அவர் நாம் பெற்றுள்ள ஒவ்வொரு ஸ்தாபனத்தையும் தகர்த்தெறிவார். அதை தரைமட்டமாக்கிவிடுவார். அவர்கள், “அவர் யாரிடம் பழகுவார். டாக்டர் இன்னார் இன்னாரிடம் அல்லது டாக்டர் இன்னார் இன்னாரிடமா?'' என்பார்கள். அவர், ''நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டானவர்கள், அவனுடைய கிரியைகளையே நீங்களும் செய்கிறீர்கள்'' என்பார். அப்படித்தான் அவர் கூறுவார். வேறெந்த விதத்திலும் அவர் அவர்களைக் கடிந்து கொள்ளமாட்டார். துவக்கத்தில் அவர் வேறெந்த விதத்திலும் அவர்களைக் கடிந்து கொள்ளவில்லை. அவர் அன்று என்னவாயிருந்தாரோ, அவ்வாறே இன்றும் இருப்பார். வார்த்தைக்கு முரணாயுள்ள எதையுமே அவர் அப்படித்தான் அழைப்பார். அவர், ''நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டானவர்கள். அவனுடைய கிரியைகளையே நீங்களும் செய்கிறீர்கள். நீங்கள் அவருடைய வார்த்தைக்கு முரணானவைகளைச் செய்கிறீர்கள்'' என்பார். அது உண்மை. மேசியாவின் அடையாளம் அவரைப் பின் தொடரும். உண்மை. அவர் எழுந்து நின்று அவர்களை நோக்கி, “இப்பொழுது நடந்தவைகளை நான் நிறைவேற்றவில்லையா? என்னில் அவிசுவாசம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தகூ டும்?'' என்பார். பாருங்கள்? 76அவர்கள் அவரை ஒரு பொம்மையைப் போல் ஆக்கி, அவரை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு கொண்டு செல்ல முனைவார்கள் - அந்த பரிசேயன் செய்தது போல: மற்றவர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக, அந்த பரிசேயன் இயேசுவை அங்கு கொண்டு வந்து, அநேக விருந்தாளிகளை அங்கு வரவழைத்து, அவர் தீர்க்கதரிசி அல்லவென்று நிரூபிக்க முயன்றான். அந்த வரலாற்றை நான் போதிக்கும் விதம் உங்களுக்குத் தெரியும். பாருங்கள், இன்றைக்கும் அவர்கள் அவ்வாறே செய்வார்கள். அவர்களை மகிழ்விக்க அவரை வரவழைக்க வேண்டுமென்று அவர்கள் நினைப்பார்கள். அவர்கள் அவ்வாறே செய்வார்கள். அவரும் போவார். அல்லேலூயா! அவர் போவார், அழைக்கப்பட்ட இடத்திற்கு அவர் போவார். அந்த பரிசேயன் என்ன செய்யப் போகிறான் என்பதை அவர் அறிந்திருந்தார். அந்த பரிசேயனுக்கு அவரால் உபயோகமில்லையென்பதை அவர் அறிந்திருந்தார். ஏதோ ஒரு சூழ்ச்சி எங்கோ உண்டு என்று அவர் அறிந்திருந்தார். அந்த பரிசேயர்கள் அவரிடம் எவ்வித தொடர்பும் கொண்டிருக்கவில்லை, அவர்கள் அவரை வெறுத்தனர். அவரை அழைத்தால் திரளான ஜனங்கள் தன் இடத்திற்கு வருவார்கள் என்று கருதி, வயோதிப சீமோன் அவரை அழைக்க விரும்பினான். இயேசு அதை அறிந்து கொண்டார். அவர் அங்கு சென்றார். சீமோன் அவரை நன்றாக உபசரித்தானா? அவன் அங்கு வந்திருந்த கெளரவமுள்ளவர்களிடத்தில் மாத்திரமே தன் கவனத்தை செலுத்தினான். இயேசுவோ பாதங்கள் கழுவப்படாமல் பின்னால் உட்கார்ந்து கொண்டிருந்தார். இன்றைக்கும் அவ்வாறே நடக்கும். அவர்களுக்கு கிறிஸ்து வேண்டாம். அவர்களுக்கு தேவனுடைய வழி முறைகள் வேண்டாம். பார்த்தீர்களா? 77ஆம், இயேசு, ''நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டானவர்கள்'' என்பார். இந்த மனிதர்கள் நியாயப்பிரமாணங்களையும், அவர்களுடைய ஸ்தாபனத்திலுள்ள கோட்பாடுகளையும் எல்லாவற்றையும் ஒரு எழுத்தும் கூட பிசகாமல் அப்படியே கைக் கொண்டு வந்தனர். அவர்கள் கலசங்களைக் கழுவுவார்கள். இயேசு அவர்களை நோக்கி, “நீங்கள் உங்கள் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டு, உங்கள் பாரம்பரியத்தினால் தேவனுடைய வார்த்தையை அவமாக்கினீர்கள்'' என்றார். எபிரெயர் 9:12 இங்கு கூறுகின்றது, அதுதான் என்று தான் நினைக்கிறேன், இல்லை அது எபிரெயர் 12... இல்லை, 9:12 என்று தான் நினைக்கிறேன், அங்கு தான் எங்கோ, அவர், ''நாம் கழுவப்பட்டு மன்னிக்கப்படும் போது, நாம் செத்த கிரியைகளறச் சுத்திகரிக்கப்படுகிறோம்'' என்றார். நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு, உண்மையாக நமது பாவங்கள் மன்னிக்கப்படும் போது பரிசுத்த ஆவி நமக்குள்ளே வந்து, நாம் மாம்சீக கிரியைகளுக்கு செத்தவர்களாகிவிடுகிறோம். ஓ, பெந்தெகொஸ்தே சபையே, நீ ஏன் இப்படிப்பட்ட தவறு செய்தாய்? குருடருக்கு வழிகாட்டும் குருடரே! ஐம்பது வருடங்களுக்கு முன்பு நீ அதிலிருந்து வெளிவந்து, இந்த கூட்டம் ஜனங்களை மறுபடியும் அதற்குள்ளேயே கொண்டு சென்றுவிட்டாய் என்று உனக்குத் தெரியவில்லையா? உனக்கு கர்த்தருடைய வார்த்தை காதில் விழவில்லையா? உலர்ந்த எலும்புகளே, உங்களுக்கு என்ன நேர்ந்தது? உங்களிடம் அனுப்பப்பட்டதை நீங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டீர்கள். அன்று அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, இன்றைக்கும் அவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். 78உங்களுக்கு என்ன தெரியும்? மறுபடியுமாக அவனுடைய திட்டங்களும் ஸ்தாபன உலகத்தின் கோட்பாடுகளும் திட்டங்களும் விழுந்து கொண்டிருக்கின்றன. மனிதனுடைய திட்டங்கள் விழுந்து கொண்டிருக்கின்றன. தேவன் நமக்கு எப்பொழுதுமே ஸ்தாபனக் கோட்பாடுகளை அளிக்கவில்லை. அவர் நமக்கு ஒரு போதும் ஸ்தாபனத்தை அளிக்கவில்லை. அவர் அப்படி செய்ததாக யாராகிலும் வேதத்திலிருந்து எனக்குக் காண்பிக்க விரும்புகிறேன். ஸ்தாபனம் உண்டாக்கிக் கொள்ள அவர் எங்கு கூறியுள்ளார் என்று எனக்கு காண்பியுங்கள். நீங்கள், “அப்படியானால், சகோ. பிரன்ஹாமே, இயேசு மனிதனுக்கு எதைத்தான் அளித்தார்?'' என்று கேட்கலாம். ஒரு ராஜ்யத்தை. அல்லேலூயா! அவர் ராஜா, பரிசுத்தவான்களின் ராஜா, கர்த்தாதி கர்த்தர். அவர் நமக்கு ஒரு ராஜ்யத்தை அளித்திருக்கிறார். அரசியல்வாதியை அல்ல, ஸ்தாபன முறைமையை அல்ல, ஆனால் ஒரு ராஜ்யத்தை அவர் பிலாத்துவிடம் கூறினார். பிலாத்து ”நீ யூதருடைய ராஜாவா?'' என்று கேட்டான். அவர், ''நீர் சொல்லுகிறபடி தான்'' என்றார் அவர், “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல. என் ராஜ்யம் இவ்வுலகத்திற் குரியதானால், என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே, இப்படியிருக்க என் ராஜ்யம் பரத்துக்குரியது'' என்றார். 79நாம் பரத்திலுள்ள ராஜ்யத்தில் பிள்ளைகளாயிருப்போமானால், பின்னை ஏன் நாம் இவ்வுலகத்தின் காரியங்களைப் பற்றிக் கொள்ள வேண்டும்? அப்படியானால் எங்கோ தவறுண்டு. நமக்கு ஒரு முறைமை அளிக்கப்படவில்லை. நமக்கு ஒரு ஸ்தாபனம் அளிக்கப்படவில்லை. நமக்கு உலகத்தின் மேல் அரசியல் ஆளுகை அளிக்கப்படவில்லை. நமக்கு சாந்தகுணமுள்ள ஒரு ராஜ்யம் அளிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவன் நமக்குள் வாசம் செய்கின்றது. நீங்கள் இனி ஒருபோதும் இவ்வுலகத்திற்குரியவர்கள் அல்ல. ''சிறு பிள்ளைகளே, நீங்கள் இவ்வுலகத்திற்குரியவர்கள் அல்ல. பிதாவே, நான் உலகத்தானல்லாதது போல, அவர்களும் உலகத்தாராயிராதபடிக்கு வேண்டிக் கொள்கிறேன்.'' பாருங்கள்? அப்படித்தான் இயேசு நமக்காக ஜெபித்தார். இருப்பினும் நாம் எல்லாவிதமான ஜனங்களும் சேர்த்துக் கொள்ளப்படும் இணைப்புகளில் சிக்கிக் கொள்கிறோம். மாய்மாலக்காரரால் நிறைந்திராத சபை எதுவுமேயில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். இயேசு, ''நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக'' என்று கூறியுள்ளார். 80எனவே நீங்கள் பிறந்துள்ள தேவனுடைய ராஜ்யம் உங்களுக்கு அளிக்கப்படும்போது, நீங்கள் ஏன் ஸ்தாபனத்துடன் நுகத்தில் பிணைக்கப்பட வேண்டும்? தேவனுடைய ராஜ்யத்தில் மாய்மாலக்காரன் ஒருவன் கூட கிடையாது. எல்லோருமே ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தல் வரைக்குமுள்ள தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து அதில் நிலைத்திருக்கும் தூய்மையான, கலப்படமற்ற தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாவர். உங்கள் வாழ்க்கை அதை நிரூபிக்கிறது, தேவன் தமது வார்த்தையை அதனுடன் உறுதிப்படுத்தித் தருகிறார். அதுதான் மேசியா. அதுதான் மேசியாவின் மனைவி. தேவன் அதில் போதகர்கள் மேய்ப்பர்கள், தீர்க்கதரிசிகள் போன்றவர்களை வைத்து தமது மேசியாத்துவத்தை நேராக வைத்து, அது எந்த ஸ்தாபனக் கோட்பாடுகளுடனும் கலவாமால் இருக்க, இவைகளைப் பிடுங்கியெறிந்து, சபையை கிறிஸ்துவுக்கும் அவருடைய வார்த்தைக்கும் தூய்மையாகவும் கலப்படமற்றதாகவும் வைக்கிறார். ஸ்தாபன சபைகள் அதை ஏற்றுக்கொள்ளுமென்று நினைக்கிறீர்களா? அவர்கள் அதை உதைத்துத் தள்ளுவார்கள். அவர்கள் அதனுடன் எவ்வித தொடர்பும் கொள்ள விரும்பமாட்டார்கள். அவர்களுக்கு தங்கள் சொந்த அரசியல் முறைமை உண்டு. அமெரிக்க ஐக்கிய நாடுகள் தன் மேதையைப் பெற்றுள்ளது போல், சபையானது தன் மேதையை பெற்றுக்கொள்ளும். அது பெற்றுக் கொள்ளும், நீங்கள் கவனித்து வாருங்கள். அது இப்பொழுதே பாதையில் வந்து கொண்டிருக்கிறது. அவர்கள் அதற்குள் தங்களை நுழைத்துக் கொண்டிருக்கிறார்கள். 81நமக்கோ ஒரு ராஜ்யம் உள்ளது. அந்த ராஜ்யத்தில் நித்திய ஜீவன் உண்டு - அதில் அங்கத்தினராக சேருவதென்பது கிடையாது, ஆனால் நித்திய ஜீவன். அது நித்திய ராஜா ஒருவரால் ஆளுகை செய்யப்படுகிறது. உலகத் தோற்றத்துக்கு முன்பு முன்குறிக்கப்பட்ட நித்திய ஜனங்களுக்காக நித்திய ராஜாவினால் ஆளுகை செய்யப்படும் நித்திய ஜீவனால் நிறைந்துள்ள நித்திய ராஜ்யம். “எவர்களை முன் குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ, அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்'' (எபிரெயர்11). அது உண்மை. நீங்கள் எதை எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறீர்களோ, அதை பொறுத்தது. நீங்கள் ஆபிரகாமாய் இருந்தால், அந்த ராஜ்யத்தை எதிர்நோக்கியிருப்பீர்கள். அதை இன்று காலை என்னால் காண்பிக்க முடியும். ஆம், ஐயா. முன்குறிக்கப்பட்ட நித்திய ஜனங்களுக்காக நித்திய வார்த்தையைக் கொண்டு நித்திய ராஜா ஒருவரால் ஆளுகை செய்யப்படும் நித்திய ஜீவனால் நிறைந்துள்ள நித்திய ராஜ்யம். அதுதான் அது. அது எப்பொழுதும் இருந்தது. அது எப்பொழுதும் இருக்கும். அதற்கு துவக்கமும் இல்லை, முடிவும் இல்லை. தேவனுடைய சிந்தையில் அது... அது தேவனோடு நித்திய காலமாக உள்ளது. தேவனுடைய நோக்கம் அதில் கைக்கொள்ளப்படும். 82எனவே, இந்த உலகம் விழுந்து போய்க் கொண்டிருக்கிறது. அது விழுந்துபோகட்டும். பரவாயில்லை, அது எப்படியாயினும் விழுந்து போகத்தான் வேண்டும். மீகா இங்கு என்ன கூறுகிறான்? மீகா இங்கு எதைக் குறித்து பேசுகிறான்? பர்வதங்கள் உருகிப் போகும். அது உருகி மெழுகைப் போல் பாய்ந்து - பனிக்கட்டி ஆறு (Gacier) பீறிட்டுக்கொண்டு வருவது போல், இல்லை ஒருவகை உஷ்ண நிரூற்று (Geyser) பீறிட்டு வருவது போல். அது உருகிப் பிளந்து போகும். ஆனால் யேகோவா என்றென்றைக்கும் இருப்பார். “மாம்சமெல்லாம் புல்லைப்போல் இருக்கிறது. கர்த்தருடைய ஆவி அதன் மேல் ஊதும் போது, அது புல்லானாலும், பூவானாலும், அது எவ்வளவு அழகாயிருந்தாலும், அது உலர்ந்து உதிர்ந்து போகும். ஆனால் தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும். ஏசாயா. 40- ம் அதிகாரத்தில், மேசியாவின் வருகையைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்தபோது, இதை கூறினான். நம்முடைய கோட்பாடுகள் அனைத்தும், ஸ்தாபன முறைமைகளும், கல்வியறிவு கொண்டவர்களும், நுண்ணறிவு படைத்தவர்களும், எல்லாமே அழிந்துவிடும். ஆனால் தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும். ''இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்: பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை''. 83நாம் கிறிஸ்துமஸ் காலத்தில் இருக்கிறோம். இந்த நேரமும் நமக்கு கிடைக்குமென்று நான்அறியாதிருந்தேன். இந்த மணிநேரத்தின் தேவையை நான் நினைத்துப் பார்க்கும் போது, நான் என்னையே மறந்து விடுகிறேன். நான் துரிதமாக முடிக்கிறேன். ஆம். நாம் அந்த ராஜ்யத்துக்குள் பிறந்திருக்கிறோம்.... விசுவாசித்து அந்த ராஜ்யத்துக்குள் இருக்கும் கிறிஸ்தவர்களாகிய நாம் சற்று முன்பு நாம் எபிரெயர் புத்தகத்தில் ''நாம் ஒரு ராஜ்யத்தைப் பெறுகிறோம்'' என்று படித்தோம். ஒரு கோட்பாட்டை அல்ல, ஒரு முறைமையை அல்ல, ஆனால் “அசைவில்லா ஒரு ராஜ்யத்தைப் பெறுகிறோம்”. உலகம் விழுந்து போய்க் கொண்டிருக்கிறது. அது உண்மை. ஒவ்வொரு அரசியல்வாதியும், ஒவ்வொரு ஸ்தாபனமும் ஒவ்வொரு சபையும் விழுந்து சுக்கு நூறாக உடைந்து போகும். ஆனால் நாமோ அசைக்கப்பட முடியாத ஒரு ராஜ்யத்தைப் பெறுகிறோம். ''சீனாய் மலையிலிருந்து பேசினவருக்கு செவி கொடுக்கமாட்டோமென்று விலகினவர்கள் தப்பிப் போகவில்லை. அவருடைய சத்தம் அப்பொழுது பூமியை அசையப் பண்ணிற்று. பரலோகத்தில் தம்முடைய ராஜ்யத்திலிருந்து பேசுகிறவரை விட்டு விலாகாதபடிக்கு நீங்கள் எவ்வளவு எச்சரிக்கையுள்ளவர்களாயிருக்க வேண்டும்? ஏனெனில் நாம் அசைக்கப்பட முடியாத ராஜ்யத்தில் இருக்கிறோம். ஆமென். அதற்கு புறம்பேயுள்ள எல்லாமே... தேவன் எல்லாவற்றையும் அனுப்பினார். அவை உடைந்து போகத்தக்க பொருட்களாக செய்தார். உடைந்து போகக் கூடிய நிலையில் உள்ள அவை உடைந்து போகவேண்டும். மற்றெல்லாமே விழுந்து உடைந்து போகக் கூடியதாய் உள்ளது நாமோ திடமான ஒரு ராஜ்யத்தைப் பெற்றிருக்கிறோம் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். எட்டிபெர்ரோனெட், ''நான் கிறிஸ்து என்னும் திடமான பாறையின்மேல் நிற்கிறேன், மற்றெல்லா நிலங்களும் அழிந்து போகக்கூடிய மணல்“ என்று கூறினதில் வியப்பொன்றுமில்லை. ஒரு ராஜ்யம்! அரசியல் முறைமை அல்ல, சபை முறைமை அல்ல, ஸ்தாபன முறைமை அல்ல; இவையனைத்தும் பரிசேயர்களையும் பிசாசைச் சேர்ந்த டாக்டர் பட்டம் பெற்றவர்களையும் கொண்டுள்ளன. நாமோ ஒரு ராஜ்யத்தைப் பெறுகிறோம். அதை நித்திய ஜீவனை கொண்ட நித்திய வார்த்தையாகிய நித்தியராஜா ஆளுகை செய்கிறார். நித்திய ஜீவனைக் கொண்ட இவர், தமது நித்திய வார்த்தையை நமது நித்திய மக்களுக்கு அளிக்கிறார். நாம் அதில் பங்கு கொள்ளுகிறோம். ஓ, என்னே! அதுதான் காரியம். 84அதிலிருந்து உங்களை இழுக்கும் எதுவும் தவறானதாகும், அது கள்ள மேசியா, கள்ள அபிஷேகம். “ஓ, அந்த சகோதரனுக்கு நிறைந்த அபிஷேகம் உள்ளது என்கின்றனர். எப்படிப்பட்ட அபிஷேகம்? அதுதான் முக்கியம். ஹிட்லருக்கும் ஒரு அபிஷேகம் இருந்தது. க்ரூஷேவுக்கும் ஒரு அபிஷேகம் உள்ளது. பையஸ் போப்புக்கும் (pope Pius) ஒரு அபிஷேகம் உள்ளது. உங்களுக்குள்ள அபிஷேகம் எப்படிப்பட்டது? இந்த வார்த்தையினால் அது அபிஷேகம் பண்ணப்படாமல், ஒவ்வொரு வார்த்தையும் உண்மையென்று அது உறுதிப்படுத்தாமல் இருந்தால், அதை தனியே விட்டு விடுங்கள். அது தவறான அபிஷேகம். அது தன்னைத்தான் பிறப்பிக்காமல் இருந்தால், அது ஜீவனில்லாத ஒன்று. அது தன் உண்மையான ரூபத்தைக் காட்டிவிடும். ”ஓ, அது வேறொரு காலத்துக்குரியது. நாங்கள்...'' அதை தனியே விட்டு விடுங்கள். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். ஆம், ஐயா. எனவே இந்த உலகம் விழுந்து போகும் நிலையிலுள்ளது. நாமோ விழுந்து போகக் கூடாத ராஜ்யத்துக்குள் பிறந்திருக்கிறோம். உலகம் விழுந்து கொண்டிருக்கிறது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அதன் முறைமைகள் விழுந்து கொண்டிருக்கின்றன. அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? பொருளாதார முறைமையும் விழுந்து கொண்டிருக்கிறதென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா. அரசியல் முறைமை விழுந்து கொண்டிருக்கிறது. தேசிய, ஐ.நா. முறைமை விழுந்து கொண்டிருக்கிறது. சபை விழுந்து கொண்டிருக்கிறது. ஸ்தாபனங்கள் விழுந்து கொண்டிருக்கின்றன. எல்லாமே விழுந்து கொண்டிருக்கின்றன. ஆனால் நாமோ அசைக்கப்பட முடியாத ராஜ்யத்தை - தேவனுடைய நித்திய ராஜ்யத்தைப் பெற்றுள்ளோம். அது அசைக்கபடவே முடியாது. 85இந்த ஸ்தாபனங்களின் புது முறைமை , அதாவது அவைகளை உலக சபைகளின் ஆலோசனை சங்கத்துக்கு கொண்டு வருதல், பூமியில் சமாதானத்தை நிலைவரப்படுத்தும் என்று நமக்கு கூறப்படுகின்றது. என்ன அவமானம், கிறிஸ்துவின் முகத்தில் படாரென்று கதவை மூடும் மோசமான செயல் எத்தகைய அவபக்தியுள்ள, தேவ தூஷணமான காரியம்! அது பிசாசினால் உண்டானது. தேவன் தங்களுக்கு அனுப்பியுள்ளதைக் காட்டிலும் சிறந்த ஒன்றை மனிதர் ஸ்தாபித்துக் கொள்ள முடியுமா? பாபேல் கோபுரம்! அது விழவேண்டிய மற்றொரு பாபிலோன்? பூமியில் சமாதானமா? கள்ளமேசியா? அது அந்திக் கிறிஸ்துவின் போதகம். ஸ்தாபனங்களுக்கிடையே கருத்து வேற்றுமை உள்ளபோது, அவைகளை நீங்கள் எவ்வாறு ஒன்றாக இணைக்கப் போகின்றீர்கள்? அவர்களுக்கிடையே கருத்து வேற்றுமை இருந்த ஒரே காரணத்தால் தான் அவை சிறு சிறு ஸ்தாபனங்களாக பிரிந்துள்ளன. அவைகளை எவ்வாறு ஒன்றாக இணைத்து உலக சபை ஆலோசனை சங்கத்தில் கொண்டுவர முடியும்? பாருங்கள், அது தவறான அமைப்பு. பிராடஸ்டென்டு மார்க்கத்தை ரோம மார்க்கத்துக்குள் நுழைப்பதற்கென நடக்கும் சூழ்ச்சி இது. கள்ள, அந்திக்கிறிஸ்து போதகம். தேவனுடைய ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல. “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல” என்று இயேசு கூறினார். 86எனவே அந்த ராஜ்யம் இவ்வுலகில் ஸ்தாபிக்கப்படுமானால், அது கள்ளமேசியா. இந்த மேசியா வெகு விரைவில் பிராடெஸ்டெண்டு சபைக்கு அளிக்கப்படுவார், அவர்களும் ஏற்றுக் கொள்வார்கள். ஏனெனில் அவர்கள் அதை எதிர்நோக்கியிருக்கின்றனர். ''நல்லது , இப்பொழுது, மெதோடிஸ்டுகளாகிய நாங்கள் பாப்டிஸ்டுகளுடன் இணங்குகிறோம், உங்களுக்குத் தெரியும்மல்லவா? பிரஸ்பிடேரியன்களாகிய நாங்களும் பெந்தெகொஸ்தேயினராகிய நாங்களும்; ஓ, அவர்களுக்கிடையே என்ன வித்தியாசம், சகோதரனே?'' என்று கூறும் அளவுக்கு அவர்களை ஒருங்கே இணைக்கும் ஒரு முறைமையை அவர்கள் எதிர்நோக்குகின்றனர். அவர்களிடையே வித்தியாசம் உண்டு! தேவன் உங்களை வித்தியாசமாக செய்திருக்கிறார். ''நாங்கள் அதை தியாகம் செய்துவிடுவோம்'' உங்கள் மகத்தான சுவிசேஷ போதனையை நீங்கள் விட்டு விடவேண்டியிருக்கும். எதையுமே விசுவாசிக்காத அந்த கூட்டம் ஜனங்களுடன் நீங்கள் எவ்வாறு சேர்ந்து கொண்டு அதில் பிரவேசிக்க முடியும்? அவர்களில் சிலர் நாத்திகர். அது கள்ள மேசியா. அது உண்மை. ஆம், ஐயா. 87தேவனுடைய ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல. கிறிஸ்து இங்கிருந்தபோது, இந்த ராஜ்யத்தைக் குறித்த திட்டத்தை நமக்கு அருளினார். அவர் தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்த திட்டத்தை பிதாவின் ராஜ்யத்தைக் குறித்த திட்டத்தை - நமக்கு அருளினார். அதுஅவருடைய வார்த்தை. அந்த ராஜ்யத்தில் பிரவேசிப்பது எப்படியென்று நீங்கள் அறிய விரும்பினால், இந்த வார்த்தையில் அது அடங்கியுள்ளது. நீங்கள் வேறெந்த வாசலின் வழியாக வருவீர்களானால்... மற்றவர்கள் உட்பிரவேசித்த அதே வாசலின் வழியாக நீங்களும் வரவேண்டும். நீங்கள் வேறு வழியாக உட்பிர வேசிக்க முயன்றால், நீங்கள் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருப்பீர்கள். அவர், ''எவனாகிலும் இதனோடு ஒரு வார்த்தையைக் கூட்டினால், அல்லது ஒரு வார்த்தையை எடுத்துப் போட்டால், அவனுடைய பங்கு ஜீவ புஸ்தகத்திலிருந்து எடுத்து போடப்படும்'' என்றார். எனவே உங்கள் பெயர் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளதாக உரிமை கோரினால், அது எடுத்து போடப்படும் படியாக நடந்து கொள்ளாதீர்கள். பெந்தெகொஸ்தே நாளன்று பேதுரு அந்த ராஜ்யத்தின் வாசலை திறந்தான். அப்பொழுது தான் ராஜ்யம் எருசலேமில் ஸ்தாபிக்கப்பட்டது. சபையானது ரோமாபுரியில் துவங்கினது என்று யாராகிலும் ஒருவர் என்னிடம் கூறும்படி விரும்புகிறேன். அதை யாராகிலும் எனக்கு நிரூபித்துக் காண்பிக்க விரும்புகிறேன். சபையானது ரோமாபுரியில் துவங்கவில்லை, அது எருசலேமில் துவங்கினது. பெந்தெகொஸ்தே நாளன்று ராஜ்யமானது ஸ்தாபிக்கப்பட்டது. அந்த ராஜ்யத்தில் பிரவேசிப்பது எப்படியென்று அறிந்துகொள்ள சிலர் விரும்பினபோது, பேதுரு ''நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்“ என்றான். ஏனெனில் அதுதான் அவர்களை ராஜ்யத்துக்குள் சேர்க்கிறது. வேறெந்த கொள்கையும் - அது ஸ்தாபனத்தின் மூலமாகவோ, அல்லது கை குலுக்குதலின் மூலமாகவோ, அல்லது வேறெதுவும் - கள்ள மேசியாவே. நீங்கள் எவ்வளவு புகழ் வாய்ந்தவராக இருந்தாலும், நீங்கள் எவ்வளவு முக்கியமானவராக இருந்தாலும் - நீங்கள் ”டிகனாகவோ, (deacon) போதகராகவோ, பேரயாராகவோ, மூப்பராகவோ, அல்லது நாட்டு கண்காணிப்பாளராகவோ இருக்குக் கூடும். நீங்கள் யாராயிருப்பினும்“, நீங்கள் தேவனுடைய தாழ்மையுள்ள ஆட்டுக்குட்டியானவரிடம், அவருடைய ராஜ்யத்திலும் வரும்வரைக்கும், அவையனைத்தும் தவறு. 88இப்பொழுது கவனியுங்கள். அவர் நமக்கு ஒரு திட்டத்தை அளித்தார் - பிதாவின் வார்த்தை. உண்மையான விசுவாசி எவனும் அதை இறுகப் பற்றிக் கொள்கிறான். ஏனெனில் அப்படி செய்யாமல் அவனால் இருக்கமுடியாது, அது அவனுக்குள் இருக்கும் ராஜ்யமாகும். அவன் ஆபிரகாமைப் போல், தேவனுடைய வார்த்தைக்கு முரணாயுள்ள எதையுமே, அது இல்லாதது போல் பாவிக்கிறான். யாராகிலும் உங்களிடம் ஸ்தாபனம் தேவனால் உண்டானது என்று கூறுவார்களானால், நீங்கள் ஆபிரகாமைப் போல் நடந்து கொள்ளுங்கள். யாராகிலும் உங்களிடம் நீங்கள் தெளிக்கப்பட வேண்டுமென்றோ, அல்லது தேவனுடைய வார்த்தைக்கு முரணான ஏதாகிலும் ஒன்றை, ஒரு முறைமையை உங்களிடம் கூற முனைந்தால், அதை விசுவாசிக்காதீர்கள். அது இல்லாது போல் பாவியுங்கள். அவர்கள் இனியவரே, “நீங்கள் இப்படிச் செய்வதனால் பாதகமில்லை'' என்பார்களானால், அதை விசுவாசிக்காதீர்கள்... ”ஸ்திரீகள் தலைமயிரைக் கத்தரித்துக் கொள்வதனால் ஒரு பாதகமுமில்லை“ என்கின்றார். ஆனால் தேவனுடைய வசனமோ, அப்படி செய்வது அவருக்கு அருவருப்பானது என்கிறது. ''நான் 'ஸ்லாக்ஸ்' தான் அணிகிறேன். நான் குட்டை கால்சட்டை அணிவதில்லை'' என்கிறீர்கள். ஆனால் புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிப்பது தேவனுக்கு அருவருப்பானது என்று தேவன் கூறியுள்ளார். ஸ்திரீகள் தலைமயிரைக் கத்தரித்துக் கொள்ளுதல் தவறு என்று வேதம் கூறுகிறது. அவள் அந்நிலையில் ஜெபம் பண்ணுவது சரி யல்ல. அவள் தலையை மூடிக் கொள்ளாவிட்டால், அவள் தன் தலையை கனவீனப்படுத்துகிறாள். அப்படி செய்யக்கூடாதென்று தேவன் தடை செய்கிறார் அப்படி செய்வதனால் பாதகமில்லை என்ற ஒரு முறைமை உங்களிடம் கூறினால், அதை நம்பாதீர்கள். அது கள்ள அபிஷேகம் பெற்றது, அது கள்ளகிறிஸ்து, அது தேவனுடைய வார்த்தைக்கு விரோதமானது. நீதிமான்கள் தேவனுடைய வார்த்தையை இறுகப் பற்றிக் கொள்கின்றனர். ஏனெனில் அது தேவனுடைய நித்திய முறைமையின் திட்டமாய் அமைந்துள்ளது. 89தேவன் மனிதனை உண்டாக்கினபோது, அவனை ஒரு வழியில் சிருஷ்டித்தார். அவர் ஸ்திரீயை உண்டாக்கினபோது, அவளை வேறு வழியில் சிருஷ்டித்தார். இரண்டு வெவ்வேறு உடன்படிக்கைகள், இரண்டு வெவ்வேறு திட்டங்கள், இருவரிடையே எல்லாமே வித்தியாசமாக அமைந்துள்ளது. காண்பதற்கும் அவர்கள் ஒரே மாதிரி இல்லை, அவர்கள் ஒரே மாதிரி நடந்து கொள்ள கூடாது, அவர்கள் முழுவதும் வித்தியாசப்பட்டவர்கள். ஆனால் பெண்கள் ஆண்களைப் போல் இருக்க முயல்கின்றனர், ஆண்களும் பெண்மைத்தனம் கொண்டு பெண்களைப் போல் இருக்கின்றனர். நேற்று சின்சின்னாட்டியில் ஒரு பையனைக் கண்டேன். காண்பதற்கு அவன் திருமதி கென்னடியைப் போல் இருந்தான். அவனுடைய தலைமயிர் அவ்வாறு கத்தரிக்கப்பட்டிருந்தது. ஆண் ஆணைபோல் காணப்பட வேண்டுமென்றும், பெண் பெண்ணைப் போல் காணப்பட வேண்டுமென்றும் தேவன் விரும்புகிறார். நான் உங்களுக்கு சொல்லுகிறேன், பிசாசினால் உண்டான இந்த யேசபேல் முறைமை முழு உலகத்தையும் கறைபடுத்திவிட்டது, அதனால் நல்ல இடம் எதுவுமேயில்லை. அது முழுவதும் அழுகிப்போன புண்கள், புற்றுநோய் புண்கள், பிசாசின் மிகுந்த கொடுமை (malignancy) அவர்கள் ஏற்படுத்தியுள்ள முறைமைகளின் மூலம் உள்ளே வரைக்கும் புற்றுநோயைப் போல அரித்து வருகிறது. சாத்தான் தன் சொந்த ராஜ்யத்திலேயே தன்னைப் போஷித்துக் கொள்ளும் பருந்தாக இருக்கிறான். அவன் பிசாசு, அவன் அசுத்தமுள்ளவன், அவன் பொய்க்குப் பிதாவாயிருக்கிறான், அவன் சொந்த ஜனங்களின் மாம்சத்தைத் தின்கிறான். பிசாசு! 90கிறிஸ்துவோ ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும், அபிஷேகம் பண்ணப்பட்ட மேசியாவுமாயிருக்கிறார். விசுவாசி வார்த்தையை இறுகப்பற்றிக் கொள்கிறான். தேவனும் அவருடைய வார்த்தையும் ஒன்றே. நானும் என் வார்த்தையும் ஒன்றே. நீங்களும் உங்கள் வார்த்தையும் ஒன்றே. விசுவாசிகள் தங்கள் சுயசிந்தையின் மேல் சாய்வதில்லை. அவர்கள் அதை உபயோகிப்பதில்லை. அவர்கள் அவருடைய சிந்தனையையே உபயோகிக்கின்றனர். அப்பொழுது நீங்கள் தேவனுடைய ஒரு பாகமாகிவிடுகின்றீர்கள். ஏனெனில் நீங்களும் அவருடைய வார்த்தையும் ஒன்றாகி விடுகின்றீர்கள், பாருங்கள்? அப்பொழுது நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தில் இருக்கின்றீர்கள். தேவனுடைய வார்த்தைக்கு முரணாயுள்ள எதையுமே ஆபிரகாம், அது இல்லாததுபோல் பாவித்தான். ஆம், அவன் இன்றைய மனிதனால் ஏற்பட்ட முறைமைகளுக்கும் அவன் அதையே செய்வான். அப்படிப்பட்ட ராஜ்யத்தில் இருக்கும் போது... நான் முடிக்கப் போகின்றேன், இங்குள்ள சில குறிப்புகளை நான் விட்டுவிட்டு முடிக்கப் போகின்றேன். பாருங்கள், அது... அப்படிப்பட்ட ராஜ்யத்தில் இருப்பதனால் என்ன நடக்கின்றது? இந்த வசைச் சொற்களை பெற்றுக்கொண்டு, தேவனுடைய வார்த்தையின் மூலம் பரிசுத்த ஆவியினால் எனக்கு அளிக்கப்பட்ட கட்டளைக்கு நான் பயபக்தியாயும் மரியாதையுடனும் நடந்து கொண்டு, நான் கண்காணிக்கும்படியாக எனக்கு அவர் அளித்துள்ள மந்தையிடம் நான் கெளரவமாக, நடந்து கொண்டு, என்ன வந்த போதிலும் அதில் உறுதியாய் நிலைநின்று, வலது பக்கத்திலும், இடதுபக்கத்திலும் எல்லாவற்றையும் உதறித்தள்ளிவிட்டு இந்த வார்த்தையில் உறுதியாய் நின்று வந்திருக்கிறேன். அதுவே நான் பெற்ற கட்டளை. நாம் ஒரு ராஜ்யத்தைப் பெறுவோமானால்... 91''சகோ. பிரன்ஹாமே, மற்றெல்லாரும் நீ எந்த ஸ்தாபனத்தை சேர்ந்திருக்கிறாய்?'' என்று கேட்கின்றனர். ''எந்த ஸ்தாபனத்தையும் இல்லை'' என்று சொல். ''அப்படியானால் நீ யார்?'' ''நாங்கள் ஒரு ராஜ்யத்தை சேர்ந்திருக்கிறோம்''. ''நீங்கள் எங்கு ஒன்று கூடுகிறீர்கள், எங்கு செல்கிறீர்கள்?'' “நாங்கள் எங்கள் ராஜாவின் சமுகத்துக்கு உயர்த்தப்பட்டு, கிறிஸ்து இயேசுவோடே கூட உன்னதங்களில் உட்கார்ந்திருக்கிறோம்.'' 'தேவனுடைய ராஜ்யம்...' 'மகிமை', இப்பொழுது நான் பக்தி பரவசப்படுகிறேன். அவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் ஒன்று கூடுகின்றனர். பரிசுத்தஆவி அவர்களை ராஜாவின் சமுகத்துக்கு உயர்த்துகின்றது. நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் ஞானஸ்நானம் பண்ணப்படும் போது, நாம் ஒருமித்து உன்னதங்களில் உட்காருகிறோம். அதுதான் நமக்கு சொந்தமான இடம். 92நாங்கள் அங்காடிக்கு கடந்த கோடையின் போது சென்றிருந்தபோது, மனைவி என்னிடம் கூறினாள்; அதைக் குறித்து நான் உங்களிடம் ஏற்கனவே கூறியுள்ளேன். அங்கு உடை உடுத்தியிருந்த ஒரு பெண்ணை நாங்கள் கண்டோம். அது மிகவும் வினோதமான காட்சியாயிருந்தது. அவள் மற்ற பெண்களுக்கிடையே வினோதமாக காட்சியளித்தாள். பாருங்கள்? என் மனைவி என்னிடம், ''ஏன் இப்படி நடக்கிறது? இந்த பெண்களை நாம் அறிவோம். “இவர்களில் சிலர் இங்குள்ள பாடல் குழுக்களில் பாடுகின்றனர்'' என்றாள். ஓ, நண்பனே! இதை நான் கூறப் போகின்றேன். இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டாலும், இதை நான் எப்படியாயினும் கூறுவது நலம். இதை நான் பயபக்தியுடனும் மரியாதையுடனும் கூறுகிறேன். இதை இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள். ஆயிரக்கணக்கானவர் ஆயிரக்கணக்கான முறை மேடையின் மேல் வருவதை நீங்கள் கண்டிருக்கிறீர்கள். அவர்கள் வந்த ஒவ்வொரு முறையும், அது தவறாயிருந்ததேயில்லை. இங்குள்ள சகோ. ஆர்கன் பிரைட், நாங்கள் உலகின் எந்தெந்த பாகங்களுக்கு சென்றிருக்கிறோம் என்றறிவார். வெளிநாடுகளிலும் கூட அது உண்மையைக் கூறினதேயன்றி ஒருமுறை கூட தவறினதில்லை. நான் இவ்விடங்களுக்குச் சென்று நீண்ட அங்கிகளை அணிந்துள்ள பாடற் குழுக்களைக் காணும் போது - ஆண்களும் பெண்களும் கொல்கொதா நீள அங்கிகளை உடுத்திக் கொண்டு, அங்கு நின்று கொண்டு தேவ தூதர்களைப் போல் இனிமையாகப் பாடுவதை நான் கேட்பதுண்டு. ஆனால் பகுத்தறியும் ஆவியுடன் பார்க்கும் போது, அசுத்தத்தில் ஈடுபட்ட குற்றத்துக்கு ஆளாகதவர்கள் ஐந்து பேரை உலகம் முழுவதிலுமுள்ள பாடற் குழுக்களிலிருந்து தெரிந்து கொள்ள நான் கேட்டுக் கொள்ளப்பட்டால், அவர்களை எங்கு கண்டுபிடிப்பேனோ எனக்குத் தெரியாது. அது கடினமான வாக்குமூலம்தான், ஆனால் அது உண்மை. தேவன் அதை அறிவார். என் வேதாகமத்தின் மேல் வைக்கப்பட்டுள்ளது. அது உண்மை. அவர்களை எங்கே கண்டுபிடிக்க முடியுமென்று எனக்குத் தெரியாது. பாருங்கள், ''உனக்குத் தெரிந்த அப்படிப்பட்ட ஐந்து பேர்களைக் கொண்டு வா“ என்று தேவன் என்னிடம் கூறுவாரானால், ''நான் எங்கே போவது என்று எனக்குத் தெரியவில்லையே” என்ற விடையளிப்பேன். ஓ, என்னே! அப்படிப்பட்ட ஒரு முறைமை! அப்படிப்பட்ட அசுத்தம்! 93அதைத்தான் உலகம் வேண்டும் என்கின்றது. முன்பும் அதைத்தான் அது விரும்பினது, இப்பொழுது அதைத்தான் அது விரும்புகிறது. அதைத்தான் இப்பொழுது அது பெற்றுக்கொள்ளப் போகின்றது. மனிதன் வேறொருவரின் மனைவியுடன் கூட வெளியில் சென்று, குடித்து, புகை பிடித்து, ஒரு நீண்ட அங்கியை அணிந்து கொண்டு பாடும்போது, அதெல்லாம் மறைந்து விடுகிறதென்று எண்ணுகிறான். ஆனால் தேவனோ அந்த அத்தி இலையின் வழியாகக் காண்கிறார். அந்த ஏவாள் தன் இருதயத்தில் போதிய குற்றத்துடனும் அசுத்தத்துடனும் அங்கு நின்று கொண்டிருக்கிறாள்... அது தண்ணீராக மாறினால், அது ஒரு படகையே மிதக்க வைத்துவிடும். அவள் அங்கு இயற்கையாக பெற்றுள்ள தாலந்தைக் கொண்டு பாடி, உச்ச ஸ்ருதியை அடைந்து, தன் முகம் கறுப்பாகும் வரைக்கும், அவளுடைய சத்தத்தை உச்ச சாரீரத்திலேயே பிடித்து நிறுத்தி, தேவ தூதனைப்போல் பாட முயல்கிறாள். ஆனால் அந்த நீண்ட அங்கிக்குப் பின்னால் அவதூறு, அசுத்தம் நிறைந்துள்ளது. நீங்கள் பிரசங்க பீடத்தில் நின்று கொண்டு அதை கூறினால், அவள் வர்ணம் தீட்டப்பட்ட தன் உதடுகளைப் பிதுக்கி, ''இப்படிப்பட்ட ஒன்றை நான் கேட்க விரும்பவில்லை'' என்று கூறி கட்டிடத்தை விட்டு வெளியே நடந்துவிடுவாள். ஆனால் என்றாவது ஒருநாள் நீ அனுதாபம் கேட்டு நரகத்தில் கதறுவாய். அப்பொழுது காலதாமாகியிருக்கும். தருணம் உள்ள பொழுதே அதை ஏற்றுக்கொள், நீ! ஓ, என்னே! 94ஆனால் சபையோ ஒரு ராஜ்யத்தைப் பெறுகின்றது. நாம் தேவனுடைய சமுகத்துக்கு உயர்த்தப்பட்டு உன்னதங்களில் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களில் உட்கார்ந்து கொண்டு அபிஷேகம் பண்ணப்பட்ட நமது ராஜாவின் சமுகத்தில் நாமிருக்கிறோம் என்னும் உறுதியான விசுவாசத்தை உடையவர்களாயிருக்கிறோம். ஓ! புதிய வானமும் புதிய பூமியும் வரப்போகின்றது. நித்தியம் உள்ள வரைக்கும் அவை பிரிந்து போவதில்லை. அந்த புதிய வானமும் புதிய பூமியும் வருவதற்காக நாம் காத்திருக்கிறோம். உங்களுக்கு வேண்டுமானால், இதை எல்லாவற்றையும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் எனக்கோ அதுதான் வேண்டும். உங்கள் விருப்பங்களை எங்கே வைத்திருக்கிறீர்களோ, அதைப் பொறுத்தது. நீங்கள் எந்த கம்பத்தில் கட்டப்பட்டிருக்கிறீர்களோ, அதைப் பொறுத்தது. நீங்கள் ஸ்தாபன கம்பத்தில் கட்டப்பட்டிருந்தால், அதனுடன் நீங்களும் கீழே சென்றுவிடுவீர்கள். இவ்வுலகம், அரசியல் போன்றவைகளில் உங்களைக் கட்டிக் கொண்டு, அதன் பேரில் நீங்கள் நம்பிக்கை வைத்திருந்தால், அதனுடன் நீங்களும் அமிழ்ந்து போவீர்கள். 95ஆனால் என் நம்பிக்கையோ நீதியுள்ள இயேசுவின் இரத்தத்தின் பேரில் மாத்திரமேயல்லாமல், வேறெதன் பேரிலும் கட்டப்பட்டிருக்கவில்லை. சுற்றிலும் என் ஆத்துமா சோர்ந்து போகின்றது, போதகர் ஒவ்வொருவரும் என்னைப் புறக்கணிக்கின்றனர். ஒவ்வொரு கோட்பாடும் என்னை வெளியே துரத்துகின்றது. எனக்குப் போக ஒரு இடமும் இல்லை. அவரே என் எல்லா நம்பிக்கையும் உறைவிடமுமாயிருக்கிறார். அந்த கல்லின் மேல், கிறிஸ்து என்னும் திடமான பாறையின் மேல் நான் நின்று கொண்டிருக்கிறேன். மற்றெல்லா நிலங்களுமே அமிழ்ந்து போகும் மணலே. என்றாவது ஒரு நாள் நான் எங்காவது உள்ள ஒரு கல்லறையில் அடக்கம் பண்ணப்படலாம், கடலில் மூழ்கிவிடலாம், விமான விபத்தில் அல்லது ரயில் அல்லது மோட்டார் வாகன விபத்தில் கொல்லப்படலாம் - நான் செல்ல வேண்டுமென்று தேவன் தெரிந்து கொண்டுள்ள எந்த இடத்திலாகிலும். ஆனால் இது ஒன்று மாத்திரம் நானறிவேன். அதாவது என் ஆத்துமாவை நான் அப்பாலுள்ள இளைப்பாறுதலின் துறைமுகத்தில், அவருடைய வார்த்தையில், நங்கூரமிட்டுள்ளேன். இது தேவனுடைய வார்த்தையாய் இருக்க வேண்டுமென்று விசுவாசிக்கிறேன். தேவன் உலகத்தை ஏதாவது ஒன்றைக் கொண்டு நியாயந்தீர்க்க வேண்டும். அவர் சபையைக் கொண்டு நியாயந்தீர்க்க எத்தனித்தால், எந்த சபையைக் கொண்டு நியாந்தீர்ப்பார்? அப்படி நியாயந்தீர்க்க ஒன்றுமே இல்லையே. அப்படியானால் மீதியாயுள்ளது ஒன்றே ஒன்று, அதுதான் அவருடைய வார்த்தை. அது நித்தியமானது. அதனுடன் ஒன்றையும் கூட்டவோ அல்லது அதிலிருந்து ஒன்றையும் எடுத்துப் போடவோ முடியாது. 96என் ஆத்துமாவை அங்கு நங்கூரமிட்டுள்ளேன் - என் கைகளை அந்த பலியின் மேல் வைத்து, நான் நல்லவன் அல்ல என்று அறிக்கை செய்யும் அந்த எளிமையின் மூலம். ஓ, தேவனாகிய கர்த்தாவே, என்னில் ஒன்றுமில்லை. அந்த மேசியாவை என் மேல் அனுப்பி, நான் எப்படியிருக்க வேண்டுமென்று விரும்புகிறீரோ, அவ்விதமாக உமது சொந்த ரூபத்தில் என்னை மாற்றி அமைப்பீராக. நீங்கள் எவ்வளவுதான் ஒரு சரீரத்தை சுட்டெரித்தாலும், ஒருவனை நீங்கள் எவ்வளவுதான் நிர்மூலமாக்கினாலும், எவ்வளவுதான் நீங்கள் அவர்களுக்கு விரோதமாக பேசினாலும், என்றாகிலும் ஒரு நாள் அவர் நம்மை உயிரோடெழுப்புவார். அசைக்கப்பட முடியாத ஒரு ராஜ்யத்தை நாம் பெற்றுக் கொள்வோம், ஓ, என்னே! ஞாபகங் கொள்ளுங்கள், நாம் இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கும் உன்னதங்களில் உட்கார்ந்திருத்தல் போன்ற மகிமையுள்ள காரியங்கள் அனைத்துமே ஒரு முகவுரை (Prelude) மாத்திரமே. அல்லேலூயா! அது வரப்போகிறதற்கு முகவுரையாக அமைந்துள்ளது. அது பெரும் இன்னிசையை (Symphony) அறிமுகப்படுத்தும் பாகமாக உள்ளது... ஓ! அல்லேலூயா! இந்த கூச்சலிடுதலும், துதித்தலும், ஆட்டுக்குட்டியானவரை மகிமைப்படுத்தலும் குறித்து நாம் பேசுகிறோம். ஒரு நாள் தேவதூதர்கள் தலைவணங்கினவர்களாய் பூமியின் வளைவைச் சுற்றிலும் நின்று கொண்டு, இரத்தத்தால் கழுவப்பட்ட அந்த சிறு கூட்டம் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தைக் குறித்த மீட்பின் பாடல்களைப் பாடுவதைக் கேட்கும் போது, ஓ, தேவனே, நானும் அந்த கூட்டத்தில் சேர்ந்திருக்க விரும்புகிறேன். இப்பொழுதே என் இடத்தை நான்அவருடன் எடுத்துக் கொள்வேனாக. இயேசு என்னுடையவர் என்னும் என் உறுதியை நான் அறிவிப்பேனாக. நான் அவரையும் அவருடைய வார்த்தையையும் ஏற்றுக் கொள்வேன். 97முடிப்பதற்கு முன், பிள்ளைகள் புரிந்து கொள்வதற்காக, கிறிஸ்துமஸ்க்காக இந்த சிறு கதையைக் கூற விரும்புகிறேன். நான் அதிக நேரம் பிரசங்கித்து உங்களுக்கு கோப மூட்டியிருந்தால்... நேற்று ஒரு பெண்... சகோ. பிரவுன், அந்த அபிஷேகம் பெற்ற மனிதன், ஒரு மணி நேரம் மிகவும் அருமையான பிரசங்கத்தைப் பிரசங்கித்தார். அவள், ''அவர் அவர்களை நீண்ட நேரம் பிடித்து வைத்து விட்டார்“ என்றாள். பவுல் இரவு முழுவதும் பிரசங்கம் செய்தான். அவர்களுக்கு உறக்கம் வரும் வரைக்கும் அவர்கள் அங்கேயே உட்கார்ந்து கொண்டிருந்தனர் ஒருக்கால் அவர்கள் அநேக மணி நேரம் அங்கு உட்கார்ந்திருக்கக் கூடும். ஒருவன் கீழே விழுந்து மரித்துபோனான். பவுல் அவன் மேல் படுத்து ''கவலைப்படாதிருங்கள்'' என்றான். சரியான காரியத்துக்கு செவி கொடுங்கள். காலணிகள் செய்யும் சக்கிலி ஒருவன் இருந்தான். அவன் ஜெர்மனியில் இருந்தான் என்று நினைக்கிறேன். அவன் காலணிகளை அவர்களுக்கு செய்து கொடுப்பது வழக்கம். ஒரு நாள்... அவனுடைய ஓய்வு நேரங்களில் அவன் வேதாகமத்தை எடுத்து படிப்பதுண்டு. அவன் வேத வாக்கியங்களிலுள்ள சந்தர்ப்பத்தையும் பொருளையும் வாசித்து வந்த காரணத்தால் தேவனிடம் மிகுந்த பற்று கொண்டான். ஒரு நாள் அவன், “கிறிஸ்துமஸ் வரும்போது நான் கிறிஸ்துமஸ் மரம் வைத்து அதை விளக்குகளால் அலங்கரிக்கமாட்டேன்'', என்றான். அவன், ”நான் என்ன செய்வேன் தெரியுமா? நான் ஒரு பெரிய விருந்தை ஆயத்தம் செய்வேன். என் ஆட்டுக்குட்டியை நான் வறுத்து, என் பழங்களை வைத்து, குழம்பு சமைத்து வைப்பேன் என்றான். அவன் தனிமையாக இருந்தான். அவன், ''அவைகளை நான் மேசையின் மேல் வைத்து, இயேசு வந்து எனக்கு எதிரில் மேசையில் உட்காரும்படியாக அவருக்கு நான் அழைப்புவிடுப்பேன். தேவனுடைய மேசியாவையும் அவருக்கு எப்படி மரியாதை செலுத்துவதுதென்றும் நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன். இவையெல்லாவற்றையும் நான் செய்வேள். பிறகு நான் மேசையினருகில் உட்கார்ந்து அவருடைய ஆசீர்வாதங்களுக்காக ஜெபம் செய்து, அவர் எனக்கு கொடுத்தவைகளுக்காக தேவனுக்கு நான் நன்றி செலுத்தப் போகின்றேன், பிறகு நான், ''கர்த்தராகிய இயேசுவே, நீர் வந்து எனக்கு எதிரில் மேசையில் அமர்ந்து, என்னுடனே கிறிஸ்துமஸ் விருந்து உண்ணமாட்டீரா? என்று கேட்பேன்“ என்றான். 98அந்த எளிமை, தேவன் அந்த உத்தமத்துக்கு எப்பொழுதும் செவிகொடுக்கிறார். அந்த வயோதிப சக்கிலி அப்படிப்பட்ட விருந்தை ஆயத்தப்படுத்துவதற்காக தன் பணத்தை சேமித்து வைத்தான். அவன் ராஜாதி ராஜாவை விருந்துக்கு அழைக்கப் போகிறான். அவன் உணவு சமைத்து, மேசையின் மேல் பரப்பினான். அவன் தன்னை நன்றாக சுத்தம் செய்து கொண்டு, தன்னை அலங்கரித்துக் கொண்டு, தலைவாரிக் கொண்டான். அவன் மேசையில்உட்கார்ந்து இயேசுவுக்காக ஒரு நாற்காலியே போட்டான். அப்போஸ்தலர்கள் வந்தால் அவர்களுக்கும் நாற்காலிகள் தேவையாயிருக்குமே என்றெண்ணி இன்னும் சில நாற்காலிகளை அங்கு வைத்தான். எனவே அந்த வயோதிபன் தலைகுனிந்து ஆசீர்வாதத்தைக் கோரி, உணவிற்காக தேவனுக்கு நன்றி செலுத்தினான். அவன், ''விருந்தை உண்ணமாட்டீரா?'' என்றான். அவன் உணவு உண்ணத் தொடங்கி நாற்காலியையும் கவனித்துக் கொண்டேயிருந்தான். யாரும் வரவில்லை. அவன் இன்னும் சிறிது நேரம் உண்டான். அவன், “தேவனாகிய கர்த்தாவே, நான் உம்மை என் வீட்டுக்கு அழைத்தேன். நீர் வந்து என்னுடன் இருக்கமாட்டீரா?'' என்றான். அவன் கையை நீட்டி, உண்ண ஏதோ ஒன்றை எடுத்த போது, யாரோ ஒருவர் கதவைத் தட்டினார். அவன் கதவண்டை சென்றபோது, அங்கு ஒரு வயோதிபன் தொங்கிய தோள்களுடன் கிழிந்த சட்டை உடுத்தி நின்றுக் கொண்டிருந்தான். அவன், “தயவுள்ள ஐயா, நான் குளிரால் நடுங்கிக் கொண்டிருக்கிறேன். நான் உள்ளே வந்து உஷ்ணமாகிக் கொள்ள அனுமதிப்பீரா?'' என்று கேட்டான். சக்கிலி, ''உள்ளே வா“ என்றான். அவன் உள்ளே வந்த போது, உணவின் நறுமணத்தை முகர்ந்தான். அவன் வாயில் நீர் ஊறத் தொடங்கினது. அவன் திரும்பிப் பார்த்தான். அப்பொழுது அவன், ”என்னுடன் உட்கார்ந்து உணவு உண்ண விருப்பமா? நான் கூட்டாளிகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் வரும் வரைக்கும் என்னுடன் அமர்ந்து உணவு அருந்துவாயா?'' என்று கேட்டான். அந்த வயோதிபன், “நன்றி, எனக்கு மிக்க மகிழ்ச்சி என்றான்”. அவன் உட்கார்ந்தான். இருவரும் உணவு உண்டனர். வயோதிபன் அவனுக்கு நன்றி செலுத்திவிட்டு, எழுந்து போய் விட்டான். 99சக்கிலி, “தேவனாகிய கர்த்தாவே, என்னை ஏன் நீர் ஏமாற்றினீர்? எல்லாவற்றையும் நான் ஆயத்தம் செய்தேன். எனக்குத் தெரிந்த வரைக்கும், எல்லாவற்றையும் நான் செய்து வைத்தேன்'' என்றான். நீங்களும் அவ்வாறு செய்தால் எனக்குத் தெரிந்த வரைக்கும் எல்லாவற்றையும் நான் செய்து வைத்தேன். ”நீர் வந்து என்னுடன் உணவு அருந்துவீர் என்று எண்ணினேன்'' என்று சொல்லி அழுது கொண்டே படுக்கையில் சென்று விழுந்தான். அவன் படுக்கையில் படுத்துக் கொண்டே, ''கர்த்தாவே, நான் சரியென்று நினைத்த அனைத்தையும் செய்தேன். நீர் ஏன் என்னுடன் உண்ண வரவில்லை?'' என்று கூறி அழுதான். அப்பொழுது ஒரு சத்தம் அவனுக்கு உண்டாயிற்று அவன், “மிகவும் சிறியவராகிய இச்சகோதரரில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்” என்னும் வேத வாக்கியத்தை நினைவு கூர்ந்தான். 100ஆம், ஐரினேயஸ்... உங்கள் மன்னிப்பைக் கோருகின்றேன், அது பரி. மார்டின். கிறிஸ்மஸ்க்கு முன்னால், ஒரு குளிரான நாளில், ஒரு ஏழை வயோதிப பிச்சைக்காரன் குளிரில் விறைத்து தெருவில் கிடந்திருந்தான். பணக்காரர் அந்த வழியே கடந்தபோது அவனை உற்றுநோக்கி, “அவன் ஒன்றுமில்லாதவன், அவன் வெறும் பிச்சைக்காரன், அவன் அங்கேயே கிடக்கட்டும்'' என்று சொல்லி போய்விட்டனர். மார்டின் அங்கு நின்று கொண்டு, உதவி செய்யக் கூடியவர்கள் யாராகிலும் உதவி செய்வார்களா என்று கவனித்துக் கொண்டிருந்தார். ஆனால் யாரும் உதவி செய்யவில்லை. முடிவில் மார்டினே... அவர் தேவனை விசுவாசித்தார். ஆனால் அவர் ஒரு இராணுவ வீரர். அவரிடம் ஒரே ஒரு 'கோட்' மாத்திரம் இருந்தது. அவர் “இந்த வயோதிபன் அப்படி படுத்துகிடந்தால், குளிரில் விறைத்து மரித்து விடுவான்'' என்று சொல்லி, தன் பட்டயத்தை உருவி, அவருடைய கோட்டை இருபாதியாக வெட்டி, அந்த வயோதிப பிச்சைக்காரனை அதில் சுற்றி, ”என் சகோதரனே, சமாதானத்துடன் உறங்கு'' என்று சொல்லிவிட்டு நடந்து சென்றுவிட்டார். அன்றிரவு இராணுவ முகாமில், அவருடைய காலணிகளுக்கு அவர் மெருகேற்றிவிட்டு உறங்கச் சென்றபோது, ஒரு சத்தம் அவரை எழுப்பினது. அவர் எழுந்து பார்த்தபோது, அவருக்கு முன்னால் இயேசு. அவர் பிச்சைக்காரனைச் சுற்றின அதே கோட்டு துண்டுடன் சுற்றப்பட்டவராய் நின்று கொண்டிருந்தார். அப்படியானால் இப்படிப்பட்ட காரியங்களில் நான், என்ன செய்ய முடியும்? நான் சரியென்று அறிந்து, சரியென்று உறுதிப்பட்டு நிரூபிக்கப்பட்ட காரியங்களில் நான் என்ன செய்ய வேண்டும்; நான் என்ன செய்யமுடியும்? சபையை சுற்ற வேண்டும் - கோட்பாட்டினாலோ அல்லது ஸ்தாபனத்தினாலோ அல்ல - ஆனால் அவருடைய வார்த்தையைக் கொண்டு இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினால், இயேசு, ''இவர்களுக்கு என்ன செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்'' என்றார். 101ஜெபம் செய்வோம். கர்த்தராகிய இயேசுவே, இன்று காலை நீர் இங்கு நின்று கொண்டிருப்பீரானால், கர்த்தாவே... நீர் ஆவிக்குரிய உருவில் இங்கிருக்கிறீர் என்று நானறிவேன். ஆனால் நீர் சரீரப்பிரகாரமாக இங்கு நின்று கொண்டிருப்பீரானால் என் பொருளை நான் சிறிதளவும் கூட மாற்றிக் கொள்ளமாட்டேன் என்று நினைக்கிறேன். நான் இப்பொழுது கூறினதையே அப்பொழுதும் கூறியிருப்பேன். பரலோகப் பிதாவே, இந்த ஜனங்கள் இயற்கை உணவின்றி இங்கு உட்கார்ந்து கொண்டு களைப்புற்ற கரகரப்பான சத்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்தனர். நீர் இங்கு நின்று கொண்டிருக்க நேர்ந்தாலும், அவர்கள் இன்னும் அதிக நேரம் இங்கு தங்கியிருக்க மாட்டார்கள். ஏனெனில் நீர் இங்கிருக்கிறீர் என்று அவர்கள் விசுவாசிக்கின்றனர், ஏனெனில் அது உம்முடைய வார்த்தையாயுள்ளது. அவர்கள் உம்மை நேசிக்கின்றனர் என்று அது காண்பிக்கின்றது. கிறிஸ்துமஸ் என்னவென்று எங்களுக்கு காண்பித்து எங்களை வழிநடத்தும் பரிசுத்த ஆவியின் இந்த கிறிஸ்துமஸ் விஜயத்துக்காக நாங்கள் மிகுந்த நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். இவ்வுலகம் விழுந்து போகின்றதையும், அதன் முறைமைகள் உடைகிறதையும் நாங்கள் காண்கிறோம். எங்களுக்கு ஒரு ராஜ்யமும் ஒரு ராஜாவும் இருப்பதற்காகவும், அது அசைக்கப்பட முடியாத ராஜ்யமாக இருப்பதற்காகவும், நாங்கள் பெரு மகிழ்ச்சி உள்ளவர்களாயும் மிகுந்த நன்றியுள்ளவர்களாயும் இருக்கிறோம். உலகம் இல்லாதிருக்கும் போது, அரசியல் இல்லாதிருக்கும் போது, தேசங்கள் இல்லாதிருக்கும்போது, தேவன் தமது ராஜ்யத்தை ஸ்தாபிப்பார். நீதிமான்கள் அவருடன் கூட அரசாளுவார்கள். துன்பப்பட்டவர்கள் இனி துன்பப்பட மாட்டார்கள். 102கர்த்தாவே, இந்த கிறிஸ்துமஸ் காலத்தின் போது, அபிஷேகம் பண்ணப்பட்ட மேசியா யாரென்று புரிந்து கொள்ள எங்களுக்குதவி செய்யும். நாங்கள் புரிந்து கொள்ள உதவி செய்யும். எங்கள் சபையோரை ஆசீர்வதியும். எங்கள் பிதாவே, அவர்களுடன் கூட இருந்து, அவர்களுக்கு பரிசுத்த ஆவியினால் உண்டாகும் நீதியையும் சமாதானத்தையும் தந்தருளும். எங்கள் போதகரை ஆசீர்வதியும். கர்த்தாவே, அவரை நாங்கள் நேசிக்கிறோம். இந்த தீரமான ஊழியக்காரன் விசுவாசமுள்ளவராய் நிற்கிறார். அன்றிரவு அவர் பேசும்போது, ''எனக்கு ஏறக்குறைய அறுபது வயதாகிவிட்டது'' என்றார். அவர்களுக்கு சிறு குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் கர்த்தாவே, நீர் ஆயத்தமாயுள்ள வரைக்கும், ஒன்றுமே அவரை இங்கிருந்து எடுத்துக்கொள்ள முடியாது என்பதை அவர் நினைவு கூரட்டும். நீர் வரத்தாமதித்தால், தங்கள் பிள்ளைகள் அனைவருக்கும் விவாகமாகி தங்கள் சொந்த குடும்பங்கள் அவர்களுக்கு இருப்பதைக் காண்பதற்கு அவர் உயிர் வாழட்டும். அவருடைய விலையேறப்பெற்ற மனைவியை நீர் ஆசீர்வதியும், அவள் உமது பணிவிடைக்காரியாக இருந்து வருகிறாள். எங்கள் “மகன்”களையும் தர்மகர்த்தாக்களையும் ஆசீர்வதியும். தேவனே, பனிக்கட்டியின் வழியாகவும், வழுக்கும் சாலைகளின் வழியாகவும் நூற்றுக்கணக்கான மைல்கள் பிரயாணம் செய்து இங்கு வந்துள்ள இந்த என் நண்பர்களுக்காக இக்கிறிஸ்துமஸின்போது நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். தேவனே, இன்னும் வேறென்ன கூறுவதென்று எனக்குத் தெரியவில்லை. என் இருதயத்திலுள்ள மற்ற அனைத்தையும் நீர் வெளிப்படுத்துவீர் என்று நம்புகிறேன். தேவனே, நான் எப்பொழுதும் நீர் எங்களை வைத்துள்ள இந்த ராஜ்யத்துக்கு விசுவாசமுள்ளவனாய் இருப்பேனாக. நான் தவறானவைகளுடன் ஒப்புரவாகாதபடிக்கும் வலதுபுறம் இடதுபுறம் விலாகமலும் இருப்பேனாக. அன்று நீர் என்னுடன் “நீ வலது இடது புறம் விலாகாதிருப்பாயாக. அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய். உனக்கு வெற்றியும் உண்டாயிருக்கும்'' என்று கூறினதை நினைவு கூருகிறேன். ஒருக்கால் இவ்வுலகின் கண்களுக்கு எனக்கு வெற்றி கிடைக்காமல் இருப்பதாக தோன்றும். உலகம் என்ன நினைக்கிறதென்று எனக்கு கவலையில்லை. கர்த்தாவே, உமக்கு என்னிடமிருந்து என்ன வேண்டும் என்பதையே அறிய விரும்புகிறேன். உமது வாஞ்சையே எங்கள்... உமது சித்தமே எங்கள் வாஞ்சையாயுள்ளது. ஓ, கர்த்தாவே, உமது வாஞ்சைகளில் மிகச் சிறியதும் கூட எங்களுக்கு வாழ்நாள் முழுவதுமுள்ள கட்டளையாயிருக்கும். நாங்கள் உமது சபையாக நிற்கிறோம். 103இந்த ஆண்டில் நாங்கள் செய்த தவறுகள் அனைத்தும் எங்களுக்கு மன்னிப்பீராக. நாங்கள் எத்தனையோ இடங்களில் தவறியிருக்கக் கூடும். கர்த்தாவே, எங்களை பலப்படுத்தும். நாங்கள் கிறிஸ்துமஸைக் கொண்டாடும் இந்நேரத்தில், எங்கள் இருதயங்களை மேசியாவுக்கு - தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவருக்கு - திறந்து கொடுப்போமாக. அவர் எங்கள் வாழ்க்கையில் பிரவேசித்து, எங்களை அபிஷேகித்து, அவருடைய சித்தத்தை எங்களில் நிறைவேற்றி, அவருடைய ராஜ்யம் எங்கள் வாழ்க்கையில் நிலைவரப்படும்படி அருள்புரிவாராக. எங்களை சுகமாக ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ளும். என் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும் தீரமுள்ள என் பழைய நண்பர் சகோ. ஆர்கன்பிரைட்டை ஆசீர்வதிப்பீராக. ஓ, தேவனே, அவருடன் எவ்வளவாக நீர் இருந்து வந்திருக்கிறீர். அவருடைய இருதயம் எத்தனையோ முறை நொறுக்கப்பட்டது! ஆயினும் அவர் நித்திய ஜீவனால் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். அவருடைய மனைவியை ஆசீர்வதியும். நான் (Bud), ஃபிரட் (Fred), என்னையும் இப்பொழுது நினைவு கூருகிறேன். ஓ, தேவனே, எங்களுக்கு எவ்வளவு அருமையான ஐக்கியம் உள்ளது! எங்கள் அனைவரையும் இப்பொழுது ஆசீர்வதிக்குமாறு நாங்கள் ஜெபிக்கிறோம். எங்கள் சிறு சபையை, இந்த விலையேறப்பெற்ற ஜனங்களை ஆசீர்வதிப்பீராக. கர்த்தாவே, என்றாவது ஒரு நாள் நாங்கள்... உலகத்தின் காரியங்களைக் காணக்கூடாதவாறு எங்கள் கண்கள் சுத்தமாகி, நாங்கள் தேவனையும் அவருடைய ராஜ்யத்தை மாத்திரம் காணவும், என்றாவது ஒரு நாள் நாங்கள் குற்றமற்றவர்களாய், கற்புள்ள கன்னிகையாய் கிறிஸ்துவுக்கு முன்பாக ஒப்புவிக்கப்படவும், அவருக்கு முன்பாக வரப்போகும் அந்த மகத்தான சபையின் ஒரு பாகமாக இருக்கவும் அருள் புரிவீராக! 104உமது ராஜ்யத்தை பூமியில் நிலைநாட்டப்போகும் அந்த காலத்துக்காக நாங்கள் காத்திருப்போம். அங்கே காணக்கூடிய ஜனங்கள் காணக்கூடிய வீடுகளில் தங்கியிருப்பார்கள். அங்கே அவர்கள் நாட்டுகிறதும் வேறொருவர் கனி புசிக்கிறதுமாயிருப்பதில்லை. அவர்கள் நித்திய காலமாக ஜீவிப்பார்கள். அதுவரைக்கும் நாங்கள் மலையின் மேல் வைக்கப்பட்ட விளக்கைப்போல், எங்களைச் சுற்றிலும் உள்ளவர்களுக்கு, கிறிஸ்துவின் இரத்தத்தினால் பரிசுத்தமாக்கப்பட்ட எங்கள் வாழ்க்கையின் மூலம் வெளிச்சம் தர அருள்புரிவீராக, பிதாவே. இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். கர்த்தாவே, நாங்கள் வியாதியஸ்தருக்காக ஜெபித்து, அவர்கள் மேல் எங்கள் கைகளை வைத்து, எங்களை அவர்களுடன் இணைத்துக் கொண்டபிறகு, இப்பொழுது என் கைகளை இந்த உறுமால்களின் மேல் வைத்து தேவனுடன் என் ஜெபத்தை இணைக்கிறேன். தேவனே, இந்த உறுமால்களும் இந்த ஜனங்களும் இங்குள்ளபோது, இந்த உறுமால்கள் யாருக்கெல்லாம் பிரதிநிதிகளாய் உள்ளனவோ, அவர்கள் ஒவ்வொருவரையும் நீர் சுகமாக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன். பிதாவே வரப்போகும் ஆண்டில் அவர்கள் சுகத்தையும் பெலனையும் பெறுவார்களாக. தேவனுடைய கனத்துக்கும் மகிமைக்கும், நாங்கள் இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 105நான் அவரை நேசிக்கிறேன் நான் அவரை நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்ததால் (சகோதரியே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக...?... உம்மை ஆசீர்வதிப்பாராக, சகோதரன்...?...) சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் இதை நாம் மறுபடியும் பாடும் போது, நம்மைச் சுற்றியுள்ளயாராகிலும் ஒருவருடன் நாம் கை குலுக்குவோம். உட்கார்ந்து கொண்டிருங்கள். நான் அவரை நேசிக்கிறேன் நான் அவரை நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் இப்பொழுது அவரிடம் நமது கரங்களையுயர்த்துவோம். நான் அவரை நேசிக்கிறேன் (உரக்கப் பாடுங்கள்) நான் அவரை நேசிக்கிறேன் (அப்படித்தான்) முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் இந்த வார்த்தைகளை நாம் ஒருமித்து கூறுவோம். எல்லோரும் சேர்ந்து கூறுங்கள். நாம் அசைக்கப்பட முடியாத ('நாம் அசைக்கப்பட முடியாத' ) ராஜ்யத்தைப் பெறுகிறோம் (''ராஜ்யத்தைப் பெறுகிறோம்''). நான் அவரை நேசிக்கிறேன் நான் அவரை நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் 106இப்பொழுது எழுந்து நிற்போம். நமது கரங்களையும் இருதயங்களையும் நன்றியுடன் தேவனிடத்தில் உயர்த்துங்கள். உண்மையாக நமது அனைவருடைய இருதயங்களையும் “நான் அவரை நேசிக்கிறேன்'' என்று இந்த கிறிஸ்துமஸ் காலத்தின் போது அவருக்குத் தெரியப்படுத்துங்கள். இதைத் தொடர்ந்து உடனே ஞானஸ்நான ஆராதனை இருக்கும். போக வேண்டிய உங்களுக்கு; நீங்கள் இங்கு வந்திருந்ததனால் உங்களுக்கு நன்றி செலுத்துகிறோம். நீங்கள் என்றென்றைக்கும் அசைக்கப்பட முடியாத அந்த ராஜ்யத்தில் இருப்பீர்களாக. சற்று நேரம் நாம் ஜெபத்துக்காக தலைவணங்கியிருக்கும் போது, நமது விலையேறப்பெற்ற சகோ. ஆர்கன் பிரைட் இங்கு வந்து ஜெபம் செய்து சபையோரை அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப் போகின்றேன்.